என்னுடைய
பிள்ளைகளுக்கும்
மனைவிக்கும்
எதையேனும் விட்டுவிட்டுச்
செல்லவேண்டுமென்ற
எண்ணம்
எதிர் வீட்டுக்காரரின்
மரணத்தின்போது எனக்கு
உணர்த்தப்பட்டது
உணர்வுள்ள மனிதனாக
எப்போதும் வாழவேண்டும்
என்கிற எண்ணம்
நிறைவேறாமல் இன்றுவரை
சமரசம் செய்துகொள்வதிலேயே
குவியலாகக் கொட்டப்படும்
உணவைப் பாய்ந்து கவவும்
விலங்குகளைப் போல
பங்கிடப்பட்ட எனது வாழ்வென்று
ஒற்றைவரியில் எழுதப்படும்
உயிலை எப்படி எழுதமுடியும்
ஏற்றுக்கொள்ளுங்கள் என்று
யோசித்துக்கொண்டிருக்கிறேன்
இறந்துபோனவனின் பிணத்தின் முன்
உயிரிருந்தும் உயிரற்று...
( நன்றி,,,,,,,,, தீராநதி ஏப்ரல் 2013),
வேறு வழியில்லை... இன்றைய காலத்தில் எல்லாமுமே சமரசம் செய்துகொள்வதிலேயே................
ReplyDeleteவரிகள் உயிரோட்டமாக...
தொடர வாழ்த்துக்கள்...
தங்களின் நீண்ட நாள் வாசகன். ஆனால், முதல் மடல் இதுதான். கவிதை வரிகள் எங்களை அசைபோட வைக்கின்றன. வாழ்த்துக்கள்.
ReplyDeleteசமரசமே வாழ்வாகிப் போன தேசமிது
ReplyDeleteஇன்றுவரை
ReplyDeleteசமரசம் செய்துகொள்வதிலேயே..
அப்படித்தான் ஆகிறது வாழ்க்கை !
ReplyDeleteஎன்றும் சமரசம் உலாவும் இடமே வாழ்க்கை அல்லவா.? அதிலும் இன்பம் இருந்தால் மிகவும் நன்று. வாழ்த்துக்கள்.
அன்புள்ள தனபாலன்...
ReplyDeleteவணக்கம். தொடர்ந்து உங்களின் கருத்துரை எனனை நெகிழ வைக்கிறது, என்றும் மறவேன். நன்றிகள் பல.
அன்புள்ள முருகபூபதி..
ReplyDeleteவணக்கம். ரொம்பவும் நெகிழ வைத்துவிட்டீர்கள். தங்களின் அன்பான மனதிற்கு என்றும் கடமைப் பட்டிருக்கிறேன். ஒரு படைப்பாளனுக்கு முதன்மையானது அவனுடைய படைப்பு, அதற்கிணையானது அதனை வாசிக்கும் வாசகர்கள். உங்களின் அன்பிற்கு நன்றிகள். தொடர்ந்து வாருங்கள்.
அன்புள்ள ஜெயக்குமார்...
ReplyDeleteவணக்கம். தங்களின் கருத்திற்கு நன்றிகள்.
அன்புள்ள ரிஷபன்..
ReplyDeleteசமரசம் செய்துகொள்வதறகும் ஒரு எல்லை இருப்பதாக எண்ணுகிறேன். இல்லையென்றால் நாம் ஏளனத்திற்கும் கேலிக்குமுரியவர்கள் ஆகிவிடுவோம். இது என்னுடைய அனுபவத்தில் அனுபவித்தது. எனவேதான் அதனை உணர்ந்து நிமிர்வதற்குள் வாழ்க்கை நகர்ந்திருக்கிறது துர்ராமாக. நன்றிகள்.
அன்புள்ள ஐயா.
ReplyDeleteவணக்கம். உங்களைப் பார்த்தால் எனக்குப் பொறாமையாக இருக்கிறது, நானும் பல பெரியவர்களிடம் பழகியிருக்கிறேன். ஆனாலும் சிற்சில முரண்களைக காணாமல் இருக்கமுடிவதில்லை. ஆனால் உங்களிடத்தில் மட்டுமே எனக்கு ஆச்சர்யமான பல விஷயங்களைக் காண்கிறேன். உங்களுடைய கருத்துக்களைப் பல வலைப்பக்கங்களில் காண்கிறேன். எந்த பதிவாக இருந்தாலும் உடனடியாகத் தடாலடியாகப் பதில் சொல்வதில்லை, எல்லாவற்றிலும் ஒரு நிதானத்தைக் கடைப்பிடித்து பின் தெளிவான கருத்தை முன்மொழிகிறீர்கள். இது நர்ன் மட்டுமல்ல பலரும் உங்களிடம் கற்றுக்கொள்ளவேண்டும். நன்றிகள்.