Sunday, December 26, 2010
தளும்புதல்...
திசம்பர் 26 ஆண்டு 2004.
ஆண்டவன் அமைதியாக இல்லை.
ஆரவாரமாக இருந்த உலகை வேறு உலகிற்கு மாற்றினான்.
கடலாய் பெருகியோடியது கண்ணீர்.
கடலாய் பொங்கியது உயிர் குடித்தது.
ஆழிப்பேரலை.
என்ன தவறு யார் செய்தார்கள்?
ஆண்டவனுக்கு ஏன் இத்தனை உக்கிரம்?
இத்தனை ருத்ர தாண்டவம்?
மனசுக்குள் இன்றைக்கும் அதை நினைத்தால் வேதனை நெருப்பாகிறது.
அத்தனை ஆன்மாக்களுக்கும் என்னுடைய கண்ணீர்த்துளிகள் போதாது.
ஆனாலும் என் கண்ணீர்த்துளிகளோடு தளும்புகிறேன்.
அவர்கள் ஆன்மா அமைதி கொள்ளட்டும்.
அவர்களைப் பிரிந்தவர்கள் அமைதி கொள்ளட்டும்.
ஆண்டவனும் அமைதி கொள்ளட்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
இயற்கையை நாம் சீண்டிப் பார்த்தால், அவ்வளவு தான்..கவித அருமை!
ReplyDeleteஅன்புடன்,
ஆர்.ஆர்.ஆர்.
https://twitter.com/sridar57#
தமிழன் வீதி ம.பா.அவர்களும் இந்த நாளை நினைவு கூர்ந்து எழுதியிருக்கிறார்.எல்லவற்றையும் மறக்கும் குணமுள்ள நம்மில் பெரும் பாதிப்புக்கு ஆளாகவிட்டாலும், பாதிக்கப் பட்டவரை நினைவு கூர்ந்து வருந்துவது, மானுடம் இன்னும் வாழ்கிறது,என்பதைக் காட்டுகிறது.தளும்பும் கண்களுடன்,நானும் உங்களுடன்.
ReplyDeleteஇயற்கையின் சீற்றமும், அதிகமாய் சீறார்களையும், கரையோர மக்களையும் தான் காவு கொண்டது. சுனாமில் இழந்தவர்களுக்கு ஆதரவாய் வந்த பணத்தைக்கூட சூறையாடிய முதலைகள் இன்னும் வசதியாய்தான் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இயற்கையும் இன்று எளியவர்களுக்கு எதிரியாய் தானா!
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஉட்கார்ந்து பார்த்துக் கொண்டே இருக்கிறேன் ஹரணி.அலைகள் கரையைத் தொட்டுத் திரும்பியபடி இருக்கின்றன.
ReplyDeleteமறுபடியும் மீனவக்குடும்பங்கள் கடலுக்குள் செல்லவும் மீனோடோ வலையோடோ திரும்பவும் திரும்புகிறார்கள்.அவர்கள் அலையை நம்மைப் போல் இப்போதெல்லாம் பார்ப்பதில்லை.
இது வருத்தமாக இருக்கிறது.
கடலன்னை என்று உரிமையாய் சொந்தம் கொண்டாடிய மனிதர்களுக்கு எதிர்பாராத நிகழ்வு.
ReplyDeleteஇயற்கையும் கூட எளியவர்களிடம்தான் விளையாடுகிறது.
ஆம் ஐயா, ஆண்டவனும் அமைதி கொள்ளட்டும். இது போன்ற ஆரவாரம் இனியும் ஏற்படுத்தாது...
ReplyDeleteஆழ்ந்த இரங்கல்..
நன்றி ஆர்.ஆர்.ஆர்.ஐயா.
ReplyDeleteநன்றி ஐயா தங்களின் தளும்பலுக்கும்.
நன்றி வாசன். தங்கள் உணர்வு உண்மைதான் வாசன்.
ஆம் சுந்தர்ஜி. தாய் தண்டித்ததாய் நினைத்துக்
கொள்கிறார்கள்.அதனால் மறுபடியும் தாயிடம் தஞ்சம் கொள்கிறார்கள். வாழ்ந்தாகவேண்டுமே. வயிறு பசிக்குமே.நன்றி சுந்தர்ஜி.
நன்றி ரிஷபன். எல்லாமுமே எளியவர்களிடம்தான் தங்கள் எல்லா பரிசோதனைகளையும் நிகழ்த்திக்கொள்கின்றன.
நன்றி ஆதிரா.
\\\ஆண்டவனும் அமைதி கொள்ளட்டும்.///
ReplyDeleteநிச்சயமாய் ஆண்டவனுக்கும் அன்று அமைதி இருந்திருக்காது.நானும் உங்களுடன் பிரார்த்தனையில்.
நன்றி சிவகுமாரன்.
ReplyDeleteஅன்று ஒரு கிராம முகாமில் இருந்தேன்.புது சூழல். மீண்டும் மீண்டும் தொலைக்காட்சியில் தோன்றிய அலைகள், குரல்கள், கதறல்கள், அவலம். மறக்க முடியவில்லை.துயருற்ற ஆத்மாக்கள் அமைதி பெறட்டும் என்ற உங்கள் வார்த்தைகளை நானும் சொல்லிக் கொள்கிறேன் வலியோடு.
ReplyDeleteநன்றி சைக்கிள்.
ReplyDeleteஎத்தனை வருடங்கள் போனாலும் மறந்து விடவே முடியாத மிகப் பெரிய துயரம் அது... நினைந்து கண்ணீர் விடும் உங்களுடன் என் கண்ணீர் துளிகளும்.....
ReplyDeleteநன்றி கிருஷ்ணப்ரியா தங்களின் இனிய வருகைக்கும் கண்ணீர்த்துளிகளுக்கும்.
ReplyDelete