அப்பா
இறந்துபோனபின்
ஒரு மாலையில்
பிள்ளை கேட்டான்
நீ எப்போ
தாத்தா ஆவே?
இறந்துபோனபின்
ஒரு மாலையில்
பிள்ளை கேட்டான்
நீ எப்போ
தாத்தா ஆவே?
ஏனென்றேன்
நான அப்பா
ஆவணுமே
என்றான்.
இயல்பாய் கேட்டான்
பிள்ளையென்றாலும்
உள்ளுக்குள்
பெருக்கெடுக்கிறது
இயல்பற்ற
பேரச்சம்...
(நன்றி விகடன்.... 06.11.2013)
நான அப்பா
ஆவணுமே
என்றான்.
இயல்பாய் கேட்டான்
பிள்ளையென்றாலும்
உள்ளுக்குள்
பெருக்கெடுக்கிறது
இயல்பற்ற
பேரச்சம்...
(நன்றி விகடன்.... 06.11.2013)
முதல் திதி என்பதால்
முன்கூட்டியே
வந்திருந்தார்கள்.
பெரியக்கா
நடு அக்கா
சின்ன அக்கா
கடைசித் தம்பி
அவரவர் குடும்பங்களுடன்
பணியோய்வு பெற்றதிலிருந்து
பாடையேறும்வரை பராமரித்து
நின்ற பொழுதெல்லாம் திதிநாளில்
மேலும் துன்பத் தேள்
கொட்டியதாய்...
புகைப்படத்தில் அப்பா
சிரித்தபடியே...
எல்லாம் முடிந்து அவரவர்
ஊருக்குத் திரும்புமுன்
சொல்லிவிட்டுப்
போனார்கள்..
கடைசிவரைக்கும் அப்பா
அவனுக்குத்தான் எல்லாம்
செஞ்சாரு பென்ஷன் உள்பட...
வீட்டுக்காக வாங்கிய
வங்கிக்கடன்
அப்பா மருத்துவமனை
செலவுக்காக வாங்கிய
கூட்டுறவுச் சங்கக் கடன்
பிஎப் கடன் என
எல்லாக் கடன்களும் போக
பிடித்தமாக வருவது
பிடித்தமில்லை என்பதை
எப்படியுரைக்கமுடியும்
என மௌனித்திருக்க
மௌனம் சம்மதம்
என்று
போகிறார்கள்...
புகைப்படத்தில்
அப்பா சிரித்தபடியே...
(நன்றி விகடன்.... 13.11.2013)
விகடனில் தங்கள் கவிதை வெளியாகியுள்ளதற்கு என் அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
ReplyDeleteஇங்கு இந்தப்பதிவினில் கவிதையைப் படிக்கும்படியாகவே இல்லை. எழுத்துக்கள் எதுவும் தமிழினில் இல்லை. உடனே சரி செய்யவும், ஐயா.
அடடே, font problem ! தயவு செய்து மீண்டும் எழுதிவிடுங்கள். வேறு வழியில்லை.
ReplyDeleteஇதுதான் இன்றைய வாழ்வியல் யதார்த்தம்.
ReplyDeleteஅன்புள்ள
ReplyDeleteவணக்கம்.
சரி செயதுவிட்டேன்.
என்னால் ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிக்கவும்.
நன்றி.
இரண்டுமே மிகவும் யதார்த்தமான கவிதைகள். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
ReplyDeleteமனதைத் தொட்ட கவிதை..விகடனில் வெளிவந்தமைக்கு வாழ்த்துகள்!
ReplyDeleteஇரண்டும் சிறப்பான படைப்புக்கள்! அருமை! விகடனில் வெளியானதற்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅருமையான படைப்புகள்..பாராட்டுக்கள்..!
ReplyDeleteவிகடனில் படித்ததும் எல்லோரிடத்தும் பெருமை அடித்துக் கொண்டேன். இவர் எனக்கு பழக்கம் என்று.
ReplyDeleteஎன் கவிதை இதழில் வந்தது போல் ஒரு மகிழ்ச்சி எனக்கு.
இரண்டாவது கவிதை அபாரம். துக்க வீட்டில் சொல்லிக்கொள்ளாமல் போவது தான் மரபு. ஆனால் செத்துப் போனவர் தனக்கு எதுவுமே தரவில்லை என்பதைச் சொல்லாமல் போகிறவர்கள் அபூர்வமே. நடைமுறை வாழ்க்கையில் நிலவும் காட்சியைப் படமாக்கி இருக்கிறீர்கள். வாழ்க! - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்) சென்னை.
ReplyDeleteவிகடனில் கவிதை வெளியாகியுள்ளதற்கு இனிய நல்வாழ்த்துகள்.
ReplyDeleteஇரண்டும் அருமை!
ReplyDeleteஇரண்டுமே அருமை. விகடனில் வெளி வந்தமைக்கு வாழ்த்துகள்...
ReplyDelete