தமிழின் இலக்கியங்களில பல கனிச்சுவைகள நிறைந்து கிடக்கின்றன. இவற்றின் ஈடற்ற சுவைக்குக் காரணம். சொல்வளம்.
ஒரு மொழியின் நிலைபேற்றிற்கும் இறவாத் தன்மைக்கும் அழியாப்
புகழிற்கும் அம்மொழியின் நிரம்பிய சொல்வளமே காரணம். எனவே அவற்றின்
சொல்வளச் சுவையை பருகிமகிழலாம்.
சில சொற்களை அடையாளப்படுத்தலாம். இவற்றை நீங்கள் படித்து சுவைக்கலாம். மறந்தும்போகலாம். ஆனாலும் இதன் சுவை என்றைக்காவது நினைக்கும்போது சுவைக்கும். தமிழ்ச்சுவை என்றைக்கும் சுவைக்கும்.
இவற்றில் பல வகைகள் உண்டு. அவற்றில் அன்றைக்குப் புழங்கிய சில சொற்களுக்கான பொருள்களை மட்டும் முதல் வகையாக சுவைக்கலாம்.
ஏரின் வாழ்நர்=உழவர் (ஏரைத் தொழிலாகக் கொண்டு
பிழைப்பவர்)
கவைமுட்கருவி=அங்குசம்
( கவை போன்று வளைந்தும்
நுனியில் முள்ளை உடையதும்
ஆன கருவி)
வெண்கல் = உப்பு
அவிழ்பதம்= சோறு
கழிகலமகளிர்=விதவை (அணிகலன்களை நீக்கிய
மகளிர்)
அறுகாற்பறவை/=வண்டு (ஆறு கால்களையுடையது)
நேர்வாய்க்கட்டளை= சன்னல்
உரிமை மைந்தர் = கணவர்
மனை முதலோள்= மனைவி (வீட்டிற்கு முதல்வள்)
குளிர்= நண்டு
அணங்கு=பேய் (பெண் என்பது இன்றைய பொருள்)
சுவையும் வகையும் தொடரும்.
அழகான சொற்கள்... நன்றி ஐயா...
ReplyDeleteஇதுவரை அறியாத அருமையான சொற்கள்
ReplyDeleteபதிவாக்கித் தந்தமைக்கு வாழ்த்துக்கள்
தொடர வாழ்த்துக்கள்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்
அரிய பொருள் அறிந்தேன். அனைத்திலும் அணங்கின் மாறுபட்டப் பொருளுணர்ந்து அதிர்ந்தேன். ஏனையவை கண்டு வியந்தேன். தமிழின் சொல்வளம் அறியச் செய்யும் தங்கள் முயற்சிக்கு மிகவும் நன்றி ஹரணி சார்.
ReplyDelete