Wednesday, December 8, 2010

சாபம்



நாம் வாழ்க்கையில் வாங்கிவந்த சாபம்தான்.

ஒரு நீண்ட கட்டுரையின் பொருண்மையை முடிந்தவரை சுருக்கியிருக்கிறேன்.
பொருண்மை கெடாமலும் எச்சரிக்கைக்காகவும்..

1. 1830 களில் இந்தியாவை சுற்றிப் பார்த்த மெக்காலே குறிப்பிடும்போது இந்தியாவில் நான் மேற்கொண்ட மிக நீண்ட பயணத்தில் ஒரு பிச்சைக்காரனையோ ஒரு திருடனையோ இதுவரை சந்தித்ததில்லை. நற்பண்புகளும் தனித்தன்மையுள்ள மக்களால் இந்நாடு வளம் பெற்றுள்ளது. இத்தேசத்தின் முதுகெலும்பான கலாச்சார மேன்மையை உடைத்தெறியாமல் இம்மக்களை வெற்றி கொள்வது பற்றி என்னால் சிந்திக்கவே முடியவில்லை.

2. பன்முகத்தன்மை வாய்ந்த பல மருத்துவங்களின் அறிவுச்சொத்தை இன்றைய கருவிகளின் கற்பனை அடிப்படையிலான முடிவுகளின் வழியாக கேள்விக்குள்ளாக்குவது கேலிக் கூத்தானது.

3. காசநோய்த்தடுப்பு மருந்துத்திட்டம் இந்தியாவில் வருவதற்கு முன்பே பிற நாடுகளில் அந்நோய் குறைந்துவிட்டது. இந்த நோய்களுக்குக் காரணம் கிருமிகளைவிட சமூக, பொருளாதார, அரசியல் காரணங்கள்தான் முக்கியம்.

4. தடுப்பூசியால் டிபிடி, போலியோ சொட்டு மருந்துகளால் பக்க விளைவுகள் வரும் என்பது உண்மை.இந்தப் போலியோ சொட்டுமருந்தால் பாதிக்கப்படக்கூடிய குழந்தைகளின் எண்ணிக்கை என்பது உண்மையில் போலியோ வைரஸால் வரக்கூடிய பாதிப்பைவிட அதிகமாக உள்ளது.

5. பன்னாட்டுக்கம்பெனிகள் தேவையில்லாத தடுப்பூசிகளையும் மற்றும் திட்டங்களையும் செயற்படுத்தச் செய்கிறது.

6. பெரும்தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நோய்களுக்கான நிரந்தரத் தீர்வு அதன் சமூக, பொருளாதார அரசியல் சூழலில்தான் உள்ளது.

7. இந்தப் பன்றிக் காய்ச்சலைப் பரப்பும் என்று நம்பப்படும் கிருமி, வைரஸ் வகை சார்ந்தது என்பதும் இது கிருமி வகைகளிலேயே மிகவும் நுண்ணியது என்பதும் எல்லா மருத்துவர்களுக்கும் தெரியும். சாதாரண துணியால் ஆன ஒரு முகமூடி இந்த நுண்ணிய வைரஸிலிருந்து நம்மைக் காப்பாற்றும் என்பது உண்மையானால் உலகிலுள்ள எல்லாக் கிருமிகளிலிருந்தும் நம்மைக் காப்பாற்றும் சக்தி படைத்ததாக துணி மாறிவிடும். ஆனால் உண்மை மாறானது. சாதாரணத் துணியில் உள்ள நெய்யப்பட்ட நுர்லின் இடைவௌயில் நுர்ற்றுக்கணக்கான வைரஸ்கள் உள்ளே போய் வெளியே வரும் என்பது எல்லா நுண்ணுயிரியல் மாணவர்களுக்கும் தெரியும்.

8. பன்றிக்காய்ச்சல் பற்றிய உண்மைகளை உலக சுகாதார நிறுவனம் அரசியல் பொருளாதாரக் காரணங்களுக்காக வெளியிடவில்லை என்று கூறுகிறது.

9. வணிக வெறி இவ்வளவு துர்ரம் பெருக மருத்துவம் பற்றிய அறியாமைதாயே காரணம்?

10.இயற்கையாக கிருமிகள் உடலில் நுழைய முயலும்போது உடல் எதிர்ப்பு வேலையை இயற்கையாகச் செய்யும். இதற்காக உடலிற்கு இப்படியான தடுப்பூசிப் பயிற்சிகள் அவசியமில்லை. அடிக்கடி கிருமிகளை எதிர்க்கும் செயற்கைப் பயிற்சிகளை நாம் உடலுக்கு வழங்கி அதன் சக்தியை வீணடித்தால்...இயற்கையான சூழலில் அதன் சக்திகுறைவால் எதிர்க்க இயலாமல்போய்விடும்.

11. பக்கவிளைவுகள் பக்க விளைவு மருந்துகள் கெடாமல் பாதுகாக்க என்று ஏகப்பட்ட இரசாயனங்கள் இத்தடுப்பு மருந்துகளில் கலக்கப்படுகின்றன. இவ்விளைவுகளும் பக்க விளைவுகளே.

12. தடுப்பு மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவுகள் இந்தியாவில் ஏன் அடிக்கடி ஏற்படுவதில்லை?...இந்தியா போன்ற வளரும் நாடுகளில் முறையான உணவுப்பழக்கம் இயற்கை சார்ந்த வாழ்வியல் நடைமுறைகள் மாறத்தொடங்கி சில பத்து வருடங்கள்தான் ஆகின்றன.

பக்க விளைவால் ஏற்பட்ட மரணங்கள் 10,06,000 பேர்
மருத்துவத் தவறுகளால் ஏற்பட்ட மரணங்கள் 9,98,000 பேர்
மருத்துவமனை படுக்கையில் ஏற்பட்ட புண்களால்
ஏற்பட்ட மரணங்கள் 10,15,000 பேர்
மருத்துவமனையில் ஒவ்வாமையால் ஏற்பட்ட
மரணங்கள் 8,80,000 பேர்
தவறான சிகிச்சையால் ஏற்பட்ட மரணங்கள் 3,71,360 பேர்
தவறான அறுவை சிகிச்சையால் ஏற்பட்ட
மரணங்கள் 3,20,000 பேர்
தேவையற்ற ஊட்டச்சத்து மருந்துகளால்
ஏற்பட்ட மரணங்கள் 10,09,000 பேர்
வெளிநோயாளிகளில் பக்கவிளைவுகளால்
ஏற்பட்ட மரணங்கள் 10,99,000 பேர்

ஆக மொத்தம் 67 லட்சத்து 6 ஆயிரத்து 360 பேர்

இதுகுறித்த அறிக்கையின் இறுதியில் சொல்லப்பட்டுள்ள வாசகம்

ஒட்டுமொத்த அமெரிக்க வரலாற்றில் எந்த ஒரு போரினாலும் ஏற்பட்ட மரணங்களைவிட இந்த மருத்துவத் தவறுகளால் ஏற்பட்ட மரணங்கள் அதிகம்.

நன்றி . புதுவிசை- கலாச்சார இலக்கியக்காலாண்டிதழ்
திசம்பர் 2010.



எனவே
இயற்கைதான்
நம் உயிர்காக்கும்
இறைவன்.

6 comments:

  1. உண்மையின் முகத்திரையை விளக்கிக் காட்டும் அதிமுக்கியப் பதிவு! அனைவருக்கும் சென்று சேர, விழிப்புணர்வு பெறச் செய்ய என்ன செய்யலாமென்ற சிந்தனையை கிளறுகிறது திகில் பட்ட மனம். புள்ளி விவரங்கள் திகைப்பூட்டுகின்றன. சமூக உணர்வழிந்து, பெருகிவிட்ட சுயநல வேட்கை எதில் கொண்டு விடுமோ நம்மை!!

    ReplyDelete
  2. சில சமயங்களில் அறியாமை வரமோ?!
    ஒவ்வொன்றாய் படிக்கும்போது நிஜமாகவே நம் அரசியலார் குறித்த தார்மீகக் கோபம் பீரிட்டு எழுகிறது.. செயலாற்ற வேண்டியவர்கள் மக்கள் உணர்வுகளை ஏதாவது ஒரு வகையில் திசை திருப்பி விட்டு சொத்து சேர்க்கும் கூட்டம் ஆகிவிட்டார்கள். விடியல் எவ்வகையில்?

    ReplyDelete
  3. உலகப் போர்களால் ஏற்பட்ட மரணத்தை விட மதச் சண்டைகளால் ஏற்பட்ட மரணம் அதிகம் என்கிறார்கள். இப்போது மருத்துவ மரணங்களா? என்ன செய்கிறோம் நம்மை நாம்?

    ReplyDelete
  4. பூனையைப் பாத்து புலி சூடு போட்டுக்கொண்ட கதைய நானும் ஒரு வாரத்துக்குள்ள எழுத இருக்கேன் ஹரணி.

    முறையற்ற சரியான வழிகாட்டுதலின்றி சீரழிந்து கொண்டிருக்கும் அத்தியாவசியமான இரு துறைகள் கல்வி மற்றும் சுகாதாரம்.

    அன்ஷுல் டுடேஜாவுடைய இந்த டெம்ப்ளேட் ரொம்ப அழகா இருக்கு ஹரணி ஒங்க கவிதைஅளை மாதிரி.

    ReplyDelete
  5. போர் தரும் மரணங்களை விட, மருத்துவம் தரும்
    மரணங்கள் மன்னிக்க முடியாதவை!!

    ReplyDelete