இம்சையாகவே இருக்கிறது
இயலாமையிலும் சங்கடத்திலும்
சகித்துக்கொள்ளமுடியாமலும்
அவமானத்திலும் காயங்களிலும்
சிலசமயம் சில மிருகங்களிடம்
பொழுதுகளை தொலைக்கவேண்டியிருக்கிறது
ஆனாலும்
வாழ்வின் கடைசி இருப்புவரை அவை
மிருகங்களாகவே வாழ்ந்து மிருகங்களாகவே சாகும்
என்ற ஊழ்வினையின் நிறைவில்
மிச்ச வாழ்வு மீந்தேரும் எப்பொழுதும்...
இப்படி ஏதும் புரியாதபடி ( என்ன மொழி.?) இடுகை இடுவது என்ன நிர்பந்தமோ.?
ReplyDelete\\இம்சையாகயே இருக்கிறது
ReplyDeleteஇயலாமையிலும் சங்கடத்திலும்
சகித்துக்கொள்ளமுடியாமலும்
அவமானத்திலும் காயங்களிலும்
சிலசமயம் சில மிருகங்களிடம்
பொழுதுகளைத் தொலைக்கவேண்டியிருக்கிறது
ஆனாலும்
வாழ்வின் கடைசி இருப்புவரை அவை
மிருகங்களாகவே வாழ்ந்து மிருகங்களாகவே சாகும்
என்ற ஊழ்வினையின் நிறைவில்
மிச்ச வாழ்வு மீந்தேறும் எப்போதும்\\
சுய பச்சாதாபத்தின் அடிப்படையில் தன்னைத்தானே
சமாதானப்படுத்திக் கொள்கிறது மனம், இது ஒரு ஊளைச் சமாதானம் என்ற உண்மையை உரைக்க முனையும் உள்ளுணர்வின் தலையில் தட்டியபடி!
நடைமுறை யதார்த்தக் கவிதை, அற்புதம் ஹரணி சார். பாராட்டுகள்.
ஐயா தங்களது தளத்தில் ஏதோ கோளாறு உள்ளது என்று நினைக்கிறேன்.. தங்களின் கவிதை தமிழ் மொழியில் அல்லாது ஏதோ ஒரு விதமாய் தெரிகிறது.. டெம்ப்ளேட் மாற்றி பாருங்கள்...சரியானாலும் ஆகலாம்..
ReplyDeleteசுற்றம் உற்றம் தேர்ந்தெடுக்கமுடியாத நிலையில் சில சங்கடங்களை சகித்துக் கொள்ளத்தான் வேண்டும். “துஷ்டனைக் கண்டால் தூர விலகு” என்று என் பாட்டி சொல்வார்கள். நான் என் பிள்ளைகளுக்கும் நண்பர்களுக்கும் அடிக்கடி கூறுவது That which can not be cured , must be endured. மிருகங்கள்-- வார்த்தைப் பிரயொகம் சஞ்சலத்தின் தாக்கத்தை காட்டுகிறது.
ReplyDelete