எங்கள் வீட்டில் லவ்பேர்ட்ஸ் வளர்ப்பது என்னுடைய மகள். அதில் முட்டையிட்டு குஞ்சுகள் பொரித்து வளர்த்து நிறைய பறவைகள் உள்ளன. இவ்வாறு இரு குஞ்சுகளை ஈன்ற தாய்ப்பறவை ஒன்று வயிற்றில் முட்டையுடன் இறந்துவிட்டது. இன்று. இறந்துபோன தாய்ப்பறவையைச் சுற்றி இரண்டு குஞ்சுகளும் வாயருகே வாய் வைத்து குரலெழுப்புவது மனச்சங்கடமாக உள்ளது. எனவே இன்றைய பதிவாக இறந்துபோன அத்தாய்ப்பறவைக்கு ஒதுக்கப்படுகிறது.
பறவையாயினும்
தாய்மை உயர்வானது..
கண்திறவா குஞ்சுகளின்
முன்னே கண்திறந்தபடி
அந்த தாய்ப்பறவையின் மரணம்..
உயிர்விடைபெற்ற வழியைத்
துரத்தும் திறந்த கண்கள்...
குஞ்சுகளின் தவிப்பு என்ன
யாரின் தவிப்பையும் மரணம்
லட்சியம் செய்வதில்லை...
பறவையாக இருந்தாலும்
பாசமாக இருந்தாலும்
வாழ்வின் முடிவை வளைக்கமுடியாது...
உன் குஞ்சுகள் வாழும்
அமைதிகொள் தாயே...
//யாரின் தவிப்பையும் மரணம்
ReplyDeleteலட்சியம் செய்வதில்லை...//
மறுக்க முடியாத வரிகள்
அனுதாபங்கள்
குஞ்சுகளின் தவிப்பு என்ன
ReplyDeleteயாரின் தவிப்பையும் மரணம்
லட்சியம் செய்வதில்லை...
கனத்த உண்மை..
உன் குஞ்சுகள் வாழும்
ReplyDeleteஅமைதிகொள் தாயே...
ஆறுதல் வரிகள்...
உள்ளம் உணர்ந்த தவிப்பு வரிகளில் தெரிகிறது. குஞ்சுகள் பெரிதானால் அவற்றைப் பறக்க விட்டு விடுங்கள்.
ReplyDelete// யாரின் தவிப்பையும் மரணம்
ReplyDeleteலட்சியம் செய்வதில்லை...//
நிதர்சனமான வரிகள்.... இக்கவிதை என் நண்பர் ஒருவருக்கு நிகழ்ந்த சோகத்தினை நினைவுபடுத்தியது. அவரது மனைவிக்கு பிரசவ சமயத்தில் இரண்டு குழந்தைகள் [ட்வின்ஸ்] பிறந்தவுடன் மனைவி இறந்து விட குழந்தைகள் இரண்டும் தவித்தது நினைவுக்கு வந்தது...
உன் குஞ்சுகள் வாழும்
அமைதிகொள் தாயே.... நிச்சயம் அமைதிகொள்ளும் என நம்புவோம்.....
காதலர் தினத்தின்போது காதல் பறவை அதுவும் தாய்மையுடனான நிலையில் இறந்தது மனத்தை வாட்டுகிறது. பறவைக்குஞ்சுகளின் தவிப்பை உணரமுடிகிறது. வாழக் கற்றுக்கொள்ளும் என்ற நம்பிக்கை மனத்துக்கு தெம்பூட்டுகிறது.
ReplyDeleteநன்றி திருமதி ஸ்ரீதர். நன்றிகள்.
ReplyDeleteதங்களின் ஆறுதல் வரிகளுக்கு நன்றிகள் இராஜேஸ்வரி. நன்றிகள்.
ReplyDeleteஅன்புள்ள ஜிஎம்பி ஐயா..
ReplyDeleteநன்றிகள். லவ்பேர்ட்ஸ் வகை எப்போதும் கூண்டுக்குள்தான் பராமரிக்கப்படவேண்டியவை. இவற்றை வெளியில்விட்டால் அவற்றிற்கு வாழத்தெரியாது. பெரிய பறவைகள் ஒரே நாளில் அல்லது ஓரிரு நாட்களில் அடித்துக் கொன்றுவிடும். இப்போது என் மனைவியை...என் மகளைப் பார்த்ததும் தாய்ப்பறவையைப் பார்ப்பது போலப் பிஞ்சு சிறகுகளைப் படபடத்தபடி கத்தியழைக்கின்றன உணவு தரச்சொல்லி.. ஆச்சர்யமாக இருக்கிறது. மிகப் பரிவோடு அனுபவிக்கிறோம் அதனோடான தருணங்களை. நன்றிகள்.
நன்றி வெங்கட் நாகராஜ். உங்கள் அனுபவம் எனக்கும் உண்டு. நன்றிகள்.
ReplyDeleteஅவை வாழ்தலோடுதான் பிறந்திருக்கின்றன. நிச்சயம் விடமாட்டோம் கீதா. தங்களின் அன்பான ஆறுதல் வரிகளுக்கு நன்றிகள்.
ReplyDelete