Sunday, April 19, 2015

விகடனில் வந்த என் கவிதை

எனக்கு எல்லாமும் தெரியும்
என்று ஒருபோதும்
சொல்வதில்லை
எல்லாமும் தெரிந்தவன்...
உயர்ந்தோங்கிய
மலையின் மாண்பிலிருந்து
பேரிரைச்சலால்
கீழிறங்கிவிடுகிறது அருவி..
தவளைகளின் பல்வகைக்
கத்தல்கள் என்றைக்கும்
இசையானதில்லை.
ஆனாலும் ஆரவாரமும்
ஆர்ப்பாட்டமும் மிக்கதுகள்
தவளைகளை மதிப்பிற்குரியனவாக
மாற்றிவிடுகின்றன..
தேர்ந்த கல்லின்
தேர்ந்த சிலை உணர்த்தும்
தேர்ந்த சிற்பியைப் போல
பலர் இந்த உலகின்
மனித வாழ்வை
செதுக்கிக் கொண்டே
இருக்கிறார்கள்...
நன்றி... ஆனந்தவிகடன்

6 comments:

  1. வணக்கம்
    ஐயா.
    விகடனில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. ஹரணி சார்,
    //உயர்ந்தோங்கிய
    மலையின் மாண்பிலிருந்து
    பேரிரைச்சலால்
    கீழிறங்கிவிடுகிறது அருவி..//

    அதனால் தான் அருவியை நீர் வீழ்ச்சி என்றோமோ?
    உங்கள் கற்பனை நயமானது.

    'ஆனந்த விகடனுக்கு' நம் வாழ்த்துக்கள். வானவில் மனிதனில்' 'அங்கிங்கெனாதபடி' உங்கள் பார்வைக்காய்...

    ReplyDelete
  3. ஆனாலும் ஆரவாரமும்
    ஆர்ப்பாட்டமும் மிக்கதுகள்
    தவளைகளை மதிப்பிற்குரியனவாக
    மாற்றிவிடுகின்றன..

    ஆகா
    உண்மை

    ReplyDelete
  4. உண்மையை ரசித்தேன் ஐயா...

    ReplyDelete
  5. நாம் என்னதான் எழுதி பதிவர்கள் எத்தனை பேர் படித்தாலும் பத்திரிக்கைகளில் வெளிவரும்போது அதன் மவுசு கூடுகிறது இல்லையா ஹரணி சார்

    ReplyDelete
  6. தேர்ந்த கல்லின்
    தேர்ந்த சிலை உணர்த்தும்
    தேர்ந்த சிற்பியைப் போல//

    வாய்த்தவர்கள் பாக்கியவான்கள்!

    ReplyDelete