இலையுதிர்
மரங்களில் எல்லாம்
உதிரிலைகளுக்காக
வருத்தத்தில்
மீண்டும்
கிளைக்க வைக்கிறது
இலைகளை
மரம்
நம்பிக்கை
குலையாமல்..
===================
இம்முறை
எலிப்பொறியில்
அணில்
கடவுளின் நீதி
மெதுவாயும்
நிதானமாயும்...
////////////////////////////// //////////
முன்பாக
இருந்தால
தந்தி அனுப்பி
இருப்பார்கள்..
சறறு நலமாக
இருந்திருந்தால்
யாரைவிட்டாவது
ஒரு கடிதம்
எழுதப்பட்டு வந்து
சேர்ந்திருக்கும்..
சாகிற தருணங்களில்
யாருககும் யாரிடமேனும்
எதையேனும் சொல்ல
எதையேனும் சொல்ல
ஆசையிருக்கிறது
கேட்பதற்கும்கூட
ஆசையிருக்கிறது
இறந்துபோன ஆத்மாவிற்கு
செய்ய மறந்ததை
யாருமறியாமல்
மறைப்பதற்கு...
=======================
செம்பருத்திச் செடியில்
சில பட்டாம்பூச்சிகளைக்
காணமுடியும்...
அரநெல்லி மரத்தில்
எப்போதும் சிட்டுக்குருவிகளும்
தவிட்டுக்குருவிகளும்
தவறாது தரிசனம் தரும்.
நாரத்தைச் செடியின்
முட்களுக்கிடையே
மனததைப் பதைபதைக்க
வைத்து ஊஞ்சலாடும்
தேன்சிட்டுக்கள்
வேப்பமரத்தில்
சில பச்சைக்கிளிகளும்
நிறைய காகங்களும்
காணக் கிடைக்கும்..
என்றாலும்
வெட்டப்பட்டதை
விடுத்து மீந்திருக்கும்
மரங்களைவிடப்
பறவைகள்
குறைந்தே போய்விட்டன
மருத்துவன்
கெடுவைத்துவிட்ட
ஓர்
இறுதி நோயாளியைப்
போல...
===========================
(நன்றி. கணையாழி நவம்பர் 2013)
நிதர்சனமான உண்மையில் - நெஞ்சம் கனக்கின்றது!..
ReplyDelete
ReplyDeleteநம்பிக்கை குலையாமல் மரம் மனதை பசுமையால் போர்த்துகிறது ,,,.
"சாகிற தருணங்களில்// யாருககும் யாரிடமேனும்// எதையேனும் சொல்ல// ஆசையிருக்கிறது''...... எனபது எவ்வளவு ஆழ்ந்த உண்மை! நல்ல கவிதைகள். - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை
ReplyDeleteஆழமான சிந்தனையுடன் கூடிய
ReplyDeleteஅற்புதமான கவிதைகள்
பதிவாக்கித் தந்தமைக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
எழுத்துக்களும் எண்ணங்களும் எங்கெல்லாம் , எதையெல்லாம் கவனிக்கிறது.? வாழ்த்துக்கள்.
ReplyDeleteமனதிலிருந்து பிறக்கும் கவிதைகள் மனதை சுலபமாய் தொட்டு விடுகின்றன
ReplyDeleteசிந்தனைத் துளிகள் சிறப்பு! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅருமையான கவிதைகள்..... பாராட்டுகள் ஹரணி ஜி!
ReplyDeleteஐயா! தங்கள் இக்கவிதைகளை கணையாழியில் படித்தேன். சிறப்பாக இருந்தது. பாராட்டுக்கள் .
ReplyDelete