Monday, September 29, 2014

பரிசுஅன்புள்ள வணக்கம்..


                  இடைவெளிகள்தான் அன்பைத் தக்க வைக்கின்றன எனலாம்.

                 வேலைப்பளு படைப்பிலக்கியப் பணிகள் என்று நாள்கள் கடநதுவிட்டன.

                 இந்த இடைவெளியில் நிறைய மகிழ்ச்சிகள்.

                 1. முன்பு சொன்னபடி அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில்
                     இரண்டாம் பரிசு.

                 2. செல்லாத நோட்டு எனும் சிறுகதைத் தொகுப்பின் சில கதைகள்
                     கல்லுர்ரிப் பாடத்திட்டத்தில் பாடமாக சேர்க்கப்பட்டுள்ளன.

                 3. தற்போது நேற்று தினமலர் வாரமலர் டிவிஆர் நினைவுச் சிறுகதைப்
                     போட்டியில் என் கதைக்கு முதல் பரிசு ..... ( சிறுகதைத் தலைப்பு                                 அவளும் அம்மாதான்...) கிடைத்துள்ளது.

                  4. பேருந்து நாவல் வெளிவந்துவிட்டது.

                 
           தொழில் நுட்பம் தெரியாததால் பரிசுக் கதைகள்  இரண்டையும் வெளியிடுவதில் தாமதம் நேர்கிறது. விரைவில் இன்னும் இரு நாட்களில் வெளியிட்டுவிடுகிறேன். படித்துவிட்டு உங்களின் கருத்து எதுவாயினும் தெரிவிக்கவேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

14 comments:

 1. மேலும் பல சிறப்புகளை எய்திட நல்வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 2. மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

  //தற்போது நேற்று தினமலர் வாரமலர் டிவிஆர் நினைவுச் சிறுகதைப் போட்டியில் என் கதைக்கு முதல் பரிசு ..... ( சிறுகதைத் தலைப்பு: அவளும் அம்மாதான்...) கிடைத்துள்ளது.

  நேற்றே இந்தக்கதையைப்படித்து விட்டேன். உடனே தங்களுக்கு மெயில் கொடுத்துப் பாராட்டியுள்ளேன். தாங்களும் பதில் அளித்துள்ளீர்கள். வித்யாசமான சமூக சிந்தனைகளுடன் கூடிய மாறுபட்ட கதைக்கரு ......... பரிசுக்குத்தேர்வானதில் ஆச்சர்யமே இல்லை.

  மேலும் பல வெற்றிகள் தொடர்ந்து கிடைக்கட்டும். சந்தோஷம்.

  ReplyDelete
 3. மனமார்ந்த வாழ்த்துக்கள் திரு.ஹரணி.

  ReplyDelete
 4. மனங்கனிந்த வாழ்த்துக்கள் அய்யா.

  ReplyDelete
 5. வலைப் பதிவில் பேரூந்து நாவல் முற்றுப் பெற்றதாய்த் தெரியவில்லையே. மென்மேலும் புகழ் வளர வேண்டி வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. பரிசு மழையில் நனைந்திருக்கும் தங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா
  மழை தொடரட்டும்

  ReplyDelete
 7. அன்புள்ள துரை செல்வராஜ் அவர்களுக்கு,

  வணக்கம். தங்களின் அன்பான வாழ்த்திற்கு நன்றிகள்.

  ReplyDelete
 8. அன்புள்ள வைகோ ஐயா

  வணக்கம். தங்களின் அன்பிற்குப் பணிகிறேன். நன்றிகள்.

  ReplyDelete
 9. அன்புள்ள மிருணா

  வணக்கம். நன்றி. எழுதுகிறீர்களா? உங்களின் கவிதைகளைத் தொடர்ந்து வாசிக்கவேண்டும்.

  ReplyDelete
 10. அன்புள்ள சிவகுமரன்

  வணக்கம். உங்களின் வலைப்பதிவிற்கு வந்து நாட்களாகிவிட்டன. மகிழ்ச்சியாக உள்ளது உங்கள் பதிவிற்கு வரும்போதெல்லாம். உங்களின் வெண்பாக்கள் எப்போதும் உங்களின் மேலான அன்பைக் கூட்டுகின்றன.

  ReplyDelete
 11. அன்புள்ள ஐயா

  வணக்கம். உங்களின் வலைப்பதிவிற்கும் மற்றும் நண்பர்கள் வலைப்பதிவுகளுக்கு வந்து நாட்களாகிவிட்டன. வரவேண்டும். தாங்கள் குறிப்பிட்டது உண்மைதான். பேருந்து நாவலின் ஓட்டம் எப்படியிருக்கிறது என்பதைப் பார்க்கத்தான் அதை சில இயல்கள் பதிவிட்டேன். நாவல் முடிவடைந்துவிட்டது. விரைவில் உங்களுக்கு அனுப்புகிறேன். அம்மா, தங்கள் மகன், பேரன் எல்லோரும் நலமா? தொடர்ந்து பல்வேறு அலுவலகப் பொறுப்புக்களில் இருப்பதால் நகரமுடிவதில்லை. தவிரவும் கொஞ்சம் புத்தகங்கள் அச்சில் ஓடிக்கொண்டிருக்கின்றன. காலையில் 3.30 க்கு எழுபவன் இரவு பதினொரு மணிக்குத்தான் உறங்கச் செல்கிறேன். வேலைகள். தளர்வில் உங்கள் பதிவிற்கு வருவேன். நன்றிகள்.

  ReplyDelete
 12. அன்புள்ள ஜெயக்குமார்..

  வணக்கம். தங்களின் புத்தகம் எந்த நிலையிலுள்ளது? தங்களின் அன்பான வாழ்த்திற்கு நன்றிகள். தொடர்ந்து எழுதுங்கள்.

  ReplyDelete
 13. சிறுகதையை வாசித்துவிட்டுத் தங்கள் வாழ்த்தைப் பகிர்ந்துகொண்ட பெரியவர்கள், சான்றோர்கள், மற்றும் பின்வரும் சகோதர, சகோதரிகளுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ளும் அதே தருணத்தில் இதனைத் தொடர்ந்து தக்க வைக்கவேண்டும் என்கிற அச்சவுணர்டனும்...

  மாண்பமை துணைவேந்தர் அவர்கள், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞசை.
  பேரா. சா. உதயசூரியன், தமிழ்ப் பல்கலைக்கழகம்.

  திரு ரிஷபன், எழுத்தாளர், திருச்சி.
  திரு மதுமிதா, எழுத்தாளர், தஞ்சாவூர்.
  திரு அண்டனுர்ர் சுரா, எழுத்தாளர், அண்டனுர்ர்.
  திரு நாகராஜன், நிருபர், தி. இந்து நாளிதழ், சென்னை.
  திரு பட்டுக்கோட்டை ராஜா, எழுத்தாளர் (கடித வழியும்)
  திரு விஜயராகவன், ஆசிரியர், சிவஒளி, திருவாரூர்.
  திருமதி ரமணி சந்திரசேகரன், காட்டூர், திருச்சி
  திரு வடுவூர் சிவ முரளி, எழுத்தாளர், வடுவூர்
  திரு கவிஜீவன், எழுத்தாளர், தஞ்சாவூர்.
  திரு ராஜப்பா, கரந்தை, தஞ்சாவூர்.
  திரு பெயர் தெரியாத செய்தித்தாள் போடுபவர்

  அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

  பேரா. இராமு
  மருத்துவர் சேக்கிழார்
  பேரா இளங்கோவன்
  பேரா கோபால்
  முனைவர் சுவாமிநாதன்
  முனைவர் தருமலிங்கம்
  முனைவர் வைரமூர்த்தி
  முனைவர் முருகன்
  முனைவர் சிற்றரசு
  முனைவர் இன்னமுது
  முனைவர் நெல்லையப்பன்
  முனைவர் வீரப்பன்
  முனைவர் ரங்கராஜன்
  முனைவர் செல்வகுமரன்

  பேரா. தமிழவேலு, ஏவிசி கல்லுர்ரி
  பேரா. இசைவாணி தமிழ்வேலு, ஏவிசி கல்லுர்ரி
  பேரா. ஈசுவரன், தேசியக் கல்லுர்ரி, திருச்சி
  பேரா. செந்தில்குமார், கரந்தைக் கல்லுர்ரி, தஞ்சை
  பேரா. மாதவன், அரசுக் கல்லுர்ரி,புதுக்கோட்டை
  திரு லெட்சுமி நாராயணன், மேலாளர், கூட்டுறவு வங்கி, கரந்தை.
  திரு சுப்பிரமணியன், கண்காணிப்பாளர், தமிழ்ப் பல்கலைக்கழகம்.
  திரு பத்மநாபன், ஆசிரியர், உமாமகேசுவரா மேல்நிலைப் பள்ளி, கரந்தை.
  திரு சோமசுந்தரம் ஆசிரியர், கரந்தை,தஞ்சாவூர்.
  பொறியாளர் வள்ளி மணாளன், மின்வாரியம், திருச்சி.
  திரு ரமேஷ் காந்தி, அன்னை கல்லுர்ரி, தஞ்சாவூர்.
  பேரா மோகன், முதல்வர், திருப்பனந்தாள் கல்லுர்ரி,
  பேரா. கரிகாலன், ஸ்ரீமத் ஆண்டவர் கல்லுர்ரி, திருச்சி.
  திருமதி ராதிகா, வேலுர்ர்.
  திரு ஞானசெல்வன், ஆசிரியர், சீர்காழி,
  திரு சீத்தாராமன், எழுத்தாளர், சீர்காழி
  திருமதி மங்கை அவர்கள், திருச்சி.
  திரு வளவதுரையன், ஆசிரியர், சங்கு இலககிய இதழ், கடலுர்ர்.
  பேரா. இராசமாணிக்கம், சரபோசி கல்லுர்ரி, தஞ்சாவூர்.
  பேரா. சத்ய நாராயணன், சரபோசி கல்லுர்ரி,தஞ்சாவூர்.
  உங்கள் அனைவருக்கும் அனைவரின் வாழ்த்திற்கும் விமரிசனத்திற்கும் அன்பும் நன்றியும் மனத்தின் ஆழத்திலிருந்து தெரிவித்துக்கொள்கிறேன் மீண்டும்.

  ReplyDelete
 14. மனமார்ந்த வாழ்த்துகள் ஐயா.

  ReplyDelete

Follow by Email