Wednesday, January 11, 2012

முயல்குட்டி கவிதைகள்....



                           பூமியின்மேல் விழுந்த

                          சூரிய சூட்டைத் தணிக்கிறது
                          ஒரு குழந்தையின் நிழல்....

                          00000

                          வளையல் அணியும்  சிறுமி
                          வளைகிறதா
                          வளைக்கப்படுகிறதா?

                           0000

                           ஒரு குழந்தையை
                           மொழிபெயர்த்தேன்
                            வாழாத  வாழ்க்கை
                           கிடைத்தது...

                           ஒரு கடலை
                           மொழிபெயர்த்தேன்
                           ஆழத்தின் அறிவு
                            கிடைத்தது...

                            ஆகாயத்தை
                             மொழிபெயர்த்தேன்
                            மௌனத்தின் வரம்
                            கிடைத்தது...

                             பூமியை
                             மொழிபெயர்த்தேன்.
                             அழியாத நம்பிக்கை
                             கிடைத்தது...

                             ஒரு மனிதனை
                             மொழிபெயர்த்தேன்
                              என்னைத் தேடும்
                              தகவல் கிடைத்தது...

                              00000





                             
                           
                         

                                                

8 comments:

  1. Îò 瑱 ØïV_þÅm
    Îò 瑱 ïVB©Ã|ÝmþÅm
    Îò 瑱 gªÍ>©Ã|ÝmþÅm
    Îò 瑱 åD¸ÂçïRâ|þÅm
    Îò 瑱 ¨]ìÃVìÂï çkÂþÅm
    Îò 瑱 ]ÅÂþÅm
    Îò 瑱 J½çkÂþÅm
    Îò 瑱 W«VçÄBVþÅm
    Îò 瑱 ¼Ã«VçÄBVþÅm
    Îò 瑱 ¶çéÂïaÂþÅm
    Îò 瑱 WD\]BVÂzþÅm
    Îò 瑱 ïªkVï¼k ÖòÂþÅm
    Îò 瑱 ÃBJâ|þÅm
    Îò 瑱 Ã>⦩æçkÂþÅm
    Îò 瑱 ç>öB©Ã|ÝmþÅm
    Îò 瑱 zwÍç>çB©¼ÃVé
    Îò 瑱 ¶©ÃVçk©¼ÃVé
    Îò 瑱 ¶D\Vçk©¼ÃVé
    Îò 瑱 ¶ÂïVçk©¼ÃVé
    Îò 瑱 åâçé¼ÃVé
    Îò 瑱 ïV>ç驼ÃVé
    ÎËØkVò åVÓD ÎËØkVò
    瑱 ÎËØkVòs>\VF
    μ« \ªm>V[ μ« \ªm>V[
    μ« 瑱>V[ ¨[® cðìÝ]ªVKD
    Îò 瑱>V[ c®]ØÄFB¼kõ|D...

    தங்கள் தள இடுகைகள் இப்படிதான் ஐயா தெரிகிறது..
    தயவு கூர்ந்து தொழில்நுட்ப பிழையை சரி செய்யவும்...

    ReplyDelete
    Replies
    1. Dear Mayilan...

      I have corrected it and published today again. Sorry for the inconveniance caused by me.

      Delete
  2. \\ஒரு கனவு கொல்கிறது
    ஒரு கனவு காயப்படுத்துகிறது
    ஒரு கனவு ஆனந்தப்படுத்துகிறது
    ஒரு கனவு நம்பிக்கையூட்டுகிறது
    ஒரு கனவு எதிர்பார்க்க வைக்கிறது
    ஒரு கனவு திறக்கிறது
    ஒரு கனவு மூடிவைக்கிறது
    ஒரு கனவு நிராசையாகிறது
    ஒரு கனவு பேராசையாகிறது
    ஒரு கனவு அலைக்கழிக்கிறது
    ஒரு கனவு நிம்மதியாக்குகிறது
    ஒரு கனவு கனவாகவே இருக்கிறது
    ஒரு கனவு பயமூட்டுகிறது
    ஒரு கனவு பதட்டப்படவைக்கிறது
    ஒரு கனவு தைரியப்படுத்துகிறது
    ஒரு கனவு குழந்தையைப்போல
    ஒரு கனவு அப்பாவைப்போல
    ஒரு கனவு அம்மாவைப்போல
    ஒரு கனவு அக்காவைப்போல
    ஒரு கனவு நட்பைப்போல
    ஒரு கனவு காதலைப்போல
    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு
    கனவு ஒவ்வொருவிதமாய்
    ஒரே மனதுதான் ஒரே மனதுதான்
    ஒரே கனவுதான் என்று உணர்த்தினாலும்
    ஒரு கனவுதான் உறுதிசெய்யவேண்டும்...\\

    மெய்ப்படும் கனவுகளை மெய்ப்பிக்கவும் ஒரு கனவு தேவைப்படுகிறது.. அருமை..

    முயல் குட்டிக் கவிதைகளில் சூரியச்சூட்டைத் தணிக்கும் குழந்தையின் நிழல் மனச்சூட்டைத் தணித்து இதம் தருகிறது. பாராட்டுக்கள் ஹரணி சார்.

    ReplyDelete
    Replies
    1. Geetha...Avl.

      Extremely Sorry. I have corrected and published the same today. Again I am very grateful to you for your opinion and patience. Thank you verymuch.

      Delete
  3. ஒரு குழந்தையை
    மொழிபெயர்த்தேன்
    வாழாத வாழ்க்கை
    கிடைத்தது...// அழகு ஐயா...

    ReplyDelete
    Replies
    1. Dear Sundara Pandian...

      Thank you very much for you comments. Please come often. Thank you.

      Delete
  4. ஹைக்கூ எனப்படும் கவிதை வடிவத்தின் தமிழ் பெயரா முயல் குட்டிக் கவிதைகள்.?மிக நன்றாய் இருக்கிறது ஐயா.

    ReplyDelete
  5. அன்புள்ள ஜிஎம்பி ஐயா..

    வணக்கம். குறும்பா..துளிப்பா..எனப் பலபெயர்கள் உண்டு. நான் சிறிய வடிவிலான கவிதைகளை எழுதும்போது அவற்றிற்கு முயல்குட்டிபோல சிறியவடிவமும் துள்ளலுமாக எனும் பொருளிலும்...அதேபோன்று பட்டாம்பூச்சி பறத்தலைப்போல அசையவேண்டும் எனும் பொருளில் பட்டாம்பூச்சிக் கவிதைகள் என்றும் அவ்வப்போது பெயர் சூட்டுவேன். அவ்வளவுதான்.

    பவணந்தி முனிவர் நன்னுர்ல் எனும் இலக்கண நுர்லில் பாடம் சொல்லும்முறை கேட்கும்முறை இவற்றைப் பற்றிக் குறிப்பிடுகையில் அரிமா நோக்கு...தவளைப் பாய்ச்சல்...பருந்தின் வீழ்ச்சி இவற்றின் செய்கைகளைப் போல அமையவேண்டும் என்பார் அதன் தாக்கமே இவ்வாறு தலைப்பிட வைக்கிறது.

    ஹைக்கூ.. கவிதை என்பது ஜப்பானின் வடிவம் என்பதான வரலாறாகத் தொடங்குகிறது. ஆனால் நமது தமிழ் இலக்கியத்தின் சங்க இலக்கியத்தில் அகநுர்லாக வரும் ஐங்குறுநுர்று மேற்படி ஹைக்கூவின் வடிவமே. தங்களின் கருத்துரையால் எனக்கு இதுபற்றி எழுதத் தோணுகிறது. வாப்பமைவில் எழுதுகிறேன்.

    நன்றி.

    ReplyDelete