வாங்க வாங்க சிட்டுக்குருவி
எங்கே வந்தீங்க?
பறந்து பறந்து களைச்சுபோச்சு
சும்மா இருங்க..
வேப்பமரத்துக் குடைக்குக் கீழ
என்ன பண்றீங்க?
பறந்த களைப்பு போககத்தான்
இளைப்பாற வந்தேங்க..
வாங்க வாங்க தவிட்டுக்குருவி
எப்போ வ்ந்தீங்க?
சிட்டுக்குருவி தம்பி பாத்து ரொம்ப நாளாச்சுங்க..அவன்கூட
சிநேகம் பண்ண இப்ப வந்தேங்க..
என்ன வேணும் என்ன வேணும்
இப்போ கேளுங்க.-?
கொத்தி சீய்ச்சு திங்க அரிசி
கொஞ்சம் இருக்கா இப்ப சொல்லுங்க..
தாராளமா தாராளமா அரிசி தரேங்க
சந்தோஷமா சந்தோஷமா நீங்க தின்னுங்க..
அடடா தேன்சிட்டு தேன்சிட்டு
எப்போ வந்தீங்க?
நான் வந்து நேரமாச்சு நீங்க
பாக்கல...
உங்களுக்கும் என்ன வேணும்
உடனே கேளுங்க..தேன்சிட்டு
உடனே கேளுங்க.....
இந்த அன்பு துன்பமில்லா
எப்பவும் வேணுங்க..எங்களுக்கு
எப்பவும் வேணுங்க..
நிச்சயமா நிச்சயமா அன்பு
காட்டுவேன்...
ஆசை தீர ஆசைதீர
அன்பு காட்டுவேன்..
எல்லா உயிர்க்கும் அத
சேத்துக் காட்டுவேன்...
சேத்துக் காட்டுவேன்..
பாடல்...2
காக்கா பாரு காக்கா பாரு தம்பி
உன் காரியத்தில் கண் வையுடா தம்பி..
கிளிய பாரு கிளிய பாரு தம்பி
கிடுகிடுன்னு துள்ளியாடு தம்பி...
குயில பாரு குயில பாரு தம்பி
தாய்த் தமிழைப் பேசிப்பாரு தம்பி..
முயல பாரு முயல பாரு தம்பி
முன்னேற வழிய பாரு தம்பி...
எல்லாம் பாரு எல்லாம் பாரு தம்பி
ஏமாந்து போகாதே தம்பி...
0000000000
ஆசை தீர ஆசைதீர ரசித்தேன் ஐயா...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
தளத்தின் புதிய தோற்றம் அழகு!..
ReplyDeleteபறவைப் பாட்டுகள் அருமை!..
சிட்டுக் குருவிகள் அருகிவரும் காலத்தில் சிறார்களுக்கு அவற்றைப் பேண வேண்டியதை அழகு பாடலில் உணர்த்தி உள்ளீர். பாராட்டுக்கள் ஐயா/
ReplyDelete