Thursday, November 17, 2011

குழந்தைப் பாடல்கள்

குழந்தை இலக்கியம் குறித்து அதிகம் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படாத சூழல் இன்றைக்கும் நிலவுகிறது. இன்னொருபக்கம் குழந்தைகள் இலக்கியம் குறித்து அக்கறையுள்ள இலக்கியப் படைப்பாளிகளும் இதழ்களும் கவனம் செலுத்துகின்றன. நம்முடைய பங்கிற்கும் எதாவது செய்யவேண்டும் என்கிற உந்துத்ல் எப்போதும் மனத்தில் சுழன்றுகொண்டேயிருக்கிறது. தவிரவும் நீண்ட நாட்களாகிவிட்டன குழந்தைப் பாடல்கள் எழுதி. எனவே சில பாடல்கள் மறுபடியும்.அணில்குட்டி

அணில்குட்டி அணில்குட்டி
அழகான அணில்குட்டி
முதுகுமேல திருநீறு
பூசிக்கிட்ட அணில்குட்டி
தாவிதாவி ஓடுமாம்
தரைமேலேயே தாவுமாம்
வாலவால ஆட்டிக்கிட்டு
ராம்ராம்னு பாடுமாம்
கருப்புமுழி கருகமணி
முழிச்சிக்கிட்டு கத்துமாம்
கட்டைசுவத்துமேல
நின்னுகிட்டு வரம்கேட்டு
ஆடுமாம்...

000000


வானம் முழுக்கப் பாருங்க
கண்ண சிமிட்டி கண்ண சிமிட்டி
காடடும் அழகு நட்சத்திரம்...

அம்மா நிலவு மெல்ல வந்து
அன்பாய் சிரித்துப் பாலுர்ட்டும்
கர்ற்று அடித்து காற்று அடித்து
மேகம் நிலவை மறைக்குமாம்...

கண்ண சிமிட்டி கண்ண சிமிட்டி
நட்சத்திரம் வேண்டாம் வேண்டாம்
என்குமாம்...

மேகம் ஓடி அழுவுமாம்
அம்மா நிலவு சிரிக்குமாம்..

அன்பு என்ற சக்தியை
அம்மா என்ற சக்தியை
யாரும் மறைக்க முடியாதாம்...

அம்மாபோல அன்புகாட்டி
அனைவருமே வாழுவோம்...

00000


காட்டுக்குள்ளே திருவிழா
கலகலன்னு நடக்குமாம்..

குயிலு அக்கா பாடுமாம்
மயில அக்கா ஆடுமாம்
ஓடிஓடி முயலு அண்ணா ஓயாம
அழைக்குமாம் வாங்க..வாங்க்..வாங்க..

சிங்கம் மாமா தலைமையில்
சிறுத்தை அண்ணா கச்சேரி
மான்கள் கூட்டம் மத்தளம்
மயக்கும் இசையில் நடக்குமாம்..

வகைவகையா விதவிதமா
விருந்து எல்லாம் நடக்குமாம்
பச்சைப்பச்சை காய்கறி
பழுக்கப் பழுக்க பழங்களாம்
பட்டாம்பூச்சி மெத்தையாம்
பளபளன்னு மின்னுமாம்...

குருவி வந்து சிரிக்குது...கரடி வந்து உறுமுது
யானை வநது பிளிறுமாம்..குதிரை வந்து கனைக்குமாம்..
எல்லாம் வந்து கூடிக்கூடி
பேசிப்பேசி களிக்குமாம்...

மிருகமெல்லாம் மிருகமா
பறவையெல்லாம் பறவையா
பண்போடு இருக்கணும்
பாழும் மனுசன் குணத்தைப் பார்த்து
பாதை மாறக்கூடாதாம்..

அதுக்குத்தான் திருவிழான்னு
தீர்மானமா சொன்னிச்சாம்
விருந்து வாசம் வந்துச்சாம்
திருவிழாவும் முடிஞ்சிச்சாம்..

00000

16 comments:

 1. சார்! காட்டுக்குள்ளே திருவிழா அமர்க்களம். என் பசங்ககிட்ட காமிக்கிறேன். நன்றி. :-)

  ReplyDelete
 2. அன்புள்ள ஆர்விஎஸ் உங்களின் வேகமான கருத்துரைக்கு நன்றிகள். ஒன்றை பதிய மறந்துவிட்டேன். இந்தப் பாடல்களை எப்படிவேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

  ReplyDelete
 3. அருமையான பாடல்கள்
  குழந்தைகளுக்காக எழுதுவதுதான்
  மிகக் கடினம் என்பது எனது திடமான எண்ணம்
  நமது கிரீடங்களை முகமூடிகளை கழற்றிவைத்து
  அவர்கள் உலகுக்குள் நுழைய ஒரு தனித் திறன் வேண்டும்
  மனதும் வேண்டும்
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. அருமையான குழந்தைகளுக்கான பாடல்கள்... இன்றே குழந்தைக்கு படித்துக் காட்டுகிறேன்....

  தொடருங்கள்....

  ReplyDelete
 5. அருமையான குழந்தைகள் பாடல் .மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .

  ReplyDelete
 6. ரொம்ப நல்லாயிருக்கு சார்,அணில் பாடல் என் மகளுக்கு.

  ReplyDelete
 7. வணக்கம் துரை.டேனியல் சார். தஙகளின் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள்.

  ReplyDelete
 8. வணக்கம் ரமணி சார். எப்போதுமே எனக்கு குழந்தைகள் படைப்பிலக்கியம் குறித்த ஆர்வம் அதிகம் உண்டு. அதைகுறித்த நீண்ட சிந்தனையில் இருக்கிறேன். விரைவில் அவை தனித்த படைப்பாகக் கொண்டுவரத் திட்டம். தங்கள் கருத்துரைகளுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 9. நன்றி வெங்கட்ராஜ். குழந்தைகளிடம் படிததுக்காட்டி கருத்து கேளுங்கள். அதை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள். ஆர்வமாக இருக்கிறேன்.

  ReplyDelete
 10. தஙக்ளின் இனிய முதல் வருகைக்கு நன்றி அம்பாளடியாள் அவர்களே.

  ReplyDelete
 11. வணக்கம் திருமதி பி.ஸ்ரீதர். தங்கள் மகளுக்கு அணில் பாடலைச் சொல்லிக்காட்டுங்கள். தங்கள் மகளின் மழலையை (கருத்தை) எனக்குப் பதிவு செய்யுங்கள். ஆர்வமுடன் காத்திருக்கிறேன். நன்றிகள்.

  ReplyDelete
 12. என் பேரனுக்குப் படித்துக் காட்டுகிறேன். ஆனால் என்ன செய்ய. ?ஒவ்வொரு வரியையும் படித்து பொருள் சொல்லி ஆர்வமெற்படுத்த முடிகிறதா பார்க்கிறேன். ஏனென்றால் பிறந்ததிலிருந்தே ஆங்கிலம் அல்லவா போதிக்கப் படுகிறது. என் பேரனிடம் நான் தமிழில் பேசினால் அவன் எனக்கு ஆங்கிலம் தெரியாதா என்றல்லவா கேட்கிறான். உங்கள் ஈடுபாடும் முயற்சியும் பாராட்டத்தக்கது. வாழ்த்துக்கள் ஹரணி ஐயா.

  ReplyDelete
 13. குழந்தை இலக்கியம் மிகக் கடினம்..
  பாடலகளை மிகவும் ரசித்தேன்..

  ReplyDelete
 14. அணில் பாடலை எனக்குத் தெரிந்த கை,முக பாவனைகளுடன் பாடிக்காமித்தேன்.முகத்தில் மிக மகிழ்ச்சி மகளுக்கு.ஹ்ஹேன,ஹ்ஹேனு சிரிப்பு,திருநீரு,கருப்புமுழி,கருகமணிக்கு மட்டும் விளக்கம் கொடுத்தேன்.

  ஏற்கனவே அணிலே அணிலே ஓடிவா அழகு அணிலே ஓடிவா என்ற பாடல் அவளுக்கு அறை குறையாகத் தெரியும்.

  இந்த பாட்டு இந்த அங்கிள்தான் சொல்லித்தந்தாருன்னு உங்கள் வலைதளத்தில் உள்ள உங்கள் புகைப்படத்தை காண்பித்தேன்.மற்ற படங்களையும் பார்த்து சந்தோசப்பட்டாள்.

  மறுபடியும் சொல்லு என்றாள்,மீண்டும் ரைம்ஸாக பாடிக்காடினேன்.மீண்டும் சிரிப்பு,பிறகு கவனமெல்லாம் பின்னூட்டங்களில் உள்ள வரிசையான புகைப்படத்தின்மேல் போய்விட்டது.

  அம்பாளடியாளின் படத்தில் ராதை ஆடுவதாக சொன்னாள்.வேறு,வேறு கவனம் போகவும் பாட்டை காப்பி செய்துகொண்டுள்ளேன்.மீண்டும் சொல்லித்தரலாம் என்பதற்காக.என் மகள் எல்.கே.ஜி படிக்கிறாள்.

  ReplyDelete
 15. வணக்கம். உங்களுடைய மறுபதிவிற்கு என்னுடைய பொறுப்பான நன்றிகள். ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. உங்கள் குழந்தைக்கென இன்னும் எளிமையான பாடல் ஒன்றை ஓரிரு நாட்களில் எழுதுகிறேன். தொடர்ந்து வாருங்கள நன்றிகள்.

  ReplyDelete

Follow by Email