Thursday, February 21, 2013

பாராட்டுவோம்,,,,




                           ஒன்று ------காவிரி நதி நீர்ப் பிரச்சினை தொடர் பிரச்சினை, அதுகுறித்து பல்வேறு நிகழ்வுகள் நிகழ்ந்திருந்தாலும். தற்போது அதுகுறித்த ஒரு நிலைப்பாட்டை அரசிதழில் வெளியிட்டிருப்பது உள்ளபடியே மகிழ்ச்சிக்குரிய ஒன்று மட்டுமல்ல, உணர்வுப்பூர்வமாகப் பயிர்கள் காய்வதைக் கண்டு தற்கொலை செய்து இறந்துபோன விவசாயிகளின் ஆன்மாவிற்கும் சாந்தி தருவதாகும். அரசிதழில் கண்டபடி நடைமுறை அழுத்தமாக அமைதல் வேண்டும். அரசியலைத் தாண்டி எந்தக் கருத்துமின்றி தமிழக முதல்வர் அவர்கள் பாராட்டுக்குரியவர். காவிரி குறித்த நிலைப்பாட்டில் சிலவற்றைத் துணிவாக மேற்கொண்டவர் என்ற நிலையில். மேலும் இதுகுறித்து செயல்பட்ட மற்ற அரசியல் தலைவர்களுக்கும் இதே பாராட்டுக்கள் மனம் திறந்து.

                        இரண்டாவது----------- ஆசிய விளையாட்டுக்களை நடத்துவதற்கு தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது வேறு இடம் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சூடாக தமிழர்களின் மனங்களைக் குளிர்விக்குமாறு மறுத்துவிட்ட தமிழக முதல்வர் அவர்களின் செயற்பாடும் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. மீண்டும் அவருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.


                        மூன்றாவது மின்வெட்டு நிகழ்விலும் ஒரு மின்னல் வெட்டாய் ஒரு முடிவு கிடைத்துவிட்டால் போதும். நம்பிக்கை இருக்கிறது.


                                                 எந்த ஒன்றுக்கும்
                                                 தீர்வு இருக்கலாம்...
                                                  அது கிடைப்பதில்
                                                 தாமதம் நேரலாம்
                                                 ஆனாலும்
                                                 நம்பிக்கையாய்
                                                 ஒரு சொல்லுதிர்த்தல்
                                                 தீர்வின் கதவைத்
                                                 திறப்பதற்கான
                                                 திறவுகோல்தானே?


                         000000000000000000000000000000000000000000000000

6 comments:

  1. மூன்றாவது விரைவில் நடக்கட்டும்...

    ReplyDelete
  2. நம்பிக்கையாய்
    ஒரு சொல்லுதிர்த்தல்
    தீர்வின் கதவைத்
    திறப்பதற்கான திறவுகோல்தானே?

    மின்னல் வெட்டாய் ஒரு முடிவு கிடைத்துவிட நம்பிக்கை அளிக்கும் பகிர்வுகள்...

    ReplyDelete

  3. நம்பிக்கைதானே வாழ்க்கையின் ஆதாரம். நல்லவை நடக்க நம்புவோம்.

    ReplyDelete
  4. அன்புடையீர் வணக்கம்! இந்த வாரம் “ வலைச்சரம் ” http://blogintamil.blogspot.in எனது ஆசிரியர் பணியில், நாளைய பதிவில் (23.02.2013) உங்கள் வலைப்பதிவினைப் பற்றி ஒரு சிறு குறிப்பு எழுதுகிறேன். நாளைய 23.02.2013 வலைச்சரம் கண்டு தங்கள் கருத்தினைச் சொல்லவும். நன்றி!

    ReplyDelete
  5. நம்பிக்கையாய் ஒரு சொல்லுதிர்த்தல் தீர்வின் கதவைத் திறப்பதற்கான
    திறவுகோல்தானே?

    நல்லதே நடக்கட்டும்.. விரைவில்.

    ReplyDelete