இந்த வாரம் விகடனில் வந்த கவிதை...
பூர்வீக
வீடு
சிதைந்துகொண்டிருந்த்து...
விரைவில்
மாற்றிவிடுங்கள்
என்று
சொல்லிவிட்டுப்
போனார்
பெரியப்பா...
இடித்துவிட்டு
மனைபிரித்து
பாகம்
பிரித்துக்கொள்ளலாம்
என்பது
சித்தப்பாவின் கருத்து..
முன்னோர்கள்
வாழ்ந்த வீடு
என்றாலும்
இப்போது வாழ
முடியாது...
த்த்துவம் சொன்னார்
மாமா..
மனையாகப்
போட்டால்
முன்மனை
நமக்குதான்
பேசிக்கொண்டார்கள்
மருமகள்கள்
எப்படியிருந்தோம்
தெரியுமா
என்றே
அழுதழுது நின்றார் அம்மா..
போவோர்
வருவோர் ஆளுக்கொரு
கருத்து சொன்னார்..
நாலைந்து
ஓணான்கள்
புணர்ந்து
நின்றன
பூனையொன்று
நாலைந்து
குட்டிகளை
ஈந்திருந்த்து
விரிந்த
சுவரிடுக்குகளில்
கொஞ்சம்
பூச்சிகளும்
சில
அணில்களும் அவ்வப்போது
பட்டாம்பூச்சிகளும்
வந்துபோயின
வீட்டின்
மேலே ஒரு
செடி
முளைத்திருந்த்து..
ஆனாலும்
பூர்வீக
வீடு
சிதைந்துகொண்டிருந்த்து..
வாழ்ந்த
சிலவற்றின்
நினைவுகளோடும்
வாழும்
சிலவற்றின்
கனவுகளோடும்.....
நன்றி ஆன்ந்த விகடன்.
ஆஹா! ஆனந்த விகடன்ல கவிதையா?? அட்டகாசம்!!! வாழ்த்துக்கள் அய்யா!
ReplyDeleteஐயா . அருமை. இந்தக் கவிதையை பூர்வீக வீட்டுக்கு மட்டும் உரித்தன்று, வாழ்ந்து கொண்டிருக்கும் சில பூர்வீக மனிதர்களுக்கும் பொருந்தும்” வாழ்ந்த சிலவற்றின் நினைவுகளோடும் வாழும் சிலவற்றின் கனவுகளோடும்” ரசித்தேன்
ReplyDeleteகவிதையின் உணர்வுகளை அப்படியே பிரதிபலிக்கிறது அந்தப் படம் . வாழ்த்துக்கள் ஐயா
ReplyDeleteஎங்கள் குடும்பத்தின் பூர்வீக வீடு ஒன்று - பங்காளிகளின் பிரச்னையால் - இப்படியாகிப் போனது.
ReplyDeleteமறக்க முடியவில்லை.
ஆஹா மிக அருமை!! வாழ்த்துக்கள் ஐயா!
ReplyDelete
ReplyDeleteவாழ்ந்த சிலவற்றின்
நினைவுகளோடும்
வாழும் சிலவற்றின்
கனவுகளோடும்.....
மனக்கண்களில் நிறைந்துவழியும் ததும்பல்கள்..
வாழ்த்துகள் ! கவிதை அருமை !
ReplyDeleteகவிதை அருமை! அந்தப்படம் அப்படியே கண் முன் நிற்கிறது! வாழ்த்துக்கள்!
ReplyDeleteகவிதையும், வீடும், எனது வீட்டினை நினைவுபடுத்துகிறது மாமா, என் அப்பாவும், தம்பியும் வாழ்ந்த எங்கள் வீட்டை பிரிக்கப்போகிறேன் மாமா, ஊரில் குரங்குகளின் சேட்டை அதிகமாக இருக்கிறது, ஓட்டினை சிதைக்கின்றன... அதனால் பிரித்து விடலாம் என முடிவு செய்துள்ளேன்... கண்ணீர் வருகிறது... இந்த கவிதையும் வீடும் என் வீட்டினை நிலைனிறுத்துவதாக கருதுகிறேன் மாமா.... நன்றி....
ReplyDeleteமகிழ்ச்சி.
ReplyDeleteவாழ்த்துகள்.
அருமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅருமையான படைப்பு
ReplyDeleteபூர்வீக வீடு
திறக்கப்படவில்லை
வாய்தா ...!
நெஞ்சில் நிற்கிறது..!
ReplyDeleteஅன்புடையீர்..
ReplyDeleteவிருது ஒன்றினைத் தங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.
இணைப்பு - http://thanjavur14.blogspot.com/2014/09/blog-post84-blog-award.html
மிக அருமையான கவிதை. பூர்விக வீடு என்பது வெறும் மணலும் செங்கலும் அல்ல. ரத்தமும் சதையும் ஆனது.
ReplyDeleteஇன்றைய தினமலரின் வாரமலரில் டி.வி.ஆர் நினைவு சிறுகதைப் போட்டியில் தாங்கள் முதல் பரிசை வென்றது கண்டு மகிழ்வுற்றேன். ' அவளும் அம்மா தான்!' சிறுகதை வித்தியாசமாய் அருமையாக இருந்தது! மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்! இனிய பாராட்டுக்கள்!!
ReplyDeleteஅன்புள்ள ஹிஷாலீ
ReplyDeleteவணக்கம். தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள்.