அலைகிறது மனம்.....
எப்பவாவதுதான் கட்டுப்படுகிறது
அதிலும்
ஆயிரம் நிபந்தனைகளைக்
கையொப்பமிட்டு வாங்கிக்
கொள்கிறது
யாருமறியாமல்
எப்பவாவது என்பதுகூட
அப்படிப் பழகிக்கொள்ள
வைத்திருக்கிறது
மனம்...
/////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
அலைகிற மனத்தினுர்டாக,,,,
ஒவ்வொரு
மழைக்காலத்திலும்
அப்பா பழைய எங்கள் ஓட்டுவீட்டில்
ஒழுகுகிற இடங்கள்தோறும்
பாத்திரம் நகர்த்தி
விடியவிடிய துர்ங்காமலும்
மழைவிட்டதும்
துர்ங்க எண்ணும்போது
விடிந்துவிடுவதுமான
தருணங்கள்
அப்பா இறந்தபின் கிடைத்த
சம்பள நிலுவையில் அம்மா
ஓட்டுவீட்டை மாடிவீடாக்கி
மழையைத் தடுத்தபோதிலும்
மனதைத் தடுக்கமுடியவில்லை
மாடிவீட்டைப் பார்க்கும்போதெல்லாம்...
000000000000000000
இராஜராஜசோழன்
சதயவிழாக் கொண்டாட்டத்தைவிட
விழாவிற்காக
அவனைத் தங்கள் ஜாதியென்று
சுவரொட்டிகள் ஒட்டி
கொண்டாடும் அட்டகாசம்
அதைவிட பெரிய விழாவாக....
0000000000000000000000000
கொட்டித் தீர்க்கிற மழையில்
எங்கும் நகரவிடாமல்
இருக்கிற தருணங்களில்
மனதில் கொட்டித் தீர்க்கிறது
பெருமழையாகத் தடுக்கமுடியாமல்
சாலையில் ஓடும்
108 ன் ஒலி காதுக்குள்
ஓடும்போது....
00000000000000000000000000000000000000000000000000000000
செய்திதான்
தேளாகக் கொட்டுகிறது
நெடியேறி நிற்கிறது
மழையிருட்டில்
அறுந்துவிழுந்த மின்சாரக்
கம்பிமிதித்து அலறிய
30 வயது இளையபிள்ளையையும்
பிள்ளையலறல் கேட்டு
ஓடி வந்த 50 வயது,,,,,
விழுந்த மகனைத் துர்க்கிய
வேளையில் அவரும் துக்கமானதை..
இருபிணங்களும்
எடுததுச் செல்லப்பட்டுவிட்டன
என்கிற செய்திதான்,,,
கண்ணெதிரில் வீட்டருகில்
கணவரும் கண்வளர்ந்த பிள்ளையும்
கரைவார்கள் காலக்கணக்கில்
என்றெதிர்பாராத அந்த தங்கைக்கு
யர்ர் அமைதியொளி ஏற்றுவர்...
மாட்சிக்குரியோரே
ஆட்சிக்குரியோரே
மழைவராப் பகலில்
அறுந்துவிழா பழுதுநீக்கிட
ஆவன செய்வீர் அல்லலுயிர்
காப்பீர்...கைகூப்பி வேண்டுகிறோம்
வேறென்ன செய்திடவியலும்?
0000000000000000000000000000000000000000000000000000000000
Commonwealth
Human Health
ஆகட்டும்,,,
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
மழைவராப் பகலில்
ReplyDeleteஅறுந்துவிழா பழுதுநீக்கிட
ஆவன செய்வீர் அல்லலுயிர்
காப்பீர்...கைகூப்பி வேண்டுகிறோம்
வேறென்ன செய்திட இயலும்?
பொறுப்பு அற்றவர்களுக்குப் புரியுமா
உண்மையின் வலி!..
அரசாண்ட மன்னன்
ReplyDeleteஇராஜராஜ சோழனும்
கப்பல் ஓட்டிய தமிழன்
வ.உ.சிதம்பரனாரும் கூட
சாதி அரசியலில்
அடங்கிவிட்டனர்.
இது அப்பெரியோர்களை
அவமதிக்கும் செயல்
என்றே எண்ணுகின்றேன்.
என்று தணியும்
எங்கள் சாதியின் மோகம்
மனதில் இத்தனை கவிதைகளை விளைக்க முடியுமானால், மழையே, நீ வாழ்க! (அதே மாடிவீட்டில் தான் இப்போது குடியிருக்கிறீர்களா?)
ReplyDeleteசுடுகின்ற நிஜங்கள்..!
ReplyDeleteசிந்திக்க வேண்டிய... உணர வேண்டிய கேள்விகள் ஐயா...
ReplyDeleteஅலைகிற மனதினூடாக - கனக்கிறது. அப்பாவின் அன்பு எத்தனைப் பெரிது!
ReplyDeleteசெய்திதான் - அருமை..கையேந்திக் கேட்பதைக் கேட்கவேண்டியவர் கேட்கவேண்டும்..
அனைத்துக் கவிதைகளும் அருமை.
/இராஜராஜசோழன்
ReplyDeleteசதயவிழாக் கொண்டாட்டத்தைவிட
விழாவிற்காக
அவனைத் தங்கள் ஜாதியென்று
சுவரொட்டிகள் ஒட்டி
கொண்டாடும் அட்டகாசம்
அதைவிட பெரிய விழாவாக./ ஒரு புறம் ஜாதிகளை ஒழிக்க வேண்டுமென்று கூறுவோரே ஜாதிப் பித்துடன் அலைவதுதான் கொடுமை. , அப்பாவின் நினைவுகளால் அலைக்கழிக்கபடுவோர் இல்லாதவரே இல்லை என்று தோன்றுகிறது....அலையும் மனத்தை கவிதை வடிகாலில் கொட்டுவது அழகு. பாராட்டுக்கள்.
அனைத்துமே அருமை....
ReplyDeleteஎன் இனிய ஹரணி அய்யாவிற்கு., 108 ஆம்புலன்சு கடந்து செல்லும்போதெல்லாம் என் மனது ஆண்டவனை வேண்டும்...யாராக இருந்தாலும் அவர்கள் நலம் பெறவேண்டும் என்று. தங்கள் கவிதையை படித்தவுடன் என் கண்கள் பொழிந்தன கண்ணீரை.
ReplyDeleteவலைச்சர அறிமுகத்திற்கு இனிய வாழ்த்துகள்..
ReplyDeletehttp://blogintamil.blogspot.in/2013/12/blog-post_17.html
இந்த முட்டாள் மக்கள் தங்களை சாதிதலைவர்கள் ஆக்கி விடுவார்கள் என்று நினைத்தா விடுதலைக்குப் போராடினார்கள் ?
ReplyDeleteவணக்கம். இன்றைய வலைச்சரத்தில் தங்களுடைய தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நன்றி.
ReplyDeletehttp://blogintamil.blogspot.com.au/2014/01/blog-post_22.html
வலைச்சரத்தில் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ள தங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்..
ReplyDeletehttp://blogintamil.blogspot.com/2014/01/blog-post_22.html
//மனதைத் தடுக்கமுடியவில்லை மாடிவீட்டைப்
ReplyDeleteபார்க்கும்போதெல்லாம்...//
ஆமாம்... அப்பாவின் நினைவுகளை தடுக்க முடிவதில்லைதான் எப்போதுமே!
நல்ல கவிதை!!
அப்பா இறந்தபின் கிடைத்த
ReplyDeleteசம்பள நிலுவையில் அம்மா
ஓட்டுவீட்டை மாடிவீடாக்கி
மழையைத் தடுத்தபோதிலும்
மனதைத் தடுக்கமுடியவில்லை
மாடிவீட்டைப் பார்க்கும்போதெல்லாம்...//
நெகிழ வைத்த கவிதை.
வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்.
தங்களின் தளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.
ReplyDeleteஅன்பு வாழ்த்துகள்.
மேலும் விவரங்களுக்கு கீழ் உள்ள இணைப்பைச் சொடுக்கவும் நன்றி.
வலைச்சர தள இணைப்பு : http://blogintamil.blogspot.com/2014/02/blog-post_15.html
வணக்கம்
ReplyDeleteஇன்று தங்களின் தளம் வலைசரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நூறு நாட்கள் ஆகிவிட்டது பேராசிரியரே, நீங்கள் வலைப்பூ எழுதி! என்னதான் தேர்வு நேரமாக இருந்தாலும், எங்களுக்காக ஒரே ஒருமணி நேரம் ஒதுக்கி, வலைப்பூவில் ஏதேனும் எழுதக்கூடாதா?
ReplyDeleteAnbulla chellappa ayya avarkalukku
ReplyDeletevanakkam. Viravil varukireen. Thankalin anbirkku mikuntha nanrikal.