Wednesday, June 13, 2012

இல்லாமல இருத்தல்


         முன் குறிப்பு .  இந்த தலைப்பு எனக்குப் பிடித்திருந்தது. இது ஒரு சிறுகதைத் தொகுப்பின் பெயர். கவிதைக்குரிய தலைப்பாகவும இருந்தது. எனவே இந்த தலைப்பை இரவல் வாங்கி கவிதை எழுதிவிட்டேன். அந்த நண்பர் முனைவர் குணசேகரன் அவர்களுக்கு நன்றி. அவரின் சிறுகதைகள் குறித்து நாளையை பதிவில். இப்போது கவிதை மட்டும்.


                      பகல் எல்லாம் ஆட்டம் காட்டிய தன் நிழலை
                     இரவெல்லாம் தேடிக் களைக்கின்றன மரங்கள்
                     இல்லாமல் இருத்தலின் ரகசியம் அறியாமல்.

                     இல்லாமல் இருப்பதை உணர்த்துவது
                     இருப்பதில் உள்ள இல்லாமையை உணர்த்துவதற்கு
                     அல்லது மறைப்பதற்கு...

                     இருப்பதை இல்லாமல் செய்யும் இருத்தலை
                      இல்லாமல் இருத்துவது ஞானம்...

                      எதிலிருந்து இல்லாமல் ஆகி புவியில் இருந்து
                      நீளும் வரை நீளும் நிழல்கள் மறுபடியம
                     இல்லாமல் போவது இருப்பதில்தான்...

                      இல்லாமல் மனத்தை இருத்துவது அற்புதம்
                      இருத்தியதை இல்லாமல் காட்டுவது வித்தை
                      இல்லாமல் காட்டியதை மனத்தில் இருத்துவது பூரணம்
                      பூரணத்துவத்தின் இல்லாமையை இயல்பாக்குவது
                      முழுமையின் இருத்தல்.. வாழ்வின் முழுமை...


                      இல்லாமல் இருக்கவும் இருந்து இல்லாமல் போவதும்
                      பயிற்சியில் விளைவது,,, பக்குவத்தில் வளர்வது
                      எனவே உலகமெங்கும
                     இல்லாமல் இருத்திய இடங்களும் சூழல்களும்
                     இருத்திய இடங்கள் இல்லாமல் இருப்பதும்
                     என அந்தரத்தில் இயஙகுகின்றன,,
                      இதையறியாமல்தான் வாழவின் எல்லா
                      சூத்திரஙக்ளும் உடைந்து கரைகின்றன இல்லாமல்



                     இல்லாமல் இருத்தல் சுகம்...
                     இருத்தலில் இல்லாமை அதைவிட சுகம்...

8 comments:

  1. ஐயா.....வணக்கம்.....
    வலைச்சரத்துல உங்கள பத்தின அறிமுகம் பாத்தேன்......
    உங்க வலைபதிவு ரொம்ப நல்லாருக்கு.
    எனக்கும் தாஞ்சாவூர் பக்கம் தான்.....
    நண்றி.............

    ReplyDelete
  2. இல்லாமல் இருத்தலின் இருத்தலை
    இருக்கமாய் வடித்ததலில் இருந்தது ..........உங்களின் இருப்பு ..........அருமை

    ReplyDelete
  3. நல்லா இருக்கு சார்.., நானும் தஞ்சாவூர் பக்கம் தான் :)

    ReplyDelete
  4. நல்ல கவிதை ஹரணி சார்!

    ReplyDelete
  5. இல்லாமல் இருத்தல் சுகம்...இருத்தலில் இல்லாமை அதைவிட சுகம்...

    அருமை . இருத்தலில் இல்லாமை ஞானத்தின் வாசல்.

    ReplyDelete
  6. எனக்கும் இந்த தலைப்பு பிடித்து விட்டது. என் "எக்காலம்" கவிதையில் ஒரு வரி சேர்த்து விட்டேன் - தங்கள் அனுமதி இல்லாமல்

    ReplyDelete
  7. இல்லாமல் மனத்தை இருத்துவது அற்புதம்!!

    ReplyDelete