சிலசமயம் சில சந்திப்புக்கள் எதிர்பாராமல் நிகழ்ந்துவிடுவது
உண்டு.
சில சந்திப்புக்கள்.
காலை 6.30 மணியளவில் மயிலாடுதுறை ரயில்நிலையத்தில்
காத்திருந்தபோது சக்கர நாற்காலியில் ஒருவரை அழைத்துவந்தார்கள். ஒருகணம் தடுமாறி அட மனுஷ்யப்புத்திரன் என்று உடனே எழுந்து அவருக்கு வணக்கம் செலுத்து வணக்கம் சார்... நான் ஹரணி என்றவுடன் முகம் மலர்ந்து நல்லா இருக்கீங்களா? என்றார். எங்க சார் இங்க என்றேன். ஒரு நிகழ்வு என்றார். அத்துடன் பேச்சு முடிந்து அழைத்துக்கொண்டுபோனார்கள். என் மனதிற்குத் தோணியது பார்த்து அழைச்சுட்டுப் போங்கப்பா.. இந்த இலக்கிய உலகின் முக்கியமான ஆளுமை என்று சொல்ல. அழைத்துக் கொண்டு வநத்வர்களுக்குத் தெரியாதா என்ன? இருந்தாலும் நமக்குப் பிடித்துப்போனவர்களைப் பார்க்கும்போது தோணுவதை என்ன செய்யமுடியும்?
உயிர்மை இதழும் மனுஷ்யப்புத்திரன் கவிதைகளும் எப்போது நினைத்தாலும் மனத்தை நிறைவாய் மழையாய் நினைத்து ஈரப்படுத்து
கின்றன.
கடந்த வியாழக்கிழமை இரவு இதே மயிலாடுதுறை சந்திப்பில் வழக்கமான ரயிலைத் தவறவிட்டுக் காத்திருந்தபோது நீண்டநாள் இலககிய நண்பர் திரு இரா.இளங்கோவை சந்தித்துப் பேசிக்கொண்டு பயணித்தோம். இல்க்கியப் புதுப்பித்தல் அது. இளங்கோ அற்புதமான எழுத்தாளன். எழுதுங்கள் என்றேன்.
ஒரு நிகழ்விற்காகத் திருச்சி சென்றிருந்தபோது மிகநெருங்கிய நண்பர்கள் இருவர். ஒருவர் முனைவர் அலிபாவா. இன்றும் மாறாத அதே அன்புடன் அதே இளமையுடன் இருபதாண்டுகளுக்கு முன்பு பார்த்த முதல் சந்திப்புபோலவே. கூடவே அவருடன் அவருடைய நண்பர் முஜ்பூர் ரஹ்மர்ன். என்னுடைய முதல் சிறுகதைத் தொகுதி உயிர்க்குடிலை நினைவுப்படுத்தி மறக்க முடியாதது என்றார்.
இந்த சந்திப்பில் என்ன சுவாரஸ்யம் என்று கேட்கலாம்.
ஆனாலும் ஏதோ ஒரு மனநிறைவு ஏறப்பட்டது சந்தித்த வேளையில். சிந்திக்கவேயில்லை. பகிர்ந்துவிட்டேன்.
இனிய சந்திப்பு என்றும் மகிழ்ச்சி... வாழ்த்துக்கள் ஐயா...
ReplyDeleteஇனிய சந்திப்பு
ReplyDeleteமனதிற்குப் பிடித்தவர்களைச் சந்திப்பதே இனிமைதானே
ReplyDeleteஒத்த சிந்தனையில் இருப்பவர்களைச்
ReplyDeleteசந்திக்கையில் ஏற்படுகிற மகிழ்ச்சி
அளவிடமுடியாததுதான்
அதுவும் இலக்கிய சிந்தனையில் என்றால்
கூடுதல் மகிழ்ச்சிதானே
சுருக்கமாக இருப்பினும் பதிவு
மனதிற்கு மிக நெருக்கமாக இருந்தது
வாழ்த்துக்கள்
இனிமையான சந்திப்புகள் தான்...
ReplyDelete//சந்தித்த வேளையில். சிந்திக்கவேயில்லை. பகிர்ந்துவிட்டேன்.// அருமை..அத்துனை இனிமை!
ReplyDeleteபுலர்காலையில் வயலோரம் நடந்து செல்கையில், பழுத்த மாங்கனி ஒன்று கையில் விழுந்தாற் போன்றது, பழைய நண்பர்களைக் காண்பது. அந்த மகிழ்ச்சிக்கு ஈடேது!
ReplyDeleteமகிழ்ச்சி.
ReplyDeleteவாழ்த்துகள்.
மனநிறைவு ஏற்பட்ட நிகழ்வுகளை
ReplyDeleteசந்தித்த வேளையில். சிந்திக்கவேயில்லை. என
ரசனக்யுடன் பகிர்ந்துவிட்டதற்கு பாராட்டுக்கள்..!