Sunday, October 5, 2014

அன்பு வேண்டுகோள்

அன்பு வேண்டுகோள்...

     
                    அனைவருக்கும் வணக்கம்.

                    என்னுடைய பேருந்து நாவல் வெளிவந்திருக்கிறது என்று முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். இதனை முன்னோட்டமாக வலைப்பக்கத்தில் எழுதியபோது இதற்கு நிறைய கருத்துக்கள் வந்தன. மகிழ்ச்சியாக இருந்தது.  ஐநது நாவல்கள் பாதிக்குமேல்  வளர்ந்து நின்றிருக்கும் நிலையில் இந் நாவல் முழுமையுற்றிருக்கிறது. கருத்துரைத்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள்.

              குறிப்பாக வெளிவந்த குறிப்பிட்ட சில வாரங்கள் வரை தொடர்ந்து கருத்துக்கள் உரைத்தவர்கள்

                       மதிப்பிற்குரிய ஜிஎம்பி ஐயா
                       திருமிகு ரிஷபன்
                       சகோதரி கீத மஞ்சரி
                       சகோதரி நிலா மகள்
                       இளவல் ஜெயக்குமார்

உங்களுக்கு தனிப்பட்ட நன்றிகள். அன்புகூர்ந்து உங்கள் இல்ல முகவரியை எனக்கு மின்னஞ்சல் வழி தெரிவிப்பின் நாவலை அனுப்பிவைக்க ஏதுவாகும்.

                            நன்றிகள்.

000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

                     


5 comments:

  1. ஐயா வணக்கம். என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. வேலை ஏதும் இல்லாத என்னாலேயே பலரது வலைப்பூக்களுக்குச் சென்று வாசிக்க முடிவதில்லை. காலை மூன்றரை மணியிலிருந்து இரவு பதினோரு மணிவரை உழைப்பில் இருக்கும் உங்கள் நிலை புரிகிறது. உங்கள் நாவலை எனக்கு அனுப்பும் சிரமம் வேண்டாம். நானே நேரில் வந்து இயலும் போது பெற்றுக் கொள்கிறேன். இருந்தாலும் உங்கள் வரவும் கருத்துப் பதிவும் உற்சாகம் அளிப்பது என்பதே உண்மை,

    ReplyDelete
  2. மிகுந்த மகிழ்ச்சி ஐயா
    நேரே தங்களைச் சந்தித்து பேரூந்து நாவலைப் பெற்றுக் கொள்கின்றேன் ஐயா

    ReplyDelete
  3. அன்புள்ள ஜெயக்குமார்

    வணக்கம். நானே உங்களை நேரில் சந்தித்துத் தருகிறேன்.

    ReplyDelete
  4. வாழ்த்துகள் ! தங்களின் தொடர் எழுத்து முயற்சிகள் என்னைப் போன்ற பலருக்கு உற்சாகமூட்டும் டானிக் !

    ReplyDelete
  5. மனமுவந்த பாராட்டுக்கள்!

    ReplyDelete