Saturday, January 28, 2012

எப்போதும் சாகலாம் 
எப்போதும் வாழலாம் 
கிடைத்ததை உண்ணலாம் 
ஓடி ஒளிந்து திரியலாம் 
யாரிட்ட வாழ்க்கை
யாரிட்ட உணவு 
யாரிட்ட சாவு 
என்றறியாமல் பெட்டிகள்தோறும்
ரயிலிலே அலையும் கரப்புகளிடம் 
கற்றுக்கொள்ளவும் நிறையவே...   

10 comments:

  1. யதார்த்தின் எளிமையும் சிந்தனையின் வலிமையையும் ஒருசேர ஓர் கவிதை...வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  2. எதனிடமும் எவரிடமும் கற்றுக் கொள்ளலாம
    பக்குவம் இருந்தால்
    எந்தக் காட்சியையும் அழகிய படைப்பாக்கிவிடமுடியம்
    கவிதைத் திறமிருந்தால்
    அருமையான படைப்பு
    மிக மிக அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. லட்சோபலட்சம் வருடங்களாக தங்கள் இருப்பை நிலைநிறுத்தும் ரகசியத்தையும் அவற்றிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும். குறுகிய வரிகளுக்குள் பெரிய சித்தாந்தம். பாராட்டுகள் ஹரணி சார்.

    ReplyDelete
  4. '''பெட்டிகள்"".......
    அது சரி! வாழ்க்கை என்றால் அப்படித்தானே இருக்க வேண்டும் ஹரணி சார்

    ReplyDelete
  5. உண்மை. எல்லா ஜீவராசிகளிடமிருந்தும் கற்க நிறையவே இருக்கிறது. தேவை என்னவென்றால் உங்களை மாதிரி கவனிப்பும் சிந்தனையும்.

    ReplyDelete
  6. கரப்பு - சிறப்பு..!

    ReplyDelete
  7. வீடு வாசல் மக்கள் கடன் சேமிப்பு மானம் அவமானம் -ஏதுமிலாக் கரப்பே!குருவா நீ?அருவருக்கும் உனக்கு அந்தஸ்து தந்துவிட்டார் ஹரணி

    ReplyDelete
  8. அன்புள்ள பத்மா அவர்களுக்கு

    நான் வெளியூர் செல்லும் தருணங்களில் என்னுடைய மகனை என்னுடைய ஏதேனும் ஒரு கவிதையை பதிவிடு எனும்போது அவனுக்குத் தமிழ் தட்டச்சு தெரியாததன் காரணமாக கத்தரித்து எடுத்து ஒட்டும்போது பெட்டிகல் என்று வந்துவிட்டது. மன்னிக்கவும். திருத்திவிட்டேன். நீண்ட நாட்களுக்குப் பின் வந்த உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

    ReplyDelete
  9. அன்புள்ள சக்தி அவர்களுக்கு...

    புதிய வருகைக்கும் ஆழ்ந்த கருத்துரைக்கும் நன்றிகள்.

    ReplyDelete
  10. எனது மனமார்ந்த நன்றிகள்.

    1. மரு.மயிலன்.
    2. திருமிகு ரமணி
    3. திருமதி கீதா
    4. திருமிகு ஜிஎம்பி
    5. திருமிகு ரிஷபன்.

    ReplyDelete