சேற்று நீர்
குருவி முகம் பார்க்கும்
நாய் தாகம் தணிக்கும்.
00000
சுடுகாட்டு வாடை
புறம்போக்குக் குடிசைகள்
குழம்பு வாடை,,
00000
மிதந்த பல்லி
நொந்த பழையது
வாலாட்டும் நாய்...
00000
விரதச் சோறு
அணிலை விரட்டுங்கள்
முதலில் காக்கை
00000
ஓடாத கடிகாரம்
வீட்டுக்கு ஆகாது
ஓடுகிறது நேரம்,,
0000
பேருந்திலிருந்து விழும்
காசுகள்
கோபமாய் கருப்பண்ணசாமி
0000
குடிகார தந்தை
வருஷப் படையல்
பீரும் கறியும்
00000
நல்லா சாப்பிடுங்கப்பா
பிணம் எடுக்க
நாலு மணியாகும்,,,
00000
என்ன பிரச்சினை
வெளிநடப்பும் கலைப்பும்
மேகங்களே?
00000000000000000000000000000000000
ஒரு குழந்தையின்
சிரிப்புதான்
ஒரு துயரத்தினை
துயரில்லாமல்
வாசிக்க வைக்கிறது,,,
000000000
ஒரு கத்தரிக்காய்
ஒரு முருங்கைக்காய்
ஒரு பச்சை மிளகாய்
ஒரு வெங்காயம்
ஒரு கருவேப்பிலை
சில துளிகள் எண்ணெய்
சிக்கனமாய் கடுகு
சில்லறை காசாய் புளி
வறுமையை புரிந்தவை
இவை
வதவதவென்று வாழ்வதில்
இல்லை வாழ்க்கை
வறுமையிருந்தாலும்
00000000000000000
(நன்றி .... புதிய பார்வை.... மார்ச் 2012)
மிதந்த பல்லி
ReplyDeleteநொந்த பழையது
வாலாட்டும் நாய்...
நல்லா சாப்பிடுங்கப்பா
பிணம் எடுக்க
நாலு மணியாகும்,,,///
அத்தனையும் அருமை என்றாலும் இவை இரண்டும் .. அதிர வைத்த வரிகள்.
அருமை ஹரிணி சார்
அத்தனையும் அருமை....
ReplyDeleteரசித்தேன்....
நல்லா சாப்பிடுங்கப்பா
ReplyDeleteபிணம் எடுக்க
நாலு மணியாகும்,,,
அருமையான வரிகள்.இது ஹைக்கூ... மட்டுமல்ல, அதையும் தாண்டிய இன்றைய வாழ்வியல் யதார்த்தம்
குட்டிக் குட்டி வரிகளில் வாழ்வின் யதார்த்தங்கள். புதிய பார்வைதான். பாராட்டுக்கள்.
ReplyDeleteரசித்தேன்....http://wwww.rishvan.com
ReplyDeleteபேருந்திலிருந்து விழும்
ReplyDeleteகாசுகள்
கோபமாய் கருப்பண்ணசாமி
அத்தனையும் ரசித்தேன்.
ஒரு குழந்தையின்
ReplyDeleteசிரிப்புதான்
ஒரு துயரத்தினை
துயரில்லாமல்
வாசிக்க வைக்கிறது,,,
புதிய பார்வைகளுக்கு வாழ்த்துகள்..
ஓடாத கடிகாரம்
ReplyDeleteவீட்டுக்கு ஆகாது
ஓடுகிறது நேரம்,,
ரசிக்கவைக்கும் வரிகள்..
சிந்திக்க வைக்கும் வரிகள் சார் ! நன்றி !
ReplyDelete