Monday, March 21, 2011

உதவி

உதவி வேண்டும்.

கைபேசி அவசியம்தான். இருப்பினும் எஸ்எம்எஸ் எனப்படும் வசதியால் ஒவ்வொரு கைபேசிக்கும் தகவல்கள் வந்துகொண்டேயிருக்கின்றன.
இது பிரச்சினையில்லை. BT- என அடையாளமிட்டு வரும் தகவல்கள் நிரம்பவும் கட்டுக்கடங்காத கோபத்தை ஏற்படுத்துகின்றன.

பிடி எனப்படும் அயோக்கியர்களிடமிருந்தும் அவர்கள் அனுப்பும் கேடுகெட்ட செய்திகளிடமிருந்து (அதாவது அதனை கைபேசிக்கு வரமுடியாத அளவுக்கு)தப்பிக்க ஏதாவது வழி உண்டா.

பெண்கள் உங்களுக்காக காத்திருக்கிறார்கள். சாட் செய்கிறீர்களா என்பதுபோல செய்தி வருகிறது. இது ஒரு சான்று கேடுகெட்ட தனத்திற்கு. இந்த கேடுகெட்ட மிருகங்களிடமிருந்து (பிடி) காப்பாற்றி உதவுங்கள் வழி ஏதேனும் இருந்தால். பல செய்திகளைப் பகிர்ந்துகொள்ள முடியவில்லை நாகரிகம் கருதி.

நீண்ட நாட்கள் பொறுத்திருந்துதான் இந்த கோபமும் ஆங்காரமும்.

8 comments:

  1. please activate do not disturb service

    ReplyDelete
  2. கைபேசியின் இயக்கம் பற்றி அதிகம் தெரியாது. உடன் எனக்கு உதவியமைக்கு நன்றிகள் எல்கே. தாங்கள் சொன்னதை செய்துவிட்டு மறுபடியும் உங்களிடம் பேசுகிறேன். நன்றிகள்.

    ReplyDelete
  3. இவர்களின் தொல்லை நாளுக்கு நாள் கூடுகிறது. என் கணக்கிலிருந்து, என் அநுமதி இல்லாமலேயே காலர் ட்யூன்ஸ் ,ஜோக்குகள் இன்னும் என்னவெல்லாமோ கூறி பணத்தை எடுக்கிறார்கள். அவர்கள் சொல்லும் எண்களில் கம்ப்ளெய்ண்ட், கொடுக்கலாம் என்றால் அந்த எண்கள் செயல்படுவதேயில்லை. நம் கணக்கில் மிகக் குறைந்த அளவே பணம் வைக்க முடிவு செய்துள்ளேன்.

    ReplyDelete
  4. உண்மைதான் ஐயா. உண்மையில் பிஎஸ்என்எல் எனும் அரசு நிறுவனம் அத்தனை அக்கிரமங்களை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கிறது. கைபேசிகளை விற்பதில்தான் கவனம் இருக்கிறதே தவிர சேவையில் அதிகபட்ச ஒழுங்கீனத்தைப் பின்பற்றுகிறது. தொடர்பில்லாமல் காசு எடுப்பதில் ஒரு திருடனுக்குரிய செயலைச் செய்கிறது. உரிய பதிலும் கொடுப்பதில்லை.சொல்லிக்கொண்டேபோகலாம். இந்த தகவல்களர்ல் நொந்துபோய்தான் உதவி கேட்டேன். பேயாட்சி செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள் என்று பாரதி சொன்னது எப்போதும் மாறாத சாட்சியாக உள்ளது. நன்றி ஐயா.

    ReplyDelete
  5. BSNL இல் இருந்தே இப்படி விளம்பரங்கள் வருவது மிகுந்த கண்டனத்துக்கு உரியது.நட்பு வட்டத்தில் முன்பே சொன்னார்கள்.நீங்கள் அதை உறுதி செய்திருக்கிறீர்கள்.

    ReplyDelete
  6. நீண்ட நாட்கள் தொடர்ந்து இதுபோன்ற செய்திகள் வருவதால் பலரிடம் சொல்லி வருத்தமுற்றே இந்தப் பதிவு. நன்றி மிருணா.

    ReplyDelete
  7. என்ன செய்வது புது வெள்ளம் வரும்போது
    இந்த மாதிரி அசிங்கங்களும் சேர்ந்தே
    வரத்தான் செய்கின்றன.

    ReplyDelete
  8. உண்மைதான் மதுமிதா. ஆனால் இதனால் ரொம்ப எரிச்சல் அடைந்துவிட்டேன்.

    ReplyDelete