Monday, December 12, 2011

நினைவுபடுத்தல்


வணக்கம்.

இவருடைய இயற்பெயர் சுப்பையா. சின்னசாமி ஐயருக்கும் இலக்குமி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தவர்.

தனது ஞானத்தால் 11 வயதில் பாரதி பட்டம் பெற்றவர். பின்னாளில் உலகம் போற்ற மகாகவி என்றழைககப்பட்டவர்.

சுதந்திர தாகத்தையும் நாட்டின் விடுதலையையும் மனதில் இருத்தி கடைசிவரை வறுமையில் இருந்து ஒரு யானை காரணமாக இறந்துபோனவர். சின்ன வயதில் இறந்துபோனவர்.

இவருடைய கவிதைகள் மிகச் சிறந்தவை என்று சொல்கிறார்கள். போற்றுகிறார்கள்.

இவர் பிறந்த தினம் நேற்றுதான். அதாவது திசம்பர் 11 வது நாள் 1882 ஆம் ஆண்டு. செப்டம்பர் 11 ஆம் நாள் 1921 இல் இறந்துபோனார்.

பலருடைய பிழைப்பு இவரது கவிதைகளால் நடக்கிறது.

இளைய பருவத்தில்தான் இறந்துபோனார். இளைஞர்கள் திசைகள் வேறுவேறாகப் பிரிக்கப்பட்டுவிட்டன. காலம்தான் இவர்களை மீட்டெடுக்கவேண்டும்.

நெஞ்சு பொறுக்குதில்லையே பாரதி...

11 comments:

  1. அருமையான பதிவு.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    நன்றி ஐயா.

    ReplyDelete
  2. மகா கவியின் கவிதை வரிகளை
    இரண்டொன்றை மனப் பாடம் செய்துகொண்டு
    அதனை தேவைக்கும் இடத்திற்கும் ஏற்பட்டாற்போல
    பயன்படுத்திக்கொண்டு வருடத்திற்கு
    இர்ண்டுமுறை சிலை இருக்குமிடம் சென்று
    மாலை அணிவித்து விட்டு அவரது தியாகத்திற்கும்
    சிந்தனைக்கும் ஞானத்திற்கும் பதில் மொய்செய்துவிட்டு
    தன் போக்கில் செல்லும் தமிழ் சமூகத்திற்கு
    பாரதியை இப்படித்தான் நினைவு படுத்த வேண்டியிருக்கிறது
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. பாரதியின் பெயரை செவிட்டில் அறைந்திருக்கிறீர்கள் ஹரணி.

    ReplyDelete
  4. அருமையான, கருத்துள்ள, அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு. நன்றி Sir!
    சிந்திக்க :
    "இன்றைய மனிதனுக்கு என்ன தானம் தேவை?"

    ReplyDelete
  5. பலருடைய பிழைப்பு இவரது கவிதைகளால் நடக்கிறது.

    ஹரணி.. பலே பாண்டியா என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.. (நன்றி பாரதி)

    ReplyDelete
  6. பாரதிக்கும் அறிமுகம் தேவையாயிருக்கிறது இந்நாளில். நெஞ்சு பொறுக்குதில்லைதான். பகிர்வுக்கு நன்றி ஹரணி சார்.

    ReplyDelete
  7. எனக்கும் இந்த ஆதங்கம் என்றுமே உண்டு. பாரதி பெயர் சொல்லிப் பிழைப்பு நடத்தும் பலரையும் அந்த பாரதி மன்னிக்க மாட்டான். அவனே மன்னித்தாலும் என்னால் முடியாது. இருந்தால் என்ன.? அவர்கள் நிறுத்தப் போகிறார்களா என்ன. ?

    ReplyDelete
  8. பாரதிக்கு அறிமுகம் தேவைப்படுகிற அவலம் வந்து விட்டதே.
    உண்மையில் நெஞ்சு தாங்க ஒண்ணாத் துயரத்தை அனுபவிக்கிறது.

    ReplyDelete
  9. பாரதிக்கு அறிமுகமா?
    பார்..அதி மோசமான உலகமய்யா இது!

    ReplyDelete
  10. கன்னத்தில் அறைந்து காதுக்குள் நுழையும் அவர் கவிதைகள்..இப்பதிவின் தலைப்பினைப் போலவே..

    ReplyDelete
  11. பாரதி மறக்க இயலாதவன்.

    சமீபத்தில் திருவல்லிகேணியில் இருந்த பாரதி நினைவகத்திற்கு சென்றிருந்தேன். முதல் தளத்தில் அற்புதமான நூலகம் இயங்கி வருகிறது. ஆனால் கூட்டம்தான் இல்லை. ஆயிரக் கணக்கில் நூல்கள் வாசிப்பின்றி வாடிகிடக்கின்றன .

    பாரதியை மறப்பது நல்ல தமிழை பழிப்பது போன்றது. கட்டுரை நன்று ஐயா.

    ReplyDelete