Friday, June 20, 2014

வேடிக்கைகள் தொடர்கின்றன,,,




                     கதையெழுதும் அனுபவம்.....



                       அப்பா ஐந்தாவது வகுப்பிலேயே தொடங்கி வைத்த வாசிப்புப பழக்கம் பள்ளிப் புத்தகங்கள் இல்லாமல் மற்ற புத்தகங்களை என்று
தொடங்கியது,

                        நானும் நண்பன் சுவாமிநாதனும் சேர்ந்து பார்வை என்ற
கையெழுதது இதழை ஆசிரியர் நாகன் எனும் பெயரோடு தொடங்கியதில்
எழுதிய கதையே தொடர்கதைகள், இரு தொடர்கள் எழுதினேன், ஒன்று மறைந்த மோதிரம் இன்னொன்று பாய்ந்து வந்த கத்தி என்பது, நன்றாக
நினைவிலிருக்கிறது,

                       இப்படி கதையெழுதத் தொடங்கிய சூழலில்  பத்திரிக்கைகளில் ஒன்று இரண்டு கதைகள் வந்தபோது படித்துவிட்டு நண்பர்கள் கேட்டார்கள்,

                         உங்க வாழ்க்கையில் நடந்ததா? என்று,

                         உங்க வாழ்க்கையில இது போன்றவை நடக்கவில்லையா?
என்று திருப்பிக் கேட்டேன,

                          ஒரு கதையில் எழுதிய பெண் பற்றிய விவரத்தைப் படித்துவிட்டு
இந்தப் பெண் எங்கிருக்கிறாள்?  உங்களுக்கு மிகவும் வேண்டியவரா?
என்றார்கள்,

                          ஒரு காவல்துறை அதிகாரியிடம் மாட்டிக்கொண்ட இளைஞனைப் பற்றி எழுதியபோது,, ஓ நீங்கதானா அது?  எந்த போலிஸ்
ஸ்டேஷன் என்றார்கள்,

                           ஒரு இளைஞன் பொறுப்பில்லாமல் ஊதாரியாய் திரிவதைப்
பற்றி எழுதியபோது துர்ரத்து உறவினர் ஒருவர் இன்னொரு உறவினரிடம்
சொல்லி உங்க பையனைப் பத்திதான் எழுதியிருக்கான் என்று சொல்லி
ஒரு சாவு வீட்டில் பிரச்சினையானது,

                            பெரும்பாலும் என்னுடைய கதைகளின் களம் குடும்பமாக
இருந்தாலும் நான் அவற்றிலிருந்து செய்திகளை எடுப்பதில்லை, எஙகேனும் செய்தித்தாள்களில் படிக்கிற போது,, எங்கேனும் பார்க்கிற போது அதில் மனம்
ஈடுபட்டு நாமாக இருந்தால் இந்தப் பிரச்சினைக்கு எப்படித் தீர்வு சொல்வேன் என்று எண்ணுகிறபோது கதையாகிவிடும்,

                               டீக்கடைகளில் யாரேனும் சிலர் ஏதேனும் ஒரு அலுவலகத்தைப் பற்றிப் பேசுவார்கள், எனவே அதனை உள்வாங்கி நாமாக
ஒன்றைப் புனைந்து எழுதினால்,

                                  நீங்க வேலை பாத்தீங்களா? அப்புறம் ஏன் விட்டீங்க?
கதை எழுதியதால அனுப்பிட்டாங்களா,,,

                                   ஒரு கதையில் ஒருவன் கர்ப்பிணி மனைவியிடம் சண்டை
போடடுவிட்டு அலுவலகம் போவான், அலுவலகத்தில் செய்யாத தவறுக்குப்
பொறுப்பேற்பான்,அப்புறம் அது அவன் மேல் தவறில்லை என்று நிருபிக்கப்படும், உடனே மனைவியை நினைத்துக்கொள்வான்,
மாலையில் திரும்பும்போது திராட்சை வாங்கிகொண்டு போவதாக கதையை முடித்திருந்தேன்,

                          பொதுவாக தஞ்சாவூர் சாலைகளில் தள்ளுவண்டிகளில் அதிகம் காணக்கிடைப்பது பன்னீர் திராட்சைதான், எனவே அது மனத்தில் பதிவாகி
கதையில் வெளியானது,

                            உறவுக்காரப் பெண் ஒருவர் என்னிடத்தில் கேட்டார் உங்க மனைவிக்கு பன்னீர் திராட்சைதான் பிடிக்குமா?

                          எதை எழுதினாலும் படிக்கிறவர்கள் உடனே அதனை படைப்பாளியோடு இணைத்து பேசுவது தொடர்ந்துகொண்டிருக்கும் வேடிக்கைதான்,

                          அன்றுதொட்டு இன்றுவரை நேர்ந்து கொண்டேயிருக்கிறது,

                           வாழ்க்கையை மீறியதான ஒன்றைப் படைப்பாகத் தந்துவிட
முடியாது, எல்லோர் வாழ்க்கையிலும் நடப்பதுதான், அது படைப்பாக
உருவாகும்போது சறறு கற்பனை கலந்து வேறுஒரு முடிவாக வெளிபப்டு
கிறது,

                            பாத்திரங்களுக்குப் பெயர வைக்கிறபோது அதன் பண்பிற்கேற்ப
பெயர்களை வைப்பேன், சமயங்களில் சில பெயர்கள் வந்துவிடும், உடனே
உறவுக்காரர்கள் இது என்ன அவ பெயரை வச்சிருக்கே?  அவ்ங்க வீட்டுல ஏதும் பிரச்சினையாயிடும்,, அவங்க கதையெல்லாம் எழுதாதே என்பார்கள், பெயரைத்தவிர எல்லாமும் வேறு கதையாக இருந்தாலும இப்படிப்
பிரச்சினை இருந்தது,

                                 கவிதை எழுதினால்... இது அவருதானே?  அவருக்கு இது தெரியுமா? அவர் இதைப் படிச்சாரா? என்ன சொன்னாரு,, உன் மேல
கோவிச்சுக்கலே,,, அபரிமிதமான  கற்பனைக்குப் போய்விடுவார்கள்,

                                  ஒருவரின் வாழ்க்கை இன்னொருவரின் கதையாகும், இன்னொருவரின் வாழக்கை வேறொருவரின் வாழ்க்கையாகும்,

                                    சின்ன வயதில் படித்த கதை ஒன்று


                                  ஒரு மருத்துவரிடம் ஒருவன் உதவியாளனாகச் சேர்ந்தான்,
அவனும் மருத்துவம் படித்தவன்தான்,

                                  நான் செய்வதைக் கவனமாகப் பார்த்துக் கற்றுக்கொள்
என்றார் மருத்துவர்,

                                   ஒருமுறை ஒரு நோயாளியைப் பார்க்க இருவரும்
போனார்கள், கட்டிலில் படுத்திருந்தவருக்கு வயிற்றுப்போக்கு,
மருத்துவர் கட்டிலுக்குக் கீழே குனிந்து பார்த்தார் நிறைய வாழைப்பழத்
தோல்கள் கிடந்தன,

                                    வாழைப்பழம் அதிகம் சாப்பிட்டீர்களா?
என்றார்,

                                   ஆமாம் என்று நோயாளரி பதில் சொன்னார், மருந்துகள்
எழுதிக் கொடுத்துவிட்டு வந்தார்,

                                      அடுத்தமுறை சீடர் மட்டுமே செல்லவேண்டி
இருந்தது, இதுவும் வயிற்றுப்போக்குதான்,  இவரும் மருத்துவர்
குனிந்து பார்த்ததுபோல நோயாளியின் கட்டிலின் கீழே பாரத்தார், புலித்தோல்
கிடந்தது,

                                      புலியைச் சாப்பிட்டீர்களா?


                                      நிறைய அனுபவங்கள் உள்ளன,  வாய்ப்பமைவில்
பகிர்ந்துகொள்கிறேன்,

                         

                           

8 comments:

  1. ஐயா வணக்கம். சிறுகதைகள் எழுதியவன் என்பதால் என் எண்ணங்கள் சிலவற்றைப் பகிர்ந்து கொள்கிறேன் அது என்னவோ கற்பனை செய்து எழுத முடியாது என்று பலரும் நினைக்கிறார்கள். என் சிறுகதை பார்வையும் மௌனமும் -ல் வரும் கண்ணிழந்த மாது நான் என் மூன்றோ நான்கோ வயதில் கண்ட ஒரு உறவினர் நினைவால் எழுந்தது. மற்றபடி சம்பவங்கள் எல்லாம் கற்பனையே. எங்காவது யாரையாவது சந்தித்துவிட்டால் அவர்கள் நினைவில் சில கற்பனைகள் தோன்றும் . ஒவ்வொரு முறையும் இது யாரையும் குறிப்பிடுவதல்ல என்று சொல்ல முடியுமா. என் எழுத்துக்களை படிக்க என் உறவினர் பலருக்கு தமிழ் தெரியாது.

    ReplyDelete
  2. அன்புள்ள ஐயா

    வணக்கம். நாம் கற்பனை செய்வதுகூட இந்த வாழ்க்கையின் உள்ளேதான் யாரோ எங்கோ வாழ்ந்துகொண்டிருப்பதுதான் என்பதை மறுக்கமுடியாது, ஆனாலும் தாங்கள் சொல்வதுபோல ஒரு சிறுபொறியினை நாம்தான் நம்முடைய எண்ணங்களால் மலையாக மாறறுகிறோம். நான் முதன் முதலில் எழுதிய சிறுகதை (அதாவது பிரசுரமான கதை) பறக்க மறந்த சிறகுகள், அந்தக் கதையின் நாயகி ஒருசிறிதும் அதிர்ஷ்டமில்லாதவள் என்பதால் அவளுக்கு யோகலெட்சுமி என்று பெயரிட்டிருந்தேன், அந்தக் கதை என்னுடைய புகைப்படத்துடன் வெளியானபோது கிட்டத்தட்ட தினமும் அஞ்சல் காரரிடம் கடிதம் பெற்றுக்கொண்டேயிருப்பேன், 70 கடிதங்களுக்கு மேல் வந்தன, அவற்றுள் சில கடிதங்கள் இன்னும நினைவில் உள்ளன, ஒரு கடிதம் கேரளாவில் கொல்லம் மாவட்டத்திலிருந்து எல்எம்ஸ் மருத்துவமனையில் நர்சாக வேலைபார்க்கும் யோகலட்சுமி என்கிற பெண்ணிடம் இருந்து வந்தது, அப்போது அது மயக்கம்தரும் கடிதம் எனக்கு, அதற்குப் பதில் எழுதினேன், மறு கடிதம் வந்தது, அந்தக் கடிதத்தை குண்டாராவிற்கும் கரந்தைக்கும் வெகுதுர்ரமில்லை என்று மைலைத் துல்லியமாகக் கணக்கிட்டு உங்களுக்காகக் காத்திருக்கும் குண்டாரா குயில் என்றுகையொப்பமிட்டு வந்திருந்தது, அந்தக் கடிதங்களை வெகு நாட்கள் சேமித்து வைத்திருந்தேன். ஒவ்வொன்றாகத் தொலைந்து கடைசியில தொலைந்தது யோகலட்சுமியின் கடிதமும் கோட்டையூர் காயத்ரியின் கடிதமும் சேர்ந்துதான், அதிலே நான்சேமித்து வைத்திருப்பது இன்றளவும் முதல் கடிதமாக எழுதப்பட்ட பழனி ராகுலதாசன் அவர்கள் கடிதத்தை மட்டுமே, நான்கு வரிகளில் மனதைத் தொடும் ரசனையான வாசகக் கடிதம் அது, இன்றும் நட்பில் இருக்கிறார் அந்தப் பேராசிரியரும் படைப்பாளியுமான பழனி இராகுலதாசன். எதையே எழுதப்போய் என்னென்னவோ நினைவுகள்.

    நன்றி தங்களின் கருத்துரைகளுக்கு.

    ReplyDelete
  3. அனுபவங்களைத் தொடருங்கள் ஐயா

    ReplyDelete
  4. உங்கள் படைப்புகளின் அனுபவங்கள் மிக அருமை ஐயா. தொடர்ந்து பகிருங்கள்..

    ReplyDelete
  5. ரசிக்க வைக்கும் அனுபவங்கள் ஐயா...

    ReplyDelete
  6. எழுத்தாளனைச் சரியாகப் புரிந்துகொள்பவர்கள் குறைவு. அதுபோலவே, எழுத்துத் துறைக்கு வந்துவிட்டபிறகு எழுத்தாளனாலும் பிறரைச் சரியாகப் புரிந்துகொள்ள முடிவதில்லை. பெரும்பாலும் ஏமாந்து போகிறான். அல்லது ஏளனத்திற்கும் கோபத்திற்கும் ஆளாகிறான்.

    ReplyDelete
  7. ரசிக்க வைக்கும் அனுபவங்கள்.

    ReplyDelete
  8. சுவாரஸ்யமான பகிர்வுகள்..

    ReplyDelete