போதிமரக் கதைகளும் உபரியாய் ஒரு கவிதையும்
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
( 1 )
சோத்துல உப்புப் போட்டுத்தான திஙகற... பணம் வாங்கி
எத்தனை நாளாச்சு?
பேசாமல் நின்றான் ரவி. அவன் எதைப்பற்றியும் கவலைப்
படுவதில்லை. அவன் குடும்பமே அப்படிததான். ஊரெங்கும் கடன். தெருவில்
நின்று கடன்கொடுத்தவர்கள் கத்திவிட்டுப்போவார்கள். மானம். அவமானம்
இவற்றுக்கெல்லாம் கவலைப்படுகிறவர்கள் இல்லை.
பேசப்பேச பேசாமல் கல்லைப்போல நின்றான்.
எப்பத்தாண்டா தருவே?
தந்துடறேன் அண்ணே..
எனக்கு சோர்வானது. கிளம்பிவிட்டேன்.
என்னா பணம் கொடுத்தானா?
,,,,,,,,,,,,,,,,,,,,,,
உங்களதாங்க கேக்கறேன்.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
அழுத்தம். அத்தனை அழுத்தம். ஆனா கொடுத்த கடனை
வாங்க துப்பில்லே.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
எதுவும் பேசாமல் சாப்பிட்டுவிட்டுப் படுத்தேன். பேசினால்
விபரிதமாகும். அந்தப் பயலுக்குக் கடன்கொடுத்துவிட்டு டாக்டருக்குப்
போய் வட்டிக் கட்டமுடியாது.
0000000000000000000000000000
மேய்தலும் கடித்தலும்
காலையிலேயே வீட்டு வாசலில் நின்று கத்தினாள்
பரிமளா. ஆண்பிள்ளை குணம்கொண்ட பெண் அவள்.
ஏங்க.. உங்க நாயால என்னோட ஆடு செத்துப்போச்சு.
என்ன சொல்றே?
உஙக நாய் கடிச்சு என்னோட ஆடு அதுவும் குட்டி
செத்துப்போச்சு..
அதுககு இப்ப என்ன பண்ணணுங்க்றே,,, ஊரு ஊராப்
போய் செடி வாங்கி வச்சா.. எங்க முளைக்கவுட்டுச்சு உன்னோட ஆடுங்க..
மேஞ்சு எல்லாம் போயிடிச்சி,, அப்ப என்ன சொன்னே?
என் ஆட்டுக்கு வழி சொல்லுங்க..
நான் எதுவும் செய்யமுடியாது.
உன் நாய அடிச்சுக் கொல்றேன் பாரு. மரியாதை இறங்கியது.
தாராளமா செய்..
சொன்னதுபோலவே செய்துவிட்டாள். பத்துவருடங்களாக
இருந்த நாய்.. திடீரென தலையில் ரத்தக் காயத்துடன் இறந்துகிடந்தது.
கவலையாக இருந்தது.
வீட்டுக் கொல்லைப்புறமே புதைத்தாயிற்று.
நாலைந்து நாட்கள் கழித்து பரிமளத்தை ஆட்டோவில்
வைத்துக் கொண்டுபோனார்கள் மயங்கிய நிலையில்.
என்ன ஆச்சுன்னு தெரியலே.. ஏதோ கையில கடிச்சிருக்கு..
அலட்சியமா வுட்டுட்டா அது வலிப்பு மாதிரி வந்துடுச்சி.. மயக்கமாயிட்டா..
கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்பது நாய்க்குப்
பொருந்தாது.
0000000000000
வேலை...
உனக்கு இந்த வேலையும் கெடக்காது போலருக்கே
எனக்குத் தெரியும்.
அப்புறம் ஏண்டா இண்டர்வியுக்குப் போனே?
இதுமாதிரி இண்டர்வியுகூட வந்து நாலு வருஷமாச்சுடா..
000000000
மூன்று மீன்கள் சந்தித்துக்கொண்டன ஒரு கூடைக்குள்
ஒன்று ஆற்றுமீன்.
இரண்டாவது குளத்துமீன்.
மூன்றாவது கடல் மீன்.
மூன்றும் உயிர்பிழைத்திருப்பது வாழ்வதற்கு. ஆனால்
அது யார் வாழ்வதற்கு என்பதுதான் சிக்கல்.
மீன்களா? அல்லது அதை பிடித்தவனா?
அல்லது அதை தின்று செரிப்பவனா?
மீன்கள் முடிவுசெய்யமுடியாது அவற்றின் வாழ்க்கையை,
விற்பவனும் முடிவு செய்யமுடியாது,
தின்று முடிப்பவன் தின்னாமல் இருந்தால் எதனையும்
யோசிக்கலாம்.
நீளமான அகலமான ஆற்றில் வாழ்ந்ததுவே பெரிய
கொடுப்பினைதான். அந்த நினைவோடு என் வாழ்வை முடித்துக்கொள்கிறேன். ஆற்றுமீன்.
நீ வாழும ஆறுகளைப்போல எத்தனை ஆறுகள் வந்து
சேரும் கடல் அல்லவா நானிருநதது. என்னுடைய நினைவு பெரியது.
என்றது கடல் மீன்.
கூடையை ஒருமுறை குளத்துநீரில் மூழ்கி எடுத்தான்
பிடிததவன். அந்தக் குறைந்த நீரைப் பயன்படுத்திக் குளத்தில் துள்ளிக்
குதித்த குளத்துமீன் சொன்னது.
நமக்கான வாழ்க்கையை கடவுள் நமக்களித்திருக்கிறான். அதை யார் வாழமுடியும் நம்மைத்தவிர.
0000000000000000000
உண்மையான தொண்டு
எதையும்றியாது
உண்மையான அக்கறை
எதையும் உளறாது
உண்மையான உழைப்பு
எதையும் எதிர்பாராது
உண்மையான அர்ப்பணிப்பு
எப்போதும் விலகாது,,
விலகல் என்பது விலக்கலின்
பயத்தில் உதிப்பதுதான்,
0000
நமக்கான வாழ்க்கையை கடவுள் நமக்களித்திருக்கிறான்.
ReplyDeleteஅதை யார் வாழமுடியும் நம்மைத் தவிர!..
- தனித்துவமான வரிகள்..
இனிய பதிவு கண்டு மிக்க மகிழ்ச்சி..
குட்டிக்கதைகள் அருமையானவை. சிறுவர்களுக்கும் புரியும்படியான நீதிக்கதைகளாக இருப்பது மேலும் சிறப்பு. விலகல் என்பது விலக்கலின் பயத்தில் ஏற்படுவதுதான் என்பது உண்மையே.
ReplyDeleteஐயா வணக்கம் போதிமரக் கதை ஒவ்வொன்றும் ஒருபோதனைதான்.ஒவ்வொன்றும் ஒரு “நச்” முடிவோடு. விலகல் என்பது விலக்கலின் பயத்தால் ஏற்படுவதே. அருமை.
ReplyDeleteநமக்கான வாழ்க்கையை கடவுள் நமக்களித்திருக்கிறான். அதை யார் வாழமுடியும் நம்மைத்தவிர.
ReplyDeleteசிந்திக்கத்தூண்டும் சிறப்பான வரிகள்..
போதி மரமாய் பதிவு செழித்திருக்கிறது..பாராட்டுக்கள்.!
சின்னச் சின்னதாய் கதைகளும், கவிதையும் - ரசித்தேன்.
ReplyDelete