Sunday, July 14, 2013

நத்தையோட்டுத் தண்ணீர் விமர்சனம்




         பேராசிரியர் மா. கோவிந்தராசு என்பவர் அரசு கலைக்கல்லுர்ரியில் பேராசிரியராகப் பணிபுரிபவர். கிட்டத்தட்ட 30 நுர்ல்களின் ஆசிரியர். இலக்கணம், திறனாய்வு, இலக்கியம், படைப்பிலக்கியம் எனும் பன்முகத் தளங்களில் இயங்குபவர். அவரின் நத்தையோட்டுத் தண்ணீர் நுர்ல் குறித்த விமர்சனம்.

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

     பேரன்பும் பெருமதிப்பும் கெழுமிய பேராசிரியர் க.அன்பழகன் (ஹரணி) அவர்களுக்கு அன்பு வணக்கம். நலமும் நாட்டமும் ஒன்றே.

       தங்களின் நத்தையோட்டுத் தண்ணீர் நுர்லினை ஆழ்ந்து வாசித்தேன்.

      இந்நுர்ல் தங்கள் அனுபவத்தின் சாறு. சுயசரிதையின் கூறு..கிராமம். இயற்கை. விளையாட்டு. நல்ல பெற்றோர். வாசிக்கும் பழக்கம். எழுதும் பழக்கம். நன்னெறி. குருபக்தி. நாகரிகம். தமிழர் பண்பாடு என இச்சூழலில் வளர்ந்த அனைவருக்கம் தங்களின் அனுபவம் ஏற்பட்டிருக்கும். அனுபவங்களை நினைப்பதும் பேசுவதும் எளிது... அவற்றை வரிவடிவமாக்குதல் அரிது.

         இந்நுர்ல் பற்றித் தங்களிடம் நேரில் அல்லது செல்பேசியில் கருத்துச் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் தங்களின் மடலேறுதல் கட்டுரை என்னை எழுத வைத்தது. இந்நுர்லில் உள்ள மூன்றாவது கட்டுரை மடலேறுதல் என்பதில் கூறியுள்ளபடி பேசினால் போதாது.. கடிதம் எழுத வேண்டும் என்பதை உணர்ந்து இக்கடிதத்தை எழுதுகின்றேன்.

         சைவ சித்தாந்த சாத்திரங்களைப் போலப் பதினான்கு கட்டுரைகளில் பலநுர்று அறவுரைகள். அத்தனையும் பார்த்து. கேட்டு. அனுபவித்து உணர்ந்தவை. தங்களின் அனுபவத்தைச் சாறாகவும் இனிப்பாகவும் தந்திருக்கிறீர்கள்.

             ஏன் வாசிக்கவேண்டும்? எப்படி வாசிக்கவேண்டும்?  வாசிப்பின் பயன் என்ன? இன்றைய வாழ்க்கைக்கு வாசிப்பின் தேவை என்ன? இவற்றிற்கு அருமையாக விளக்கம் அளித்துள்ளீர்கள். ஆனால் இன்றைய எதார்த்த உலகில் வாசிப்பு குறைந்து. உறக்கமும் ஊர்ப்பேச்சும் அதிகரித்து வருகின்றன. இந்நிலை மாறவேண்டும். இதற்குத் தங்களைப் போலப் பலர் துர்ண்டுதல் வேண்டும்.

              தங்களின் எழுத்தில் எளிய மொழிநடையும் சிறுசிறு தொடர் அமைப்பும் தெரிகின்றன. கட்டுரையிலும் தங்கள் கவிதையின் தாக்கம் வெளிப்பட்டுள்ளது.

                           வாசிப்பு என்பது ஒரு கலை
                           வாசிப்பு என்பது ஒரு தவம்
                           வாசிப்பு என்பது ஒரு பரவசம்
                           வாசிப்பு என்பது ஓர் உணர்வு
                            வாசிக்க வாசிக்க வளம் பெறுகிறோம் (ப.3)

             வாழ்க்கையின் அனுபவம் இலக்கிய வடிவம் பெறும்போது அது போற்றப்படுகிறது. இந்த நுர்லில் முத்திரை வரிகள் பல காணப்பெறுகின்றன. சான்றுக்குச் சில

                      வாசிப்போம் வாழும்வரை வாழ்வதற்காக.....
                      வாழ்கிறோம் என்பதை அர்த்தப்படுத்தவும்...

                      நட்பை விமர்சனம் செய்வது நட்பாகாது...

                      எதிர்பார்ப்பு இல்லாதது நட்பு
                     சுட்டிக் காட்டுவது நட்பு

                      எழுதிப் பகிர்வதால் மறக்கமுடியாத சுமை இறங்கி
                      விடுகிறது. மறந்ததுபோல் ஆகிறது. இலேசாகிறது.

                      காற்று நுழைய முடியாத இடத்தில் கடித உணர்வுகள்
                      நுழையும். அது வாழ்வின் அந்தரம்.

                       உணர்வுகள்தான் உறவுகள்

                       மருத்துவப் பரிசோதனைகளில் நெகடிவ் என்று வந்தால்தான்
                       பாசிடிவ் வாழ்க்கை

                      பாவனை முழுக்க விஷம் தடவிய சொற்கள்


         சந்தர்ப்பவாதிகளுக்கு உருவகப் பெயர்களாக

                    மண்குதிரை. உடைந்த பாத்திரம். சிதைந்த பொருள். அழுகிய
                   பண்டம். புதைமணல்.  எனத் தந்திருப்பது நுட்பமானது.


   பணம் பந்தியிலே குணம் குப்பையிலே என்னும பாடலடிகளும்  தங்களின் பண உறவுகள் கட்டுரையும் குறிப்பிடத்தக்கது.

                              பணம்தான் தகுதி
                              பணம்தான் தரம்
                              பணம்தான் உரம்
                              பணம்தான் சக்தி
                              பணம்தான் உயிர்
                              பணம்தான் மரணம்
                              பணம்தான் கடவுள்
                     
கவிஞர் கண்ணதாசன் அனுபவம்தான் எல்லாம் என்பார். தாங்களோ பணம்தான் எல்லாம் என்கிறீர். இஃது இன்றைய நிலை.

               பொது வாழ்க்கைக்கும் ஆய்வுகளுக்கும் இன்றைய வழிகாட்டிகள் எப்படி இருக்கின்றார்களோ என்பதை எதார்த்தமாகக் கூறியுள்ளீர்கள்.

                வழிகாட்டும் தகுதியை இழந்தவர்கள் வழிகாட்டிகளாகக் கொண்டாடப்படுகிறார்கள். தகுதியின்மையும் சாதியும் அவர்களுக்கு வழிகாட்டிகளாக இருக்கின்றன. தகுதியின்மையே தகுதி என்கிற நிலைப்பாட்டில் பெருமிதம் கொள்கிறார்கள்.

              எதார்த்தமான நிஜ வாழ்க்கையில் நடைபெறும் குழந்தைகள் தொடர்பான செய்திகளை அருமையாக ஆழமாகப் பதிவு செய்துள்ளீர்கள்.

                இன்று தமிழாய்வு என்னும் பெயரில் நடக்கின்ற நிகழ்வுகள் எல்லாம் மிகப்பெரும் கொலைபாதகங்களாக அமைந்துள்ளன என்று கூறுவது மிகப்பெரும் உண்மை. இன்று காணப்படும் மோசமான வழிகாட்டிகளையும் ஆய்வாளரின் அவலங்களையும் உள்ளவாறு கூறியுள்ளீர்கள்.

                  என் ஆசிரியர்கள். வடவாற்றங்கரையில் என்னும் கட்டுரைகள் இருத்தலியக் கோட்பாட்டுடன் பதிவாகியுள்ளன. பள்ளிகளில் முன்பெல்லாம் M.I. Period என்று நீதிபோதனை வகுப்பு நடைபெறும். இன்று இல்லாதது வருத்தம்தான். ஆனால் இன்றைய ஆசிரியர்கள் பலருக்கு நீதி போதிக்கத் தெரியாது. அல்லது அதற்குத் தகுதியில்லை என்பதும இங்குக் குறிப்பிடதத்க்கது.

                  அமெரிக்கா, இங்கிலாந்து. ஜப்பான். ஜெர்மனி போன்ற வளர்ந்த நாடுகளில் உள்ளவர்கள் தாம் மேற்கொண்ட காரியத்தில் தம்மை அர்ப்பணித்துக் கொள்கிறார்கள். அதனால் அவர்கள் வளர்ந்துவிட்டார்கள். அவர்களுக்கே வழிகாட்டியவர்கள் நம் முன்னோர்கள் இவண என்பது நோக்கத்தக்கது.

                  சத்திய்த்திற்காகத் தன்னை அர்ப்பணித்தவன் அரிச்சந்திரன்
                 தருமத்திற்காகத் தன்னை அர்ப்பணித்தவன் தருமன்

ஆனால் இன்றைக்கு மக்களிடம் அர்ப்பணிப்பு உணர்வு அரிதாகி வருகின்றது. அதனால் ஒரு துறையில் மூழ்கி முத்தெடுக்க முடியவில்லை.

               அவை அறிதல். இடமறிதல். நாகரிகம். பண்பாடு முதலானவற்றைக் கடைசிக்கட்டுரை பேசுகின்றது.

               இந்நுர்ல் கால் நுர்ற்றாண்டுக்கும் முந்தைய காலச்சுவடு. இன்றைக்கு வரலாற்றுப் பெட்டகம். தமிழன்னைக்கு அருங்கலன். தமிழர்களுக்கு அறைகூவல். சிறுவர்களும் இளைஞர்களும் படித்தவர்களும் ஆய்வாளர்களும் நெறியாளர்களும் இந்நுர்லை மீண்டும் மீண்டும் புரிந்து வாசிக்கவேண்டும்.

               பேராசிரியர் (ஹரணி) அவர்கள் இதுபோல் பல அரிய நுர்ல்களை இன்னும் எழுதுவதற்கு என்னுடைய நல்வர்ழ்த்துக்கள்.

                                                                                                  என்றும் அன்புடன்
                                                                                                 மா.கோவிந்தராசு


குறிப்பு...  1.  நுர்லின் தலைப்பு நத்தையோடு என்று உள்ளது. பெரும்பாலும்
                        நத்தைக்கூடு என்றுதான் சொல்வார்கள்.

                   2. குளியல் அறையில் குதிகால் பாதம் தேய்த்துக் குளிக்கச் சொர
                       சொரப்பான கருங்கல் தங்கள் தந்தை வைத்திருந்தார். அதனைப்
                      போல் எனக்கும் ஒருகல் (கரந்தையில் கிடைக்கும்) தர இயலுமா?



பேரா. கோவிந்தராசு அவர்கள் என்மேல்  கொண்ட அன்பின்காரணமாக மிகையாகவும் அன்புபாராட்டி எழுதியிருக்கிறார். இருப்பினும் அவரின் அன்பிற்கு தலை வணங்குகிறேன்.


 அவரின் குறிப்பிற்குப் பதில்கள்.

                       நத்தைக்கூடு என்பது எழுதுகிற வழக்கு. ஆனால் பேச்சு வழக்கில்
                      அந்த நத்தையோட்டை எடு என்றுதான் சொல்வார்கள். பேச்சு
                      வழக்கைப் பயன்படுததியிருக்கிறேன்.

                       என் தந்தையார் பயன்படுத்திய கல் தற்போது இல்லை. இருப்பினும்
                      தங்களுக்காக ஒரு சொரசொரப்பான கல் வாங்கித்தர மிகவும்
                      விருப்பப்படுகிறேன்.


                        நன்றிகள்.
                      

8 comments:

  1. பேராசிரியர் மா. கோவிந்தராசு அவர்களின் பார்வையில் விமர்சனம் அருமை ஐயா... (தங்களின் பதிலும்)

    அவருக்கும் தங்களுக்கும் வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
  2. அன்புக்குரிய அய்யா,
    தங்களின் நூல் குறித்த பேராசிரியரின் விமர்சனம் நூலைப்படிக்கத் தூண்டுகிறது. கட்டுரைத் தொகுப்பென்று புரிகிறது. நூல் எங்கே கிடைக்கும் என்று சொல்லுங்கள் அய்யா. நான் அவசியம் வாங்க விரும்புகிறேன்.

    என்னுடைய பதிவு ஒன்றைப் படித்து நீங்கள் எழுதியிருந்த நீளமான விமர்சனம் என்னை மிகவும் நெகிழ வைத்தது.தங்களுக்கு இருக்கும் நேர நெருக்கடியிலும் புதியவர்களது பதிவுகளைத் தவறாமல் படித்து கருத்துக்களைத் தெரிவிக்கும் உங்கள் மேலான மனம் போற்றுதலுக்குரியது. எப்போதாவது எழுதும் எனக்கு உங்களது கருத்துரைகள் அடிக்கடி எழுதும் எண்ணத்தை விதைக்கிறது....
    நன்றி அய்யா...

    ReplyDelete
  3. பேராசிரியர் மா.கோவிந்தராசு அவர்களின் விமர்சனம் நூலைப் படிக்கும் ஆர்வத்தை மேலும் வளர்க்கிறது. வாய்ப்பு அமையும் தருணத்தில் கட்டாயம் வாசிக்க மனம் ஏங்குகிறது. நத்தையோட்டுத் தண்ணீரை ருசி பார்க்கும் நாளுக்காகக் காத்திருக்கிறேன். மனமார்ந்த வாழ்த்துக்கள் ஹரணி சார்.

    ReplyDelete
  4. பேராசிரியர் மா. கோவிந்தராசு அவர்களின் விமர்சனம் அருமை அய்யா...
    ஒரு சிறு யோசனை அய்யா. இணையத்தின் வழியாக தங்களை வாசிப்பவர்கள் அனைவராலும், தங்களது நூலைப் பெற்று வாசிப்பது என்பது இயலாத செயல் என்றே எண்ணுகின்றேன். எனவே நத்தையோட்டுத் தண்ணீரை , இணையக் கடலில் கலப்பீர்களேயானால், இப்புவி எங்கும் தங்களை வாசிப்பவர்களையும், நேசிப்பவர்களையும் நத்தையோட்டுத் தண்ணீர் சென்றடையும் என்று நம்புகின்றேன். நன்றி

    ReplyDelete
  5. அன்புள்ள

    திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு.

    உங்களின் வேகம் கண்டு வியக்கிறேன். எந்தப் பதிவாக இருந்தாலும் அயராது சென்று கருத்துரைக்கும் தங்கள்அன்பிற்கு நன்றிகள் பல. என்னுடைய பணி இறுக்கத்தினால் சில சமயங்களே உங்கள் பதிவிற்கு வரமுடிகிறது. எனவே தவறாக எண்ணவேண்டாம். வாய்ப்பமைவில் அவசியம் ஒவ்வொரு பதிவாகத் தேடிப்போய் படித்துப் புதிய செய்திகளைக் கற்கிறேன் என்பதுதான் உண்மை.

    ReplyDelete
  6. அன்புள்ள சகோதரி கிருஷ்ணப்பிரியா அவர்களுக்கு.

    வணக்கம். தங்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி.

    என்னுடைய தொடக்கக்காலந்தொட்டே எதனையும் தேடவும் கற்கவுமாக இருக்கிறேன். எனவே இதில் இளையவர் முதியவர் என்கிற பாகுபாடு கொள்வதில்லை. தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ. உங்கள் முகவரியைத் தெரிவிப்பின் அவசியம் புத்தகத்தை அனுப்பி வைக்கிறேன். படித்துவிட்டு கருத்துரையுங்கள். நன்றிகள்.

    ReplyDelete
  7. அன்புள்ள சகோதரி கீத மஞ்சரி அவர்களுக்கு


    நன்றிகள் பல.

    உங்கள் முகவரியை எழுதுங்கள். அவசியம் புத்தகம் அனுப்பி வைக்கிறேன். படித்துவிட்டு உங்கள் கருத்துரை எழுதுங்கள்.

    ReplyDelete
  8. அன்புள்ள ஜெயக்குமார்..

    வணக்கம்.

    தாங்கள் கூறும் கருத்தினை ஏற்கிறேன். ஆனால் அதனை இணையத்தில் சேர்ப்பதற்கு சில நடைமுறை சிக்கல்கள் உள்ளன.

    இருப்பினும் எதிர்காலத்தில் இதுபற்றி மனத்தில் வைத்து செயல்படுத்துவேன்.

    நன்றிகள்.

    ReplyDelete