Monday, June 8, 2020

கொரோனா காலக் கவிதைகள்




         0000

         முகக்கவசம் அவசியந்தான்
          இப்போது
          ஆனால் காலங்காலமாய்
         உள்ளொன்றும் புறமொன்றும்
         பலரின் மனதுகள்
         நிறைய கவசங்களுடன்தான்

         000

         இப்போது வீடுகளில்
         புரிதல் நடவடிக்கைகள்
          கணவன் மனைவியையும்
          மனைவி கணவனையும்
          பிள்ளைகள் பெற்றோர்களையும்
          எல்லோரும் உறவுகளையும்
          புரிந்துகொள்ளல் நடக்கிறது
          தொற்றா உறவுகள் என்றதெல்லாம்
          தொற்றில் பற்றுறவுகளாய்.

          000

           புதிய சாலையில் சென்றால்
           குரைத்துத் துரத்தும் நாய்கள்
           இப்போது முகக்கவச மனிதர்களைக்
           கண்டு குரைக்காதிருக்கின்றன
           வாழப் பழகிக்கொள்கின்றன

           000

            ஊரடங்கில் இருந்தாலும்
            தொற்றில்தான் இருக்கிறது
            நம் காதல்.

            000

            எண்பது வயதைக் கடந்த
             அம்மா சொல்கிறாள்
            இப்போது சாகக்கூடாது
            எழூரு சனமும் வந்துதான்
            எம்பொணம் போவணும்
            அத்தனை பேரோடயும்
             சாதி சனத்தோடயும்
             பொறந்து வளந்தவ நான்
             அநாதைன்னு யாரும்
              சொல்லிடக்கூடாது..
             ஏமூரு வந்தால் என்ன
             ஏழு பேர் வந்தால் என்ன
             அம்மா அறிவாளா உயிர் நீங்கியபின்
             என்பதில்லை
             உறவுகளின் நம்பிக்கை
             அதுதான் வாழ்ந்த வாழ்வின் அடையாளம்.

            000
         


9 comments:

  1. கவிதை மனதில் கிச்சென தொற்றிக்கொண்டது..

    ReplyDelete
  2. அனைத்தும் சிறப்பு.

    //வாழப் பழகிக் கொள்கின்றன// :))))

    ReplyDelete
  3. கவிதைஅல்ல அவை கொரோனாக்காலத்தில் மனிதமனங்களை படம்பிடித்துக்காட்ட உங்களல்தான் முடிய்ம்

    ReplyDelete