Sunday, December 5, 2010
கவனிக்க..கவனிக்க..
திசம்பர் அம்ருதா இதழில் ஒரு கட்டுரை முனைவர் மு.இளங்கோவன் அவர்களால் எழுதப்பட்டுள்ளது. கட்டுரையின் தலைப்பு கிரந்தப் புயலில் சிக்கிய தமிழ் என்பதாகும். அதன் சுருக்கத்தை மட்டும் தருகிறேன்.
ஒருங்குகுறி சேர்த்தியம் தமிழ்மொழிக்கு வழங்கியுள்ள 128 இடங்களில் நிரப்பப்படாமல் இருக்கும் 56 இடங்களில் கிரந்த எழுத்துக்கள் 26 ஐச் சேர்க்கும்படியும் தமிழுக்கே உரியதான எ,ஒ,ழ,ற,ன ஆகிய எழுத்தொலி வடிவங்களைக் கிரந்த அட்டவணையில் சேர்க்கும்படியும் காஞ்சி சங்கரமடத்தைச் சேர்ந்த சிறீஇரமணசர்மா ஒருங்குகுறி சேர்த்தியத்துக்கு அனுப்பிய முன்மொழிவில் தொடங்கி கலைஞர் கடிதம் வரைக்கும் சர்ச்சைகள் பற்றியது. அவசியம் எல்லோரும் வாசித்து இதுகுறித்து எழுதவேண்டிய கடப்பாடு உள்ளது. இதில் தமிழ்மொழிக்கான ஆபத்தையும் உணரவேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
காலம் எல்லாவற்றையும் கவனித்தபடி இருக்கிறது ஹரணி.
ReplyDeleteகாலங்களை கடந்த தமிழ் ஒரு நூறு வருடங்களுக்குள் மடங்கிப் போகும் தன்னால்தான் காப்பாற்றப்படுகிறது என்றெண்ணும் தலைவனிலிருந்து-
தமிழைப் பேசுவதும் எழுதுவதும் அவமானம் என்ற நினைப்பை உண்டுபண்ணும் கல்விமுறையைப் புகுத்தக்காரணமாயிருந்த அரசியல் ஆட்சியாளர்களிலிருந்து-
மம்மி டாடி பேசி மகிழும் நாக்கு வளையாத பொதுஜனங்களிலிருந்து-
விலகி என்றும் போல் தன்னை எழுதி படித்து பேசி வாழ்பவர்களிடம் வாழையடி வாழையாய் பசுமையாய் நிலைத்திருக்கும்.
அரசியலும் அதிகாரமும் தமிழ் காணாததா?
இம்மாத காலச்சுவடில் இது குறித்து விரிவான
ReplyDeleteதலையங்கம் எழுதியுள்ளார்கள்.
தமிழுக்குத் தேவை போலிக் காவலர்களல்ல;
செறிவான பங்களிப்பாளர்கள்.
இது அவர்கள் ஆசை மட்டுமல்ல;
நம்முடையதும் தான்.
அன்புள்ள பேராசிரியர் அண்ணார் அவர்களுக்கு வணக்கம்.
ReplyDeleteதங்கள் கருத்துரைக்கும் ஊக்குவிப்புக்கும் நன்றி.
தாங்கள் மின்னஞ்சல் முகவரியுடன் மடல் அனுப்ப வேண்டுகிறேன்.
muelangovan@gmail.com
என்ற என் முகவரிக்குத் தொடர்புகொள்ள வேண்டுகிறேன்.
அன்புள்ள
மு.இளங்கோவன்
புதுச்சேரி