Thursday, June 13, 2013

அவசரத்தந்தி

அவசரத் தந்தி



                                 வணக்கம்.

                                 160 ஆண்டுகளுககுமேலாக மனித வாழ்வில் மிக முக்கியப் பங்கை வகித்துவந்த சொல் தந்தி என்பதாகும.

                                  அவசரமாக ஒரு செய்தியை உடனே யாருக்கும் தெரிவிக்க அதன் விளைவை உடனே தெரிந்துகொள்ள எனத் தந்தியின் பயன்பாடு மிகமிக முக்கியமானதாகக் கருதப்பட்ட காலம் இருநத்து.

                                   கைப்பேசி வந்தபின் தந்தியின் சேவை பயன்படுத்தப்படாமல் தற்போது சூலை 15 ஆம நாளுடன் இசசேவையை நிறுத்திவிட முடிவு எடுக்கப்பட்டுள்ளது மிக வருத்தத்திற்குரிய ஒன்றாகும்.

                                    தகவல் தொழில்நுட்ப வளரச்சியின் விளைவால் இத்தகைய கொடிய முடிவைத் தந்தி சந்திக்கிறது. என்னதாக் தகவல் தொழில்நுட்ப வசதிகள் பெருகினாலும் தந்தி என்பது மனித வாழ்வோடு பின்னிப் பிணைந்த ஒன்றாகும்.

                                   அது மனிதனின் எல்லா உணர்வுகளின் நம்பிக்கைக் களமாக இருந்தது. ஏற்கெனவே கடிதம் எழுதும் பழக்கத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தொலைத்துவருகிறோம். இதற்கும் தந்தி நிலைமை ஏற்படும் காலம் வெகு துர்ரத்தில் இல்லை. எனவே தந்தி மூடுவிழாவை அலட்சியமாக எண்ணிவிடமுடியாது,

                                     நுழைய முடியாத இடஙக்ளுக்கு எல்லாம் தந்திதான் நுழைந்து சென்றது,

                                    இறப்புச் செய்திகள்.
                                    பிறப்புச் செய்திகள்.
                                    ஏதேனும் பிரச்சினைகள்.
                                   குடும்பத் தகராறுகள்.
                                    மகிழ்ச்சியான நிகழ்வுகள்.
                                   வேலை கிடைத்துவிட்டது.
                                   உடனே வரவும்.
                                    வேலையில் சேரவும்.
                                    நான் வருகிறேன்.
                                    நான் ஊர்போய் சேர்ந்துவிட்டேன்.
                                    தங்கை வயதுக்கு வந்துவிட்டாள்.
                                    அப்பா பணம் அனுப்பியிருக்கிறார.
                                    அம்மா புறப்பட்டு வருகிறாள். கவலைப்படாதே,
                                    வியாபாரம் பேசி முடித்தாயிற்று.
                                    தேர்வில் வெற்றிபெற்றுவிட்டாள்.
                                   

         இப்படிப் பலவற்றை உணர்வுப்பூர்வமாக அசைக்கமுடியாத மாற்றமுடியாத சாட்சியாக வாழ்வின் நம்பிக்கைத் தடமாக இருந்த தந்தியின் ஆயுள் முடிந்துவிட்டது. 160 வயதில் ஆயுள் முடிவு.

                                     தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியால் எந்தவிதமான சாட்சியங்களும் இல்லாத நம்பிக்கையில்லாத எதனையும் மாற்றிப் பேசக்கூடிய ஓர் உறுதியற்ற வர்ழ்வின் நிகழ்வு அரங்கேறிக்கொண்டிருக்கிறது.

                                    இது நல்லதா?

                                    எதற்கென்றாலும் சொல்லுதிர்ப்பது முக்கியமல்ல, ஆனால் கொடுத்த வாக்கை பேசிய பேச்சை உண்மையென்று உறுதிப்படுத்த எது சாட்சி?
                                      எழுததுப் பூர்வமாக எதுவுமே இல்லாத நிலையில் எப்படி எல்லாமும் சரியாகும்?

                                       தந்தி குறித்த உங்கள் விவாதங்களை நான் ஆர்வமாக எதிர்பார்க்கிறேன்.

                                       எதுவாயினும் எழுதுங்கள். ஆரோக்கியமாக இருப்பின் அதனை அரசுக்கு எடுத்துரைப்போம்.

                                        என்னைப் பொறுத்தவரை தந்தி சேவை அவசியமானது.

9 comments:

  1. நவீன தகவல் தொழில் நுட்பங்கள் பெருகிவிட்ட இந்தக் காலத்தில் ’தந்தி’ என்பது தேவையில்லாத விஷயம் என்பது என் தாழ்மையான கருத்து, ஐயா.

    தேவையில்லாமல் ஒரு இலாகாவைத் தொடர்ந்து நடத்துவது, அரசாங்கத்தாருக்கு வீண்செலவு அல்லவா!

    ReplyDelete
  2. காவல் / சட்டத் துறைகளுக்கு மிகவும் அவசியமாக இருந்தது... இனி...?

    பயம் உட்பட பரபரப்பு, எதிர்ப்பார்ப்பு, ஆவல், மகிழ்ச்சி, மற்ற எல்லாமுமே இனி...?

    ReplyDelete
  3. சார் தந்தி ... வார்த்தையைக்கேட்டாலே ஒரு காலத்தில் கைகள் தந்தியடிக்க ஆரம்பித்துவிடுமே..!

    ReplyDelete

  4. ஐயா வணக்கம், தொழில் நுட்பம் வளர்ந்து விட்ட நிலையில் தந்தி இலாகாவை பராமரிப்பது நஷ்டம் என்று எண்ணி மூடுவிழா நடத்துகிறார்கள். எனக்கு கிராமங்களின் நிலைமை சரியாகத் தெரியவில்லை. நகரங்களில் கைபேசி கணினி புழக்கம் ஓரளவுக்கு வந்து விட்டாலும் கிராமங்களில் அவற்றின் தாக்கம் வர இன்னும் பல நாட்கள் தேவைப் படும் என்பது என் எண்ணம். மக்கள் சேவைத் துறைகளில் அதிகமாக லாப நஷ்டம் பார்க்கக் கூடாது என்பதே என் கருத்து. .தந்தியின் சேவைகள் பல என்றாலும் இராஜராஜேஸ்வரி கூறுவது போல் தந்தி என்றாலே ஒரு பயம்தான் எழும்.

    ReplyDelete
  5. இன்று எல்லா இடங்களிலும் கைபேசி வந்து விட்டது. சில விஷயங்களில் செலவினம் பார்க்கக் கூடாதுதான். ஆனால் தந்தி வருவதற்குள் தகவல் போய்விடும் காலகட்டத்துக்கு நாம் வந்து விட்டோம்.

    ReplyDelete
  6. சார்... தந்தி!... என்று எத்தனையோ நல்ல செய்திகளையும் தாங்கி வந்து மகிழ்ச்சியை ஊட்டியிருக்கின்றது. தந்தி போல் பாவித்து என்பது மிக முக்கியமான சொற்றொடராகவும் அந்தக் கால கட்டத்தில் ஒருவனின் சுறுசுறுப்பை அளவிடவும் ஏதுவாக இருந்தது. நவீன தொழில் நுட்பங்களால் மனிதன் அடைந்த நன்மைகளை விட இழந்த சந்தோஷங்கள் தான் அதிகம்!...

    ReplyDelete
  7. தந்திசேவை நிறுத்தம் பற்றி அறிந்ததும் எனக்குள்ளும் ஒரு அதிர்ச்சி. கட் கடா கட் என்னும் மோர்ஸ் குறிப்பொலிகளின் சத்தம் நினைவுக்கு வந்துபோகிறது. கடைசியாய் நான் தந்தி பெற்றுக்கொண்டது 93ஆம் வருடம் என் அம்மாச்சி (தாய்வழிப்பாட்டி) நினைவுதப்பி மிகவும் கவலைக்கிடமாய் இருந்ததை அறிவித்து உடனே கிளம்பிவரச்சொன்னது. பழையன கழிதலும் புதியன புகுதலும் காலத்தின் கட்டாயம் என்று அறிந்தபோதும், இல்லத்தின் ஒரு இருட்டுமூலையில் கவனிப்பாரற்றுக் கிடந்திருந்த நான்காம் தலைமுறையைச் சார்ந்த ஒரு பாட்டனோ பாட்டியோ உயிர்ப்படங்கியது போல மனம் துக்கப்படுகிறது என்பது உண்மை. ஆதங்கம் கழிய சிலகாலமாகலாம்.

    ReplyDelete
  8. அன்புள்ள..

    இன்னும் இது தொடர்பாகக் கருத்துக்களை விரும்புகிறேன்,

    அதற்குமுன் திருமிகு வைகோ அவர்களின் கருத்துரைக்கு ஒரு பதில்.
    அரசாங்கத்தில் எத்தனையோ துறைகள் தேவையில்லாமல் இருப்பது என்பது உண்மைதான். ஆனால் அரசாங்கத்திற்குத் தந்தியால் நட்டமில்லை என்பது என்னுடைய கருத்து. இதுபற்றி இன்னும் விரிவாகப் பேசுவோம் ஐயா.

    ஐயா ஜிஎம்பி.. சகோதரி கீதமஞ்சரி இவர்களின் கருத்துரைகளுக்குப் பதில்.

    உங்கள் கருத்துரைகள் சரியானவை. தந்தி என்பது சிறிய வெள்ளைத்தாளில் அடங்கும் சில வரிசெய்திகளோடு முடிந்துவிடுவதில்லை. நான் குறிப்பிடுவது ஆங்கிலத்தில் சொல்வார்களே committment அதுதான். எந்தச் செய்தியாக இருந்தாலும் எழுத்துப்பூர்வமாகப் பதிவு என்பது பின்னால் மாற்றிக்கொள்ளமுடியாத ஒரு நம்பிக்கையைத் தரும் என்பதுதான். நன்றிகள்.

    ரிஷபன் ... தந்தி போவதற்குள் தகவல் போய்விடுவது உண்மைதான். ஆனால் அதற்குச் சாட்சி? இப்போதைய உலகம் அப்படியிருக்கிறது, கீத மஞ்சரி சொன்னதபோல ஆதங்கம் கழிய சில காலமாகலாம். நன்றிகள்.

    தந்தி என்றாலே பயம்தான. ஆனாலும் அந்தப் பயம் ஒரு பாரம்பரியமான உறவுநிலையை நினைவூட்டித் தக்க வைத்திருந்தது என்பதுதான் மறுக்கமுடியாத உண்மை.

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete