Monday, May 23, 2011
சேமிப்பு முத்துக்கள்...
1. இலக்கியங்கள் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகளில் மூன்று வகைகள் உண்டு.
அ) கூந்தல் பனை ஆ)நாட்டுப்பனை இ)லோண்டர் பனை
இலக்கியங்கள் பெரும்பான்மையும் கூந்தல் பனையில் எழுதப்பட்டன.
இவற்றில் ஒரு ஓலையில் அதிகபட்சம் 25 வரிகள் எழுதலாம். 70 ஆண்டுகள்
ஆயுள் உண்டு. நாட்டுப்பனை சாதாரணமானது. கூந்தல் பனையும் நாட்டுப்
பனையும் கலந்தது லோண்டர் பனை. தடிமனானது இது.
2. ஓலைச்சுவடியைக் கட்டியபின் அதனைத் தடுக்கும் பகுதியில் (பிரிந்துவிடாமல்)
உள்ள சிறு ஓலைக்கு கிளிமூக்கு என்று பெயர். இவற்றை சிவப்புத் துணியால்
(பூச்சிகளைப் பயங்கொள்ள வைக்க நெருங்காது) அல்லது மஞ்சள் துணியால்
(கிருமி நாசினியாகப் பயன்பட) மூடி வைப்பார்கள்.
3. முக்கியமான சுவடிகளை கோபுரத்தின் இரண்டாம் நிலையிலும் கலசத்திலும்
வைத்துப் பராமரிப்பது வழக்கம். கோயிலில் அமைந்துள்ள நுர்லகத்திற்கு
திருக்கோட்டிகை என்பது பெயர்.
4. சுவடியை துணிபோட்டுப் பாதுகாப்பதைப்போலவே சுவடிபடித்த சான்றோர்களையும்
பாதுகாக்கவேண்டும் என்றுதான் சால்வை அணியும் வழக்கம் வந்ததாம். அதுவே
இப்போது பலவற்றுக்கும் மாறிவிட்டது.
5. காஞ்சிபுரத்தில் ஏராளமான குடைவரை கோயில்கள் உள்ளன. இருப்பினும் அவை
யாவும் முழுமையாக முடிக்கப்பெறாதது.
6. வழங்கப்பட்ட தானங்களில் பாரதம் படிப்பதற்கும் இராமாயணம் படிப்பதற்கும் பாரதப்
பங்கு இராமாயணப்பங்கு என அறிவுசார்தானம் வழங்கப்பட்டமையை ஒரு
செப்பேடு குறிக்கிறது.
வரலாற்றை மறுமுறையாக வாசிக்கும்போது சுவை கூடுகிறது. அதன்விளைவாகவே இந்த பதிவு. தொடர்ந்து வாய்ப்பமைவில் எழுதுவேன் இன்னும்.
Subscribe to:
Post Comments (Atom)
நல்ல பயனுள்ள இதுவரை கேள்விப்படாத விஷயங்கள். நல்ல பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். அன்புடன் vgk
ReplyDeleteஹரணி சார்.. மிக நுணுக்கமான விஷயங்கள். திருக்கோட்டிகை அர்த்தம் தேடி அலைந்த நாட்கள் உண்டு. உங்கள் பதிவு அந்த தருணத்தை நினைவுக்கு இட்டு வந்தது.
ReplyDeleteநல்ல பதிவு.
ReplyDeleteநன்றி வைகோ ஐயா.
ReplyDeleteநன்றி மோகன்ஜி சார்.
ReplyDeleteநன்றி ரத்னவேல் ஐயா. உங்களைப்போன்றோரின் ஊக்கம் மிக மகிழ்ச்சியானது.
ReplyDeleteபழைய விஷயங்களாயிருந்தாலும்
ReplyDeleteஇவை அனைத்துமே எனக்குப் புதுசு.
தொடர்க.
மதுமிதா...
ReplyDeleteஎங்கே போனாய்? காணவில்லை. தொடர்ந்து எழுது. காத்திருக்கிறேன் வாசிக்க. பல புதுமையான பதிவுகளாக உன்னுடைய பதிவுகளை சுவையுடன் தருவதால். கருத்துரைக்கு நன்றி.
உங்களின் பக்கத்திற்கு இப்ப்துதான் வந்தேன் உளம் கனிந்த பாராட்டுகள் நல்ல ஆய்வாளர் தான் நல்ல இலக்கியங்களை/ செய்திகளை /பதிவுகளை தரமுடியும் என கருதுகிறவள் . உங்களின் எல்லா இடுகைகளும் பாராட்ட தக்கன உளம் கனிந்த பாராட்டுகள் நன்றிகள்.
ReplyDeleteநன்றி மாலதி அவர்களே. உங்களின் முதல் வருகை மகிழ்ச்சியானது. நிறைவான கருத்துரைக்கு நன்றிகள். தொடர்ந்து வாருங்கள்.
ReplyDeleteகூந்தல் பனை, கிளிமூக்கு, திருக்கோட்டிகை, அறிவுசார்தானம் எனப் பல அறிதல்கள் தங்கள் பதிவால்! மிக்க நன்றி ஐயா.
ReplyDeleteஅபூர்வமான நுணுக்கமான தகவல்கள். நன்றி.
ReplyDeleteபனம் நுங்கின் நீர் போன்ற தண்மையான சுவையான செய்திகள் ஞானத்தாகம் போக்கின. இன்னும் என ஏங்கவும் வைத்தன ஹரணி.
ReplyDeleteபுராதனமான விஷயங்களில்தான் பொதிந்திருக்கின்றன நம் வாழ்வின் ரகசியங்கள்.
ஆஹா..அருமை.. நம்மிலும் மேன்மையாகத் தான் வாழ்ந்திருக்கிறார்கள், நம் முன்னோர்கள்!!
ReplyDeleteவாழ்த்துக்கள் ஸார்!
நிலாமகள் நன்றி. இன்னும் செய்திகள் உள்ளன. அவ்வப்போது பகிர்வேன். நன்றிகள்.
ReplyDeleteதங்கள் வருகைக்கு நன்றி இராஜராஜேஸ்வரி.
ReplyDeleteசுந்தர்ஜி வாருங்கள். உங்கள் ஒவ்வொரு பதிவிற்கும் வந்து பதிலுரை போட்டுபோட்டு ஓய்ந்துவிட்டேன். கணிப்பொறி கோளாறா என்று தெரியவில்லை. இன்னும் தகவல்கள் உள்ளன. தொடர்ந்து பகிர்ந்து கொள்வேன்.
ReplyDeleteமிக்க நன்றி ஆர்ஆர் ஐயா. அடிக்கடி வாருங்கள்.
ReplyDelete