Sunday, September 26, 2010

பகிர்தல்.....


இரண்டு சங்கடமான செய்திகளைப் பகிர்ந்துகொள்ளவேண்டும்.

1. ஆனந்தவிகடனில் (27.10.2010 தேதியிட்டது) தன்னைப் பாதித்த சம்பவமாக எழுத்தாளர் பாஸ்கர் சக்தி அவர்கள் குறிப்பிட்டிருப்பது.வெளிநாட்டிற்கு சம்பாதிக்கப்போய் 40 வயதான பீபி லுமாடா என்னும் பெண் இந்தியா திரும்பும்வழியில் பாஸ்போர்ட் தொலைந்துவிட,,,,கனவுகளோடு வந்த அந்தப்பெண் மறுபடியும் திருப்பி மஸ்கட்டுக்கே அனுப்பப்பட்டு அங்கும் அனுமதி மறுக்கப்பட்டு விமானநிலையத்திலேயே 5 நாள்கள்
மன உளைச்சலுடன் ஏற்பட்ட அழுத்தத்தால் உறார்ட்அட்டாக்கில் இறந்துவிட்டார். வீட்டுவேலைக்கு வந்த பெண் என்பதால் இந்திய துர்தரகஅதிகாரிகள் அசட்டையாக இருந்திருக்கிறார்கள். இதுதான் செய்தி. நினைத்துப் பாருங்கள் பொறுப்பான இடத்தில் பொறுப்பான பதவியில் இருக்கும் இந்த அதிகாரிகளின் மனிதாபிமானமற்ற செயலை. இதற்கு ஏதேனும் ஒரு தீர்வைக் கண்டறிந்து அந்த அதிகாரிகளுக்குத் தகுந்த தண்டனை அவர்கள்
மறக்கமுடியாத அளவிற்குத் தரவேண்டும். நிச்சயம் வேண்டுங்கள் கடவுள் அவர்களை நின்று கொல்லவேண்டும். பீபி லுமாடாவின் ஆன்மா அமைதி பெறவேண்டும். 5 நாட்கள் என்ன பாடுபட்டிருக்கும் அந்தப் பெண்ணின் மனம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகளும் அமைச்சர்களும் இதனைக் கண்கொண்டு பார்ப்பார்களா? இன்னொரு லுமாடாவிற்கு இப்படியொரு கதி ஏற்படக்கூடாது. இன்னும் சங்கடமாகவே இருக்கிறது. வாழ்க பாரத தேசம்.

2. இதுவும் ஆனந்தவிகடனில் வந்ததுதான். தசைச் சிதைவு நோயால் பாதிக்கப் பட்டு மரணத்தை எதிர்கொண்டிருக்கும் இரண்டு சகோதரிகள் மாதேவியும் வல்லபியும். கிட்டத்தட்ட 20 வருடங்கள் கொடுமையான வாழ்க்கை. இருப்பினும் அச்சகோதரிகள் சமூகப்பணியில் தீவிரமாக. அவர்களை வணங்குவோம். அந்தக் கட்டுரையின் கடைசிவரிகள் இப்படி முடிகின்றன...


.....இன்னும் கொஞ்சம் நாட்களில் எங்களின் கண் இமைகள் இமைப்பதை நிறுத்திக்கொள்ளும். துர்ங்க முடியாது. சிறுநீரகம் செயல் இழக்கத் தொடங்கும். கடைசியாக இதயம் துடிப்பதை நிறுத்திக்கொள்ளும். நாங்கள் விடைபெறுவோம். ஆனால்
இன்னும் 200 வருடங்கள் கழித்துப் பிறக்கும் ஒரு குழந்தைக்குக்கூட இந்த வியாதி இருக்காது. ஏனெனில் அந்த வலி முழுவதையும் நாங்களே ஏந்திக்கொள்கிறோம்......

யார் என்ன செய்யமுடியும்? அரசு ஏதேனும் செய்யவேண்டும். நிச்சயம் செய்யும் என நம்புகிறேன். மனசுக்குள் வேதனை கசிகிறது. தொண்டை அடைக்கிறது. என் அன்பு சகோதரிகளே உங்களுக்கு இன்னும் ஆயுளுக்காக இறைவனை வேண்டுகிறேன்.

19 comments:

  1. எல்லா விழாக்களும் கலர் கலர்
    பலூன் போலத்தான்.
    வசீகரமமாத்தானிருக்கும்
    காற்று போகும்வரை.
    அப்ப்டித்தான் இந்த 1000 ஆவது
    ஆண்டு விழாவும்.

    ReplyDelete
  2. நன்றி மதுமிதா.

    ReplyDelete
  3. முதல் பத்தி படித்தவுடன் அதிர்ந்து போனேன்(இவருமா...) . பிறகு படிக்க ... சற்று ஆறுதல் ஆனேன்.
    இந்த எண்ணம் எனக்கும் ஏற்படுகிறது. இந்த விழா அவர்களின் சுயநலமும் சுயலாபமும் தவிர்த்து வேறு ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை. செம்மொழி மாநாட்டிற்கு செய்யப்பட்ட செலவும் இதில் அடங்கும். உங்களின் இந்த
    சமுக அக்கறை எல்லோர் மனதிலும் பரவட்டும்.

    உங்களின் முந்தைய பதிவு மிகவும் கலங்க வைத்தது. உங்களுக்கும் புத்தகன் குடும்பத்திற்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்

    ReplyDelete
  4. எல்லா விழாக்களும் நோக்கம் வேறாகவே.

    ReplyDelete
  5. நன்றி வேல்கண்ணன். நன்றி ரிஷபள்.

    ReplyDelete
  6. வணக்கம்
    உங்களின் ஆதங்கம் நியாமானதே..........

    ReplyDelete
  7. எல்லாமே எதோ ஒரு நோக்கத்துக்காக ஆரம்பித்து,
    எதற்காகவோ முடிந்து விடுகிறது. அது போல் தான் இதுவும்....

    ReplyDelete
  8. வணக்கம் ஐயா! சுந்தர்ஜி-ன் ஆணவம் கவிதைக்கு தங்களின் பின்னூட்டம் என்னை தங்கள் பக்கம் இழுத்து வந்து விட்டது. தங்களின் பகிர்தல்கள் இரு செய்திகளும், புத்தகனின் இரங்கல் செய்தியும் கலங்கடித்து விட்டது. நல்ல மனிதர்களை வாழும் காலத்திலேயே அறிய முடியாத துர்பாக்கியம் வேதனைப்படுத்துகிறது.

    ReplyDelete
  9. வணக்கம் நிலாமகள்.

    தங்கள் இனிய வருகைக்கும் இளகிய கருத்துரைக்கம்
    நன்றி. நான் சுந்தர்ஜி பக்கங்கள் வழியாக உங்கள் வலைப்பூவைப் பார்த்து படித்து எழுதிவருகிறேன். தங்களின் வருகைக்கு மீண்டும் நன்றிகள். தொடர்ந்து பகிர்வோம் எண்ணங்களை. அன்புடன் உறரணி.

    ReplyDelete
  10. நன்றி போளூர் தயாநிதி. வருக வணக்கம்.

    ReplyDelete
  11. அர‌சிய‌ல்'வாரிசுக‌ள்' அயல்நாட்டில் கார் திருடி அகப்பட்டுக் கொண்டால், பெய‌ர் மாற்றி புது பாஸ்போர்ட் வ‌ந்துவிடுகிற‌து. அய‌ல்நாட்டு வ‌ங்கிக‌ளில் இந்திய‌ன் ப‌ண‌ம் ஏராள‌மாய் கிட‌க்கிற‌து திருட‌ர்க‌ளின் பெய‌ர்க‌ளில். நாம் தேர்ந்தெடுக்கும் 'த‌லைமையில்' இல்லை, "த‌ன்மையில்" இருக்கிற‌து குறை.
    வேறு யாரைக் குறை சொல்வ‌து ஹ‌ர‌ணி சார்?

    ReplyDelete
  12. //.....இன்னும் கொஞ்சம் நாட்களில் எங்களின் கண் இமைகள் இமைப்பதை நிறுத்திக்கொள்ளும். துர்ங்க முடியாது. சிறுநீரகம் செயல் இழக்கத் தொடங்கும். கடைசியாக இதயம் துடிப்பதை நிறுத்திக்கொள்ளும். நாங்கள் விடைபெறுவோம். ஆனால்
    இன்னும் 200 வருடங்கள் கழித்துப் பிறக்கும் ஒரு குழந்தைக்குக்கூட இந்த வியாதி இருக்காது. ஏனெனில் அந்த வலி முழுவதையும் நாங்களே ஏந்திக்கொள்கிறோம்......//

    படிக்கும்போதே கண்கள் கலக்கமுற்றன மனதுடன்.யாருக்கும் இந்நிலை வரவேண்டாம் ஹரணி. ஆனால் நீங்கள் அவர்களின் ஆயுளுக்காகச் செய்யும் ப்ரார்த்தனையை அவர்களின் வலியிலிருந்து விடைதரும் உதிர்தலுக்கானதாய் நான் மாற்றிக்கொண்டேன்.

    ReplyDelete
  13. நன்றி வாசன் வருகைக்கும். கருத்திற்கும். ஏதாவது செய்யவேண்டும். அதை விதிப்படியும் முறைப்படியும் எனறு மனசு ஆசைப்பட்டதுதான் பகிர்வாய்.தன்மை என்று அழகாக சொன்னீர்கள் வாசன்.

    ReplyDelete
  14. நன்றி சுந்தர்ஜி என்னோடு உங்களின் கண்ணீர்த்துளிகளையும் இழந்தமைக்கு. நெகிழ்வு.

    ReplyDelete
  15. எங்கோ,எவர்க்கோ நேர்ந்த விவகாரமாகக் கருதாமல் , நீங்கள் பொருமியிருப்பது மனித நேயத்தின் உரத்த வெளிப்பாடு. ஒரு நிமிடம் மௌனம் காத்து அந்த ஆத்மாவிற்காகப் பிரார்த்தித்தேன்.

    ReplyDelete
  16. பிறருக்காக சிந்துகின்ற கண்ணீர்த்துளிகளே நம்மை யாரென்று அடையாளம் காட்டி விடும். கண்ணென்ன கண் கண்ணோட்டம் இல்லாத் கண்.
    முதல் முறையாக வந்தேன்..
    அதிர்வோடு படித்தேன்.

    ReplyDelete
  17. அன்புள்ள...

    வணக்கம் லெட்சுமிநாராயணன். தங்கள் வருகைக்கும் மனிதநேயமுணரும் பதிவிற்கும் நெகிழ்வு. மனித நேயத்தை மறந்துவிட்டு எந்தவொரு படைப்பாளியாலும் இயங்கமுடியாது. நன்றி.

    வணக்கம் ஆதிரா. தங்களின் வருகையும் கருத்தும் ஊக்கமானவை. இன்னும் இயங்கவேண்டிய மனித நேயப் பாதையைத் தெளிவுறுத்துகின்றன. தொடர்ந்து பாருங்கள். நன்றி.

    ReplyDelete