Thursday, January 12, 2012


\ஒரு கனவு கொல்கிறது
ஒரு கனவு காயப்படுத்துகிறது
ஒரு கனவு ஆனந்தப்படுத்துகிறது
ஒரு கனவு நம்பிக்கையூட்டுகிறது
ஒரு கனவு எதிர்பார்க்க வைக்கிறது
ஒரு கனவு திறக்கிறது
ஒரு கனவு மூடிவைக்கிறது
ஒரு கனவு நிராசையாகிறது
ஒரு கனவு பேராசையாகிறது
ஒரு கனவு அலைக்கழிக்கிறது
ஒரு கனவு நிம்மதியாக்குகிறது
ஒரு கனவு கனவாகவே இருக்கிறது
ஒரு கனவு பயமூட்டுகிறது
ஒரு கனவு பதட்டப்படவைக்கிறது
ஒரு கனவு தைரியப்படுத்துகிறது
ஒரு கனவு குழந்தையைப்போல
ஒரு கனவு அப்பாவைப்போல
ஒரு கனவு அம்மாவைப்போல
ஒரு கனவு அக்காவைப்போல
ஒரு கனவு நட்பைப்போல
ஒரு கனவு காதலைப்போல
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு
கனவு ஒவ்வொருவிதமாய்
ஒரே மனதுதான் ஒரே மனதுதான்
ஒரே கனவுதான் என்று உணர்த்தினாலும்
ஒரு கனவுதான் உறுதிசெய்யவேண்டும்...\\

9 comments:

  1. ஏழு சுரங்களுக்குள் எத்தனை பாடல் என்பதுபோல
    எல்லா உணர்வுகளும் ஒரு மனதில் இருந்துதானே
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. எப்போதோ படித்தது நினைவுக்கு வருகிறது. “தூங்கினாய், கனாக்
    கண்டாய், உலகம் இன்பமயமாய் இருந்தது. உறக்கம் விழித்தாய், உலகம் ஒரு கடமைக் கடலாகக் காட்சி அளித்தது.

    ReplyDelete
  3. உங்களின் முயல் குட்டி கவிதை வரை மிக அருமையான கவிதைகள் ஹரிணி சார், இந்த கவிதையில் கவிதை குட்டிக்கரணம் அடிக்க தொடக்கி விட்டது!

    ReplyDelete
  4. வணக்கம் வேல்கண்ணன். கவிதையின் பரிமாணங்கள் வெவ்வேறானவை. உங்களின் பார்வையையும் ஏற்கிறேன். கவிதை எழுதும்போது என் மனம்போன வடிவங்களையெல்லா யோசிப்பேன். சிலவற்றைப் பதிவுசெய்து எதிர்விளைவுகளை எதிர்கொள்வது என்பது எனக்குப் பிடித்தமானவொன்றாகும். உங்களின் கருத்தையும் அப்படித்தான் எடுத்துக்கொள்கிறேன். நன்றி. தொடர்ந்து வாருங்கள்.

    ReplyDelete
  5. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு
    கனவு ஒவ்வொருவிதமாய்
    கனவே கலையாதே!

    ReplyDelete
  6. கனவாகிப் போகாமல் எல்லாம் நனவாகட்டும்

    ReplyDelete
  7. உங்களின் வலைதளத்திற்கு புதியவன். உங்கள் கருத்தை வை.கோசார் அவர்களின் தளத்தில் படித்தேன். மிக நன்றாக கருத்துதை சொல்லி இருந்தீர்கள். நீங்கள் வலைதளம் வைத்து நிச்சயம் நல்ல விஷயங்களை சொல்லிருப்பிர்கள் என்ற நம்பிக்கையில் வந்தேன் நம்பிக்கை பொய்க்கவில்லை.கனவு பற்றி நீங்கல் எழுதியது நன்றாக் இருக்கிறது.

    ReplyDelete
  8. உங்களின் வலைதளத்திற்கு புதியவன். உங்கள் கருத்தை வை.கோசார் அவர்களின் தளத்தில் படித்தேன். மிக நன்றாக கருத்துதை சொல்லி இருந்தீர்கள். நீங்கள் வலைதளம் வைத்து நிச்சயம் நல்ல விஷயங்களை சொல்லிருப்பிர்கள் என்ற நம்பிக்கையில் வந்தேன் நம்பிக்கை பொய்க்கவில்லை.கனவு பற்றி நீங்கல் எழுதியது நன்றாக் இருக்கிறது.

    ReplyDelete
  9. //ஒரு கனவு ஆனந்தப்படுத்துகிறது// அதில் கிடைக்கிற திருப்தி அலாதி!

    ReplyDelete