.
இன்று தைப்பூசம் முருகப் பெருமானை நினைந்து வழிபடும் சிறப்புத் திருநாள் இது.இந்நாளில் முருகப்பெருமானைத் தனது குருவாகக் கொண்டு வாழ்ந்து மறைந்த அருளாளர் வடலுர்ர் இராமலிங்க சுவாமிகள். அருளாளர் பற்றிய சிறு அறிமுகமே இப்பதிவு.
தமிழ் மண்புலம் செய்த தவப்பயனால் சரியாக நுர்ற்றைம்பத்தாறு ஆண்டுகளுக்கு முன்னே தென்னார்க்காடு மாவட்டம் சிதம்பரத்திற்கருகில் உள்ள மருதுர்ரில் கருணீக மரபில் இராமையா பிள்ளைக்கும் சின்னம்மையார்க்கும் மகனாக அவதரித்தவர். சகோதரர் சபாபதிப் பிள்ளையால் வளர்க்கப்பெற்றவர். செந்தமிழ்க் கடவுளாகிய முருகபெருமானது திருவருட்காட்சி இளமையிலேயே கிடைத்தது. எனவே முருகனைத் தனது குருவாகக் கொண்டார். உலகெங்கும் நீக்கமற எல்லாவற்றிலும் இறைவன் சுடர்விட்டு விளங்கும் ஜோதியாக இருக்கிறார் என்று உணர்த்தியவர்.
சாதி மத வேறுபாடு இல்லாமல் எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் காட்டியவர் வள்ளலார். சமயத்தாலும் சாதியாலும் விளையும் தீங்குகளைக் களைய சீர்திருத்தம் கண்டவர்.
ஏழைகள் தொடங்கி எல்லா மக்களும் அடையும் இன்னல்களைப் போக்குதற்கென திருவுளங்கொண்டு உயர்ந்த நோக்குடன் சமரச சுத்த சன்மார்க்க நெறியை வகுத்தார். இந்நெறிக்கிணங்க இவற்றைப் பரப்ப வடலுர்ரில் சன்மார்க்க சங்கம். சத்திய தருமச்சாலை, சத்திய ஞான சபை எனும் மூன்று அருள் நிலையங்களை நிறுவி தொண்டுசெய்த பெரும் ஞானி.
தனது பரந்துபட்ட இறை உள்ளத்தால் அருளிச் செய்தவையே திருவருட்பா எனும் அரிய பொக்கிஷம். ஆறுதிருமுறைகளாக 5818 திருப்பாடல்களாக அருளிச் சென்றிருக்கிறார். பல்வேறு சமயங்களில் வள்ளலாரால் கடிதமாகவும் சிறப்புப் பாயிரமாகவும் தனிப்பாடல்களாகவும் எழுதப்பெற்றவை இப் பாடல்கள்.
1979 ஆம் ஆண்டு தொடங்கி 1989 வரையில் இத்தொகுதிகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. இதற்கு அருமையான உரையை எழுதியவர் உரைவேந்தர் ஔவை சு.துரைசாமிப் பிள்ளையவர்கள்.
ஆன்மநேய ஒருமைப்பாட்டையும் சாகாக் கல்வியையும் வலியுறுத்திய அருளாளர் வள்ளலார். பசி, பிணி, பகை இவற்றை நீக்கவே பாடுபட்டார். அதனால்தான் வடலுர்ரில் வயிறு என்றழைக்கப்படும் சத்திய தருமச் சாலையையும் சிரசு என்றழைக்கப்படும் சத்திய ஞான சபையையும் நிறுவித் தொண்டாற்றினார்.
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் மனம் வாடினேன் என்று உயிரிரக்கம் காட்டியவர். இன்று வடலுர்ர் ஒளிவெள்ளம் கொண்டிருக்கும். ஒளிப்பிழம்பு அருளாளரை நினைந்து போற்றுவோம். இன்னொரு சந்தர்ப்பத்தில் இவரைப் பற்றிய சுவையான தகவல்களுடன் பகிர்வேன். அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை.
தமிழின் தத்துவ மரபுக்கும் ஆன்மீக சிந்தனைக்கும் பெரும் பாலமாயிருந்தவர் வள்ளலார்.
ReplyDeleteவழக்கமான மரபு சார்ந்த பின்பற்றுதலகளில் மாறுதல் கொண்டுவந்த ஜோதிலிங்கம் வள்ளலார்.
இவரின் அன்பு பூசப்பட்ட விடாப்பிடியான பல கருத்துக்களில் எனக்கு ஆச்சர்யம் உண்டு.
காந்தியின் பல கருத்துக்களில் வள்ளலாரின் சாயல் எனக்குத் தெரியும்.
வள்ளலாரை நினைவு கூர்ந்த ஹரணிக்கு நன்றியும் பாராட்டுக்களும்.
எனது 156 வருஷத்துக்கு முன்னாடி கடவுள பார்த்தாரா?????????????????????
ReplyDeleteமிகுந்த நன்றிகள் சுந்தர்ஜி.
ReplyDeleteஅப்படித்தான் வரலாறு சொல்கிறது நாகா. ஆனாலும் கடவுள் நம்பிக்கையுள்ள எனக்கு அதில் முழுக்க உடன்பாடே. உங்களைப் போன்றோர் வள்ளலாரை ஒருமுறையேனும் வாசித்துவிடவேண்டும். அவரின் சிந்தனைகள் மிக உயர்ந்தவை.
ReplyDeleteதன் பசிக்காய், ஓடித்திரியும் கோழிகளை தீயால் வாட்டி புசிக்கும் மனிதரிடையே,
ReplyDeleteவாடிய பயிரை கண்டே போதெல்லாம் வாடிய மனித தெய்வம். பசி தீ அணைக்க அணையா அடுப்புத்தீ ஏற்றிய வள்ளலார் என்ற வள்ளல். ஆதிக்க தாக்கத்தின் தொடர் சூழ்ச்சியால், கடலில் சங்கமிக்க வேண்டிய கங்கை, வைகையாய்...
வள்ளலார் பற்றியப் பகிர்வுக்கு நன்றி. மனித நேயத்தையும் கடவுள் பக்தியையும் ஒருங்கிணைத்தார்
ReplyDeleteExactly. Thanks LK.
ReplyDeleteமனிதநேயம் சொன்ன வள்ளலார் இறைவனைக் கண்டதில் ஆச்சர்யமென்ன?!
ReplyDeleteவள்ளலாரில் நான் இறைவனைக் காண்போமே!!!
ReplyDeleteநன்றி ரிஷபன்.
ReplyDeleteநிச்சயமாக ஆர்ஆர். ஐயா.
ReplyDeleteவாடிய மனித தெய்வம்.. சரியான சொற்பிரயோகம் வாசன். நன்றி. உங்களுக்கு முன்னமே பதில் பதிவு இட்டிருந்தேன். அது மாறிவிட்டது.
ReplyDeleteவள்ளலாரை நினைவு கூர்ந்து எழுதிய பதிவுக்கு நன்றி.
ReplyDeleteஅவர் அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு காட்டி, கொல்லாமை மற்றும் புலால் உண்ணாமை பற்றி வலியுறுத்தியதால் அவரை நான் மிகவும் நேசிப்பதுண்டு. அவர் போதனைகளைப் பின்பற்றுபவர்களின் இயக்கம் ஒன்று தினமும் செய்து வரும் அன்னதானத்தை நான் அடிக்கடி கண்டு மகிழ்கிறேன். திருச்சி டவுனின் நடுவில் உள்ள மிகப் பெரிய (மலைக்கொட்டை உச்சிப்பிள்ளையார் & தாயுமானவர் கோவிலுக்குச் சொந்தமான)தெப்பக்குளத்தின் வடக்குக் கரை படிக்கட்டுகளில்
மாலை 6.50 மணிக்கு, திரளாக ஏழை மக்களும் வழிப்போக்கர்களும் குவிந்திருப்பார்கள். மிகச் சரியாக இரவு 7 மணிக்கு, ஆம்புலன்ஸ் போன்ற வெள்ளைக் க்லர் மாருதி வேனில், சாப்பாடு வந்து இறங்கும். அங்கு கூடியுள்ள அனைவருக்கும், தினந்தோறும், எவர்சில்வர் தட்டுக்களில், போதுமான அளவு நல்ல உணவு வழங்கப்பட்டு வருகிறது. பசியாற்றும் பணி செய்யும் அவர்களைப் பார்த்தாலே நமக்கும், நலிவடைந்த மக்களுக்கும், சமூகத்திற்கும், ஏதாவது ஒரு சிறிய நற்பணிகள், நம்மால் முடிந்த வரைக்கும், செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
நன்றி. நீண்ட செறிவான கருத்துரைக்கு நெஞ்சார்ந்த நன்றி.
ReplyDeleteநெய்வேலியிலிருந்து சிதம்பரம் செல்லும் பாதையில் சில சமயம் பயணித்ததுண்டு. வடலூரில் இறங்கி தரிசனம் செய்யும் வாய்ப்பை இழந்தது இப்போது புரிகிறது.நல்லமனிதர் ஒருவரின் செயல்களையும் குணங்களையும் உங்கள் பதிவின் மூலம் தெரிந்துகொண்டேன். நன்றி.
ReplyDeleteபதிவுக்கு மிக்க நன்றி. வள்ளலார் சென்ற நூற்றாண்டில் உதித்த சித்தர், உடலைக் கரைத்து உய்ய முடியும் என்னும் தத்துவத்தை உணர்த்தியவர். வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய மகான். இறுதியில் கடை விரித்தேன் கொள்வாரில்லை கட்டிக் கொண்டேன் என்று சொல்ல நேர்ந்தது அவருக்கல்ல இந்த உலகுக்கு அன்றோ பேரிழப்பு? வாராது போல் வந்த மாமணியை நாம் சரிவர பயன்படுத்தி கொள்ளவில்லை என்பது என் கருத்து. அவரது திருவருட்பாவை திருவாசகத்தின் தொடர்ச்சி எனலாம். அருட்பெருஞ்சோதி என்ற சொல்லை மாணிக்கவாசகரிடமிருந்து தான் வள்ளலார் வாங்கினார். திருவருட்பாவை படிக்கும் போதெலாம் எனக்கு கண்ணீர் பெருக்கெடுப்பதை தவிர்க்க முடியவில்லை, மனம் எவ்வளவு உறுதியாய் இருந்தாலும்.
ReplyDeleteஹரணி சார்! உங்கள் மேன்மையான முயற்சிக்கு என் வாழ்த்துக்கள். இன்றைய தலைமுறை அவசியம் அறிய வேண்டிய ஒரு அவதூதர் அவர்.அலுப்பில்லாமல் திரும்ப திரும்ப அவர் தமிழைத் துய்க்கலாம்.
ReplyDeleteஅருட்பெருஞ்சோதி! தனிப்பெரும் கருணை !
நன்றி ஜிஎம்பி ஐயா.
ReplyDeleteநன்றி சிவகுமரன்.
நன்றி மோகன்ஜி சார்.
பேராசிரியருக்கு வணக்கம் .
ReplyDeleteஇன்னொரு கவியெழுதிக் காத்திருக்கிறேன் உங்கள் விமர்சனத்திற்காக.
பேராசிரியர் அவர்களுக்கு வணக்கம்.வள்ளலார் பற்றிய பகிர்வில் பெரும் மகிழ்ச்சி.
ReplyDelete