Monday, December 19, 2011

பகிரல்....

00000000
00000000

தமிழகத்தின் எல்லா இதழ்களும் வெகுஜன இதழ்களும் சரி...இலக்கிய இதழ்களும் சரி ஒருமித்த கருத்தை அதனதன் போக்கில் எடுத்துக்கூறியுள்ளன. கூடங்குளம் பிரச்சினையை. எப்படியாயினும் இது ஆபத்தை விளைவிப்பது என்பதுதான் அதன் சாராம்சமாக உள்ளது. எந்த ஒன்றும் மானிட இனத்தை மையப்படுத்திதான் அமையவேண்டும். அந்த மானிடர்க்குத் துன்பம் தரும் ஒன்றை மத்திய அரசு ஏன் விடாப்பிடியாய் கொண்டுவர நினைக்கிறது.

•••••••••
•••••••••

எல்லா அரசியல் முரண்களுக்கிடையிலும் விமர்சனங்களுக்கிடையிலும் தன் கொள்கையை விடாது முன்னேறுகிறது அரிமா அன்னா உறசாரே. வாழ்த்துக்கள்.

00000000
00000000

மதிப்பிற்குரிய கேரள முதல்வர் உம்மன் சாண்டி ஒரு பொதுவான வேண்டுகோளை இன்றைய செய்தித்தாளில் தமிழக மக்களுக்கு விடுத்துக்கொண்டிருக்கிறார். அதே செய்தித்தாளில்தான் ஐயப்பத் தரிசனம் செல்லும் வேன்கள் அடித்து நொறுக்கப்பட்டதாக செய்திகள் வருகின்றன. இரு மாநிலங்களிலும் இருதரப்பு மக்களும் பாதுகாக்கப்படவேண்டும்.

•••••••••
•••••••••

தொலைக்காட்சிகளில் விளம்பரங்களில் பெண்கள் இடம் பெறாமல் எந்த விளம்பரமும் இல்லை. இதுகுறித்த கருத்தாக்கங்கள் அவ்வப்போது வெளியிடப்பட்டிருக்கின்றன. சமீபமாக ஒரு சில விளம்பரங்கள் மனதைக் காயப்படுத்துகின்றன. ஒரு நகைக்கடை விளம்பரத்திற்கு வானிலிருந்து வாளோடு வானத்திலிருந்து ஒரு பெண் குதிப்பது போன்ற விளம்பரம். இன்னொன்றில் பள்ளத்தில் சிக்கிகொண்ட லாரியைக் கூந்தல் கட்டி இழுத்து வருவது. விளம்பரத்தில் குறைந்த பட்சம் நியாயமாவது இருக்கவேண்டும்.

•••••••••
•••••••••

இது அரசியல் அல்ல. பேராசிரியர் க.அன்பழகன் பிறந்த நாள் இன்று. 90 வயதை நிறைவு செய்திருக்கிறார். இதுவரை எந்த முரணிலும் சிக்காதவர். 90 வயது பெரிய வயது. ஆச்சர்யம்.

0000000000
0000000000

ஒரு சின்ன அனுபவம். நேற்று முன்தினம் அதாவது சனிக்கிழமை நாமக்கல்லில் இருந்தேன். அலுவல்பணி. மாலையில் நாமக்கல் ஆஞ்சனேயரைத் தரிசித்துவிட்டு தங்கத் தேரை இழுத்துவிட்டு எதிரில் இருக்கும் நரசிம்உறரையும் தரிசித்துவிட்டு கீழேயுள்ள மண்டபத்தின் இருளில் அமர்ந்திருந்தேன். தனிமையில். நண்பர்கள் மேலே தரிசனத்தில் இருந்தார்கள். அப்போது வளர்ந்த தாடியுடன் நடுத்தர வயதைக் கடந்த ஒருவர் வந்து என்னருகே மண்டபத்தில் அமர்ந்து ஒரு 10 ரூ கொடேன் போஜனத்திற்கு என்றார். எதுவும் பேசாமல் எடுத்துக்கொடுத்தேன். வாங்கிக்கொண்டு சற்றுநேரம் என்னைப் பார்த்துவிட்டு மிகத் துல்லியமாக என்னுடைய ராசியின் பெயரைச்சொல்லி அந்த ராசிக்காரன்தானே...நல்லாயிருப்பே..யோகம்தான் என்றுசொல்லிவிட்டுப் போனார். என்னுடைய ராசியின் பெயர் எப்படித் தெரியும் என்பதுதான் என்னுடைய அனுபவம்.

000000000
000000000

26 comments:

  1. வயது வந்தோர் வாக்கு உரிமை பெறலாம் என்றால், அவர்களின் கருதுக்களும் அவர்களேதீர்மானிப்பதில் உடன்பாடே. குறை காண முடியாது.அன்பழகன் ,விளம்பர அசிங்கங்கள் இவற்றில் கருத்து உடன்பாடே. சாமியார் பற்றிஉண்மைசம்பவம் என்று கேள்விப்பட்ட விஷயம் அடுத்து பதிவிடுகிறேன். பகிர்வுக்கு நன்றி ஹரணி ஐயா.

    ReplyDelete
  2. எனக்கும் இந்த மாதிரி அதிசய சாமியார்
    மிகச் சரியாக குறி சொல்லி இருக்கிறார்கள்
    உங்களுக்காவது ராசியைச் சொல்லி ஆச்சரியப் படுத்தினார்
    எனக்கு நட்சத்திரத்தையும் சேர்த்தே சொன்னார்
    பல புரியாத விஷயங்களில் இதையும் ஒன்றாக வைத்துள்ளேன்
    ஜிஎம் பி சாரிடமும் இது குறித்து ஒரு விஷயம்
    இருக்கிறது போல் தெரிகிறது.
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. நல்ல பதிவு.3
    நன்றி ஐயா.

    ReplyDelete
  4. பல்சுவை பகிர்வு.. நீங்கள் சொல்லியிருந்த அபத்த விளம்பரங்கள் உண்மையில் நகைப்பிற்குரியவை..:)

    ReplyDelete
  5. ...ஒரு காரியத்தை செய்த பின்னர் அனுமதி கேட்பது தவறு என்று அறிவேன்..என்னுடைய மயில் அகவும் நேரம் 03:00 ---.இடுகையில் உங்களின் நினைவுபடுத்தல் இடுகையின் இணைப்பை உங்கள் அனுமதியின்றி வெளியிட்டுள்ளேன்..தவறெனில் மன்னிக்கவும்...

    ReplyDelete
  6. நாமக்கல் அனுபவம் என் அனுபவங்களை ஞாபகப்படுத்தியது

    ReplyDelete
  7. தெளிவான பகிர்தல் ...
    அறிந்து கொண்டேன் நன்றிங்க சார் ...

    ReplyDelete
  8. தங்களின் நாமக்கல் அனுபவம் போல் எனக்கும் நிகழ்ந்திருக்கிறது. சொன்னால் சிரிப்பார்கள். அதனால் பகிரவதில்லை.

    கூடங்குளத்தில் இத்தனை கோடி செலவிடும் போது எங்கே போனார்கள் ஆர்ப்பாட்டக்காரர்கள் ?
    அன்பழகன் மதிப்பிற்குரியவர்.

    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  9. நன்றி வெங்கட்ராஜ்.

    ReplyDelete
  10. உங்கள் அனுபவத்திற்குக் காத்திருக்கிறேன் ஜிஎம்பி ஐயா.

    ReplyDelete
  11. நன்றி ரமணி சார்.

    ReplyDelete
  12. நன்றி ரத்தினவேல் ஐயா.

    ReplyDelete
  13. மயிலன் நன்றி. தாங்கள் எதுவேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். நல்லவை பலருக்கும் சென்று சேரவேண்டும். அவ்வளவுதான். தங்களின் பதிவிலிருந்து வெள்ளைமயில் படத்தை நான் எடுத்துக்கொள்ள விரும்புகிறேன்.

    ReplyDelete
  14. உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள் ரிஷபன்.

    ReplyDelete
  15. நன்றி அரசன். தொடர்ந்து வாருங்கள்.

    ReplyDelete
  16. முகசோதிடம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அது ஒருவகையில் அறிவியல்கூட. அதனடிப்படையில் எனது ராசியைக் குறிப்பிட்டிருக்கலாம். அவ்வளவே. போராட்டம் என்பது திடீரென்று வருவதில்லை. உள்ளுக்குள்ளே புகைந்துகொண்டேயிருக்கும். அல்லது அது குறித்து புழுங்கியாவது யாரிடமாவது பேசியிருக்கும் இயலாமைகூட நிகழ்ந்திருக்கும். காலப்போக்கில் பலரும் ஒன்றுசேரும்போது அவரவர்க்குத் துணிவு வந்து ஒன்றுகூடிப் போராடும் நிலை வந்திருக்கலாம். ஏற்கெனவே சொன்னதுபோல இதன் தொடக்கத்திலிருந்து நடைபெற்றதை நான் சேகரித்துக்கொண்டேயிருக்கிறேன். பிறகு உங்களிடமும் விவாதிப்பேன் சிவகுமரன். நன்றி.

    ReplyDelete
  17. சிந்தனைக்குரிய பல்சுவைப் பகிர்வுகளுக்கு நன்றி ஹரணி சார்.

    ReplyDelete
  18. //மிகத் துல்லியமாக என்னுடைய ராசியின் பெயரைச்சொல்லி அந்த ராசிக்காரன்தானே...நல்லாயிருப்பே..யோகம்தான் என்றுசொல்லிவிட்டுப் போனார். என்னுடைய ராசியின் பெயர் எப்படித் தெரியும் என்பதுதான் என்னுடைய அனுபவம். //
    இன்ன ராசிக்காரருக்கு இரக்கம் ஜாஸ்தி என்று அனுமானித்து சொன்னாரோ?

    ReplyDelete
  19. யோசிக்க வைத்த பதிவு... அருமை! வாழ்த்துக்கள்! பகிர்விற்கு நன்றி Sir!
    சிந்திக்க :
    "உங்களின் மந்திரச் சொல் என்ன?"

    ReplyDelete
  20. உங்களுக்கு ஆரூடம் தெரியுமா ஜனா. நன்றி.

    ReplyDelete
  21. நன்றி தனபாலன்.

    ReplyDelete
  22. நாமக்கல்லில் தாங்கள் சந்தித்த நபர் போல, ஆங்காங்கே சில அதிசயமானவர்கள் இருக்கிறார்கள் தான், அவர்களை நம்மால் அடையாளம் காணவே முடியாது என்பதும் உண்மை.

    நானும் என் நண்பர் ஒருவரும் {பிறகு எனக்கே சம்பந்தியானவர்] திட்டை என்ற ஊருக்குச் சென்றோம். அங்கு கோயில் வாசலில் ஒருவர். பார்த்தால் பரதேசி போல பிச்சைக்காரர் போன்றே இருந்தார். அவருக்கு காசு ஏதாவது கொடுக்க என் நண்பர் தன் பையைத்துழாவினார். அவர் வாங்க மறுத்துவிட்டார். இவரைக் கூப்பிட்டு கைரேகையை மட்டும் காட்டச்சொல்லி விட்டு, இவரின் பிறந்த நக்ஷத்திரம், ராசி, இவருக்குப்பிறந்த இரு பெண்களின் நக்ஷத்திரங்கள், ராசிகள் மளமளவென்று பொட்டில் அடித்தது போலக் கூறினார். ஜோஸ்ய புத்தகங்களெல்லாம் படித்து தானே கொஞ்சம் கொஞ்சம் விஷயங்கள் அறிந்திருந்த என் நண்பருக்கு ஒரே வியப்பு. இரண்டொரு பிரச்சனைகளைப் பற்றியும், அது ஏன் சமீபத்தில் நடந்தது என்ற காரணம் பற்றியும் விளக்கிவிட்டு, அவர் கிளம்பப் பார்த்தார். மீண்டும் என் நண்பர் அவருக்கு ஒரு பெரிய தொகை கொடுக்கப்போனார். அவர் அதை வாங்க மறுத்ததுடன், கோயில் உண்டியலில் போடச் சொல்லி, சொல்லி விட்டு மறைந்து போனார்.

    மீண்டும் பலமுறை நானும் என் நண்பரும் அந்தக் கோயிலுக்கு அவரை பார்க்கணும் என்று போயும், பயனில்லை. அவர் அங்கு இல்லை. என்ன அதிசயமோ இது.

    vgk

    ReplyDelete
  23. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  24. துளித்துளியாய் பகிர்வு சிந்தைனை விரிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete