யார் சொல்லியும் கேட்பதில்லை
அம்மா ...
அப்பாயிறந்தபிறகும் அவள் உறவுகள் மட்டுமே
தன்பென்ஷன் முழுக்கவே என்பெண்ணுக்குதான்
என்பதிலும் உறுதியாகவே இருக்கிறாள்
என் புருஷன் சம்பாதித்தது அனைத்தும்
எனக்குதான்...
கொடுப்பதிலும் என் முடிவுதான்
அன்பாகப் பேசுகிறவர்களிடம் அன்பாகவே
காயப்படுத்துகிறவர்களிடம் பதிலும் காயமாகவே
எழுதவும் படிக்கவும் தெரியாதவள்தான்
கைரேகை வைப்பதில்கூட பெருமைதான் அவளுக்கு
ஆனாலும் அவளின் உலகம்
மிக சுருங்கியது என்றாலும் அதிகாலையில் எழுவது
வெள்ளி செவ்வாய் வீடலசி விளக்கேற்றுவது
கோயிலுக்குச் செல்வது
எல்லாவற்றிலும் மாறுவதேயில்லை
மாற்றிக்கொள்ளவும் தயாராகவில்லை
அவளின் பிள்ளைகள் நாங்கள்தான்
புயற்காற்றில் அலையும் பொருட்களாய்
குணம் மாற்றி கொள்கை மாற்றி இயல்பு மாற்றி
வாழ்கிறோம் என்கிறோம்
வாழ்வின் அலைகழிப்பில் ஒவ்வொரு நொடியும்
அதிர்வுகளோடு...
இரசிக்கும் விதத்தில் அல்ல..உணரும் விதத்தில் படைக்க பட்ட ஓர் உன்னதமான கவிதை... வாழ்த்துகள் ஐயா...
ReplyDeleteபுயற்காற்றில் அலையும் பொருட்களாய்
ReplyDeleteகுணம் மாற்றி கொள்கை மாற்றி இயல்பு மாற்றி
வாழ்கிறோம்
கவிதைக் கதை.
அவள்..அவளாகவே இருந்து குழப்பம் இல்லாமல் இருக்கிறாள் நாம்தான் தினமும் மாறி மாறிக் கொண்டு நம்மையும் குழப்பி கொண்டு அவளையும் குழப்ப முயற்சிக்கிறோம். இது மாதிரி நல்ல படைப்புகளை நல்ல பெரிய மனிதர்களிடம் இருந்து வந்து படிப்பதில் மிக சந்தோஷம் ஐயா வாழ்த்துக்கள்
ReplyDeleteஉறுதியான உள்ளம் கொண்ட பெரியவர்கள் பிள்ளைகளினும் ஆரோக்கியமானவர்களே... அருமை ஐயா...
ReplyDelete//புயற்காற்றில் அலையும் பொருட்களாய்
ReplyDeleteகுணம் மாற்றி கொள்கை மாற்றி இயல்பு மாற்றி
வாழ்கிறோம் என்கிறோம்
வாழ்வின் அலைகழிப்பில் ஒவ்வொரு நொடியும்
அதிர்வுகளோடு...// அவர்களை அவர்கள் வழியிலேயே விடுவதுதான் சிறந்தது. அவர்களை மாற்ற முயல்வதைவிட நம்மை மாற்றி கொள்ள முயற்சிகள் எடுப்பதே உத்தமம். தலைமுறை இடைவெளியை இளையவர்கள் ஏன் உணரக் கூடாது.?
அம்மா அம்மாவாகவே இருந்துவிட்டுப் போகட்டும்! நம் நிலை மாற்றிக் கொள்ள முயற்சிப்போம்.
ReplyDeleteவெறுமனே இருத்தல் என்கிற படமாக இல்லாமல்
ReplyDeleteசெயலோடு கூடிய படமாகக் கொடுத்ததும்
அதற்கு விளக்கமாக கொடுத்த பதிவும் மிக மிக அருமை
மன்ம் கவர்ந்த பதிவு
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
புயற்காற்றில் அலையும் பொருட்களாய்
ReplyDeleteகுணம் மாற்றி கொள்கை மாற்றி இயல்பு மாற்றி
வாழ்கிறோம் என்கிறோம்
வாழ்வின் அலைகழிப்பில் ஒவ்வொரு நொடியும்
அதிர்வுகளோடு... // இந்த வரிகள் நாம் நம் மூதாதையர்களின் செயல்களில் இருந்து எவ்வளவு தூரம் விலகி இருக்கிறோம் என்பதை உணர்த்துகிறது .