Tuesday, March 18, 2014

பிடித்தது



                    இன்று ஒரு நண்பரைச் சந்தித்தேன். அவர் பள்ளியில் பணியாற்றுகிறார். அவர் எழுதிய பல நுர்ல்களை என்னிடத்தில் அன்பளிப்பாகத் தந்தார். ரயிலில் பயணிக்கையில் படித்தேன். சில பிடித்திருந்தன. உங்களின் பகிர்விற்கும்.

         அவரின் இயற்பெயர் கோ, பெரியசாமி
         புனைப்பெயர்  மருதம் கோமகன்

        அவர் புத்தகங்களின் தலைப்பே கவிதைகள் போல.

                                மனவயல் (வரப்புகளுக்கு உள்ளே மட்டும் அடங்கிவிடுவதில்லை)

                                இதழ்த் துர்ரிகை (கவிதைகள்)

                                இத்தொகுப்பில் சில பிடித்த கவிதைகள்

                                      காதல் பயிரை
                                     மேய்ந்து அழிக்கிறது
                                      சாதி எருமை

                                     உனது
                                     விழிமழையில்
                                     கரைந்துபோயின
                                     என்
                                     மன அழுக்குகள்...

                                   மனச்சிறகுகள் (கவிதைகள்)

                                   இத்தொகுப்பில் பிடித்த சில கவிதைகள்

                                   நான் சொல்வதெல்லாம் உண்மை
                                   உண்மையைத் தவிர வேறெதுவும் இல்லை
                                   கேட்டுக் கேட்டுப் புழுங்கியது கீதை,,

                                   மாடுகளை மேய்த்த காலம்
                                   காலமாகிப்போனது இன்று
                                   நாய்கள் மேய்க்கும் காலம்

                                   பிறந்த மேனியாய்
                                   தெருவிற்கு வந்தபிறகு
                                    எதற்கு
                                    மாடுகளுக்குக் கொம்புகள்?

                                   நிறைந்தது உண்டியல்
                                   பசித்தது வயிறு
                                   கம்பிகளுக்குள் கடவுள்

                       

                                   
                    

9 comments:

  1. கவிதைகள் அருமை...

    கோ. பெரியசாமி அவர்களுக்கும் வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  2. சிறப்பான கவிதைகள். அறிமுகத்திற்கு நன்றி ஐயா....

    ReplyDelete
  3. ///நிறைந்தது உண்டியில்
    பசித்தது வயிறு///
    பெரியசாமி போற்றப்பட வேண்டியவர்

    ReplyDelete
  4. //நான் சொல்வதெல்லாம் உண்மை
    உண்மையைத் தவிர வேறெதுவும் இல்லை
    கேட்டுக் கேட்டுப் புழுங்கியது கீதை,,//

    சிறந்த கவிதை வரிகள்..
    பதிவிட்டமைக்கு நன்றி!..

    ReplyDelete
  5. உங்களுக்குப் பிடித்தது எனக்கும் பிடித்தது

    ReplyDelete
  6. நிறைந்தது உண்டியல்
    பசித்தது வயிறு
    கம்பிகளுக்குள் கடவுள்

    ஆழ்ந்த கருத்துகள்...!

    ReplyDelete
  7. //மாடுகளை மேய்த்த காலம்
    காலமாகிப்போனது இன்று
    நாய்கள் மேய்க்கும் காலம்//
    கவிதை அருமை!

    ReplyDelete
  8. அது எப்படி, நல்ல புத்தகங்கள் மட்டுமே உங்களை வந்தடைகின்றன? எடுத்துக்காட்டியுள்ள கவிதைகள் அருமையிலும் அருமை.

    ReplyDelete
  9. காதல் பயிரை
    மேய்ந்து அழிக்கிறது
    சாதி எருமை

    இன்று நாய்கள் மேய்க்கும் காலம்

    இரண்டும் அருமை அய்யா, நல்ல கவிதைகளை அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள் பல. தொடர்க.

    ReplyDelete