தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளையவர்களின் பிறந்தநாள் இன்று. கரந்தைத் தமிழ்ச்சங்கத்தை நிறுவியவர். அவரின் தமிழ்ப்பணிகள் என்றைக்கும் தமிழ்கூறு நல்லுலகின் அழியாத பதிவுகள். புதையல்கள். சாகா வரம்போல அவை. இவர் குறித்து கரந்தைஜெயக்குமார் தனது வலைப்பக்கம் சில அரிய செய்திகளை அள்ளி தந்துள்ளார். அவற்றிலிருந்து சிலவற்றை மட்டும் சான்றாக உங்களுக்குத் தருகிறேன். நன்றி திரு ஜெயக்குமார்.
நீராருங் கடலுடுத்த எனத் தொடங்கும் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை அவர்களின் பாடலைத் தமிழ்த் தாய் வாழ்த்தாக அறிமுகப் படுத்தியது கரந்தைத் தமிழ்ச் சங்கமாகும்.
வடமொழி மட்டுமே கற்பிக்கப் பட்டு வந்த திருவையாற்று கல்லூரியில் தமிழையும் கற்பிக்கச் செய்து, அக்கல்லூரியின் பெயரை அரசர் கல்லூரியாக மாற்றியது கரந்தைத் தமிழ்ச் சங்கமாகும்.
தமிழ் மொழியினைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்று 1919 ஆம் ஆண்டிலேயே முதன் முதலாகத் தீர்மானம் நிறைவேற்றியது கரந்தைத் தமிழ்ச் சங்கமாகும்.
தமிழுக்குத் தனியே ஓர் பல்கலைக் கழகம் வேண்டும் என்று 1922 ஆம் ஆண்டிலேயே முதன் முதலாகத் தீர்மானம் நிறைவேற்றியது கரந்தைத் தமிழ்ச் சங்கமாகும்.
இந்தி மொழியைக் கட்டாயப் பாடமாக்கியபோது, 1937 ஆம் ஆண்டிலேயே அதன எதிர்த்து முதல் குரல் கொடுத்ததும், தீர்மாணம் இயற்றி களத்தில் இறங்கிப் போராடிய முதல் அமைப்பும் கரந்தைத் தமிழ்ச் சங்கமாகும்.
இவையெல்லாம் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராய் உமாமகேசுவரனார் அமர்ந்து ஆற்றிய பணிகளுள் ஒரு சிலவேயாகும்.
7.5.2012 ஆகிய இந்நாள், மூச்செல்லாம் தமிழ் மூச்சு, பேச்செல்லாம் தமிழ்ப் பேச்சு, பெற்றதெல்லாம் தமிழ்த் தாயின் வெற்றி என வாழ்ந்து காட்டிய தமிழவேள் உமாமகேசுவரனார் அவர்களின் அவர்களின் 130 வது பிறந்த நாள் ஆகும்.
இந்நன் நாளில்
தமிழவேள் உமாமகேசுவரனார் அவர்களின் நினைவினைப் போற்றுவோம். தமிழவேளின் புகழ் வாழ்க வாழ்க என வாழ்த்துவோம்.
செந்தமிழ்ப் புரவலர், தமிழவேள் த.வே.உமாமகேசுவரனார் அவர்களின்
60 வது நினைவு நாள்
(9.5.2012)
தாயாகி உண்பித்தான், தந்தையாய்
அறிவளித்தான், சான்றோ னாகி
ஆயாத நூல்பலவும் ஆய்வித்தான்
அவ்வப்போ தயர்ந்த காலை
ஓயாமல் நலமுரைத்து ஊக்குவித்தான்
இனியாரை உறுவோம் அந்தோ
தேயாத புகழான்தன் செயல் நினைந்து
உளம் தேய்ந்து சிதைகின்றே மால்
- ஔவை துரைசாமி பிள்ளை
--------------------
பெற்றோர்
இழந்தான் – இல்லத்
துணையாள் இழந்தான் – உடன்
பிறந்த தமையன்
சங்கம் நிறுவிய துங்கன்தனை
இழந்தான் – அருமை
மகன் பஞ்சாபகேசன்தனை
இழந்தான்.
துன்பங்கள்
தொடர்ந்து வரினும்
துயரங்களைச்
சுமந்து வரினும் – உள்ளம்
தளராதிருந்தான் – என்றும்
தமிழ் நினைவோடிருந்தான்
எங்கள்
முண்டாசு முனிவன்
உமாமகேசன்.
For read full details : karanthaijayakumar.blogspot.com
For read full details : karanthaijayakumar.blogspot.com
தமிழ்வேள் உமாமகேஸ்வரனார் பற்றிய செய்திகள் போற்றுதலுக்குரியன. அறியத் தந்தமைக்கு நன்றி!
ReplyDeleteஅரிய பல செய்திகளைத் தந்து விட்டீர்கள். வாசிக்கும் போதே உள்ளம் பூரிக்கிறது.
ReplyDelete