Monday, June 18, 2012

கதம்பக் கூடை


                    (1)

                     நாம் எல்லோரும் அறிந்த செய்திதான். இருப்பினும் இதனை இன்னொருமுறை எண்ணிப்பார்ப்பது நலம். கல்கியில் வெளிவந்த கட்டுரையில் சில தகவல்கள் மடடும் (24.06.2012 தேதியிட்ட கல்கி)

         முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியான திருமிகு என். சந்தோஷ் எஹக்டே, இவர் சென்னை ஒரு நிகழ்விற்காக வந்த கட்டுரை அது,

               அ,. தாங்கள் யாருக்காகத் தேர்ந்தெடுககப்பட்டிருக்கிறோம் எதற்காகத்
                      தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறோம் என்று தெரியாத நிலையில்
                       நாடாளு மன்ற உறுப்பினர்கள் இருப்பது சீரழிவுக்கு சரியான
                      எடுததுக்காட்டு.

               ஆ, தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு வெறும் வாக்காளர் என்ற
                      தகுதியை மட்டும் நிர்ணயிக்கக்கூடாது, அவர்கள் அழுத்தமாகப்
                      பணிபுரிய அனுபவம் அறிவும் தேவைய்ர்க இருக்கிறது, எனவே
                      தேர்தலில்போட்டியிட கூடுதல் தகுதியாக எதையாவது வைக்க
                      வேண்டும் என்று டாக்டர் அம்பேத்கார் கூறினார். அவரது
                      நோக்கம் குறைந்த பட்சக் கல்வித் தகுதி நிர்ணயிக்கவேண்டும்
                      என்று அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

                 இ. அதேபோல அமைச்சர்களாக வருபவர்கள் நேர்மை, நாணயம்,
                       மட்டுமல்லாது ஒழுக்கம் கொண்டவர்களாக இருக்கவேண்டும்
                       என்றும் கருத்து சொல்லப்பட்டது. ஆனால் அந்தக் கருத்து ஏற்கப்
                       படவில்லை.

                 ஈ, ஒரு நாள் நாடாளுமன்றம் நடக்கும் செலவு ஒருகோடியே 23
                      இலட்சம்,  ஒருநிமிடத்துக்குக் கிட்டத்தட்ட 23000 ஆயிரம்
                       செலவாகிறது,

                உ, இப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களில் 150 பேர் குற்றப்
                       பின்னணி உடையவர்கள். இவர்கள் மீது மொத்தமாக 412 வழக்குகள்
                       உள்ளன.

               ஊ, ஒரு கூலித்தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கி முதல்வர்
                       ஆன மதுகோடா 4000 கோடி ரூபாய் வர்த்தகத்தில் புரட்டினார்.......

                                                       நன்றி கல்கி .


                       அரசு மருத்துவமனைகளில் கால்கடுக்க வெயிலில் எத்தனை எத்தனை ஆயிரம் மக்கள் வரிசையில நிற்கிறார்கள். கொடுக்கிற வெள்ளை மாத்திரைகளும் ஊற்றுகிற சிரப்களும் எல்லா நோயையைம் தீர்க்கவல்லது என்கிற நம்பிக்கையில் காலகாலமாய்......ஏதேனும் வறுமையின் பிடியில் ஏழைகள் சண்டையிட்டால் அவர்களை ஏதோ தேசக் குற்றம் செய்ததுபோல காவல்நிலையத்தில் வைத்து பெரிய ஒன்றைக் கண்டுபிடித்ததுபோல விசாரிப்பது...நன்றாக மதிப்பெண்கள் எடுதத மாணவர்கள் படிப்பைத் தொடரமுடியாமல் படுகிற அவஸ்தைகள்...நாற்பது வயதாகியும் திருமணம் ஆகாமல் தறகொலை செய்து சாகிற கணக்கிலும் செய்தியிலும் வராத பெண்கள்....கடைசிவரை குடிசைவாசிகளாக இருந்து உழல்பவர்கள்...

                        சரி விடுங்கள்.. சாகப்பிறந்த இவர்களைப் பற்றி என்னப் பேச?

                        இவர்கள் கோடியில் நின்றால் என்ன நாம் கோடி சம்பாதிப்போம்.
என்றவர்கள் எந்நாளும் நோய் நொடியின்றி வளர்கள் நுர்றாண்டு காலம் வாழ்க...

000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

          விஜய் டிவியில் திருமிகு கோபிநாத் அவர்கள் ஒரு நிகழ்ச்சி நடத்தி வருகிறார். நீயா நானா?,,, இப்போதுதான் அதற்கு எனக்கு அர்த்தம் புரிந்தது அதாவது காம்ப்யர் புரிகிற நானா... விவாதத்தில் பங்கெடுக்கிற நீயா?
பார்த்துவிடுவோம்...

                எத்தனையோ நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. சில ஆரோக்கியமானவை. அதற்கு சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்படுபவர்களிலும் ஒருசிலரைத் தவிர மற்றவர்கள் ஏதோ வந்ததற்கு கருத்துரைப்பார்கள்.

                சமீபமாக ஆண்கள் பெண்கள் குறித்த பல தலைப்புக்களில் விவாதங்கள் நடந்து வருகின்றன. காண சகிக்கவில்லை.

                நேற்று நடந்த நிகழ்வில் கோபிநாத் ஒரு பெண்ணிடம் கேட்கிறார் எதிரில் உள்ள ஆண்களில் பிடித்தவர் யார்? ஏன்,,, உங்களுக்கு யாரைப் பிடிக்கும்? அலுவலகத்தில் யாரைப் பிடிக்காது? எதனால் பிடிக்காது...

              ஒரு அலுவலகத்தில் வாழ்க்கையின் நிலைப்பாட்டிற்காக வேலைக்குப் போய் தனக்குப் பிடிக்காத நபர் இவர் என்று அலுவலகத்தில் தன்னோடு பணிபுரிபவரை சொன்னால் மறுநாள் எப்படி அந்தப் பெண் அலுவலகத்தில் அதனை எதிர்கொள்வாள். அல்லது அந்த நிறுவனத்தில் பணிபுரியும்வரை எப்படி நடந்துகொள்ளமுடியும்.. காம்ப்யர் என்றால் எதைவேண்டுமானாலும் கேட்கலாம் என்று திரு கோபிநாத் நினைத்துக்கொண்டிருக்கிறார் ...
பலபேர் ஏன் உலகெங்கும் பார்க்கிற ஒரு நிகழ்வில் தனக்கு எல்லாம் தெரியும் என்கிற மனோபாவம்..தான் நினைத்த முடிவிற்கு அந்த நிகழ்வின் பொருண்மையைக் கொண்டுவருவது...சிலசமயம் கேள்விகள் கூசுகின்றன அவர் கேட்பதைப் பார்க்கும்போது... நிகழ்வுக்கு வந்தவர்கள் அதை எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்று தெரியவில்லை. ,,,இதுபோன்ற பல நிகழ்வுகள் நீயா நானா என்பதில்.. யார் அதிகம் மொக்கை போடுவார்கள்... யார் கடலை போடுவார்கள்... இதுபோன்ற கேள்விகளில் இந்த சமுகம் பெறப்போகும் பயன் என்ன? தமிழ்ப் பண்பாட்டின் மீறலாக இவை ஏற்படுத்தும் கரும்புள்ளிகள்...

           சில நிகழ்வுகளின் பொருண்மைகளுக்கு அவர் முடிவு கூறி முடிக்கையில் வார்த்தை ஜாலம் தெரிகிறதே தவிர...அதற்கான தீர்வு என்பது வெளிப்பட்டதாகத் தெரியவில்லை. நன்றாகக் கூர்ந்துபார்த்தால் அவர் கருத்துரைப்பதில் திரும்பத்திரும்ப வரும் சொற்களும்..முரண்களும் தெரியவரும்..

                உலகமெங்கும் காட்சிக்குள்ளாகிற தொலைக்காட்சியில் வெளிப்படுவது பயனளிப்பதாக இருக்கவேண்டும் என்பதுதான் நமது விருப்பம்.
00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

                     பிற்ந்தது பின்தங்கிய வகுப்பில். செய்த குற்றம் நன்றாகப் படித்து அதிக மதிப்பெண்கள் எடுத்தது. அதைவிட மன்னிக்கமுடியாதது படித்த பையனின் தகப்பனாரின் வறுமைக்கோட்டைத் தாண்டிய சம்பளம்...

                  சரி... எந்தப் பயனும் இல்லை. எதுவும் கேட்கப்போவதில்லை. கேட்கவும் முடியாது.  நான் கிரிமிலேயர்.. என்று தந்தால் போதும். அதாவது இந்தப் பையன் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தவன். இவனுடைய தகப்பனார் அரசு வேலையில் இருக்கிறார். அவரின் சம்பளம் நிர்ணயித்த இலக்கைவிட அதிகம். எனவே அதிக சம்பளம் உடைய இவர் பின்தங்கிய வகுப்பில் பிறந்தாலும் வறுமைக்கோட்டிற்குக் கீழ் இருப்பவர்களைச் சாராதவர் எனவே இவர் மறற் பின்தங்கிய வகுப்பைச் சார்ந்தவர் எனச் சான்றளிக்கப்படுகிறது.

                இதில என்ன லாபம்?

                சரி இப்படி சான்றிதழ் வழங்குவதில் என்ன இடையூறு.. ஒன்று மிலலை. என்ன கஷ்டம் ஒன்றுமில்லை.

                   பிசி என்பது ஓபிசி எனத் தரவேண்டும். பிறந்த மாநிலத்தில் பயன்படுததினால் பிசி அயல் மாநிலங்களுக்கு செல்வதற்கு ஓபிசி.

                   இதனை வாங்குவதற்குள் படுகிற பாடு...ஏற்படுகிற மன உளைச்சல்...இதற்காக அச்சிட்டு வழங்குகிற படிவத்தில் முற்றிலும் சம்பந்தமில்லாத விவரங்கள்... அதிலும் கையொப்பமிடவேண்டும். மேலும் ஓபிசி என்றால் வேலைக்குச் செல்ல என்று மட்டுமே அச்சிடப்பட்ட படிவம். வேலைக்குச் செல்வதற்கு/ மேல் படிப்பிற்கு விண்ணப்பிப்பதற்கு என்று அச்சிட்டால் என்ன?

                   சமீபத்தில் ஓபிசி என் மகனுக்கு வாங்க பட்ட பாட்டை ஒரு சிறுகதையாகவே எழுதலாம்.

                      நன்றாக படித்தவிவரம் தெரிந்த நமககே இப்படியென்றால்... மற்ற படிக்காத பெற்றோர்களையும் அப்பாவி மக்களையும் எண்ணிப்பாருங்கள்.

                     இதனைத் தனியாக எளிமைப்படுத்தினால் என்ன?

                     விரும்பினால் நானே எளிமைப்படுத்தித் தருவேன்.

                     பின்னால் வருபவர்கள் சிரமப்படாமல் இருக்கலாம் அல்லவா?
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
                   


                       
           

14 comments:

  1. கதம்ப கூடை மிக நன்றாக இருக்கிறது. நீயா நானா பற்றி நீங்கள் சொல்லியவைகள்தான் நானும் நினைப்பது. அதைபற்றி பதிவு போட வேண்டும் என்று இருந்தேன் நீங்களே போட்டுவிட்டீர்கள்

    ReplyDelete
  2. அருமையான கருத்துகளை முன் வைத்தீர்கள் நீயா நானா பற்றி.!

    ReplyDelete
  3. கதம்பக் கூடையின் மலர்களின் மணம்
    மனம் கவர்ந்தது
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. கதம்பக் கூடை - முழுதும் மணக்கிறது.....

    தொடர்ந்து மணம் வீசட்டும்...

    ReplyDelete
  5. நீயா? நானா? நிக‌ழ்வு, தொலைக்காட்சி பெட்டியை
    ஒரு பாவ‌ம‌ன்னிப்பு பெட்டியாய் மாற்றிவிடுகிற‌து.
    சில‌ நிமிட‌ கேமிர‌ பார்வைவும், ப‌ளிர் வெளிச்ச‌மும்
    ப‌ங்கு பெறுப‌வ‌ரின் ஆள்ம‌ன‌தின் எல்லா ப‌ழுப்பு விவ‌கார‌ங்க‌ளையும்
    வெளிக்கொண்டுவ‌ந்து விடுகிற‌து. அப்பா, ம‌றைத்த‌ கொலைக‌ளைக் கூட கொட்டிவிட தூண்டிவிடுகிற‌து. மாமியார், ம‌ரும‌க‌ள் வீட்டு அந்த‌ர‌ங்க‌ம் ச‌பைக‌ளில் அர‌ங்கேற்ற‌மாக‌ காம்ப‌ய‌ரின் துணைகேள்விக‌ளும், கை த‌ட்ட‌ல்க‌ளும் கிரியாஊக்கியாய் செய‌லாற்றுகிற‌து. சில‌ நிமிட‌ ந‌ட்ச‌த்திர‌ அந்த‌ஸ்து தரும் திரை, வாழ்க்கையில் புதைக்க‌ப்ப‌ட்ட‌ அவ‌ல‌ங்க‌ளை மீண்டும் தோண்டி காட்சிப்ப‌டுத்தி, தொலைகாட்சியின் டிஆர்பி த‌எர‌ம் உய‌ர‌, த‌ங்க‌ளைத் தாங்க‌ளே தாழ்த்திக் கொள்ளும் நிலைக்கு அத‌ன் வ‌ச‌ப்ப‌ட்டுவிடுகிறார்க‌ள்.

    இந்த ரியாலிட்டி ஷோக்க‌ள், ச‌ம்ப‌ள‌ம் பெறாத‌ ந‌டிக‌ர்க‌ளால், த‌ன் சொந்த வாழ்க்கையை க‌தையாக்கி, வ‌ச‌ன‌ம் பேசி ந‌டிக்க‌, இதுவ‌ரை வேறு எங்கும் வெளியிட‌ப்படாத‌ இந்த‌ காட்சி "முத‌ன்முறையாக" எந்த‌ செல‌வுமின்றி தயாரிக்க‌ப்ப‌ட்டு, பொதும‌க்க‌ளின் பார்வைக்கு விற்க‌ப்படுகிற‌து. இருப‌து ந‌ப‌ர்க‌ள் அட‌ங்கிய‌ அந்த‌ கூட்ட‌த்தில் அல‌ச‌ப்ப‌ட்ட‌ அவ‌ர்க‌ளது படுக்கை விரிப்பின் அசுத்த‌ம், ப‌ல்லாயிர‌ம் ம‌க்க‌ளின் வீடுக‌ளின் கூட‌த்தில் காட்சிப் பொருளாவ‌தை அவர‌க‌ளால் அன்று ஊகிக்க‌ முடியால் போய் விடுகிற‌து. அன்று சிந்திய‌ வார்த்தைக‌ள் அவ‌ர்க‌ளுக்கே எஜ‌மானாய் மாற, குடும்ப‌த்தின் சூழ‌லை, த‌ன்மையை நிர‌ந்த‌ர‌மாய் மாற்றி விடுகிறார்க‌ள். உண்மை ச‌ம்ப‌வ‌ங்க‌ள் ப‌ற்றி பேச்ய்ம் இந்த‌ ரியாலிட்டி ஷோக்க‌ள் ஒரு ச‌ட்ட‌ப்ப‌டியான‌ "வாயேஷ்"(Voyage)வ‌கை சார்ந்த‌ ஒரு குற்ற‌ செய‌ல் தான்

    ReplyDelete
  6. வாசன். மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். என் மனது விரும்புவதும் இதைத்தான்.

    ReplyDelete
  7. நீயா நானா நிகழ்ச்சியை நானும் அவ்வப்போது காண்பதுண்டு. சில நேரங்களில் தேர்ந்தெடுக்கப் படும் தலைப்புகள் சிந்திக்க வைக்கும். உதாரணத்துக்கு “ வார்த்தை ” என்ற தலைப்பில் நடத்திய நிகழ்ச்சி. அதன் பலனாக எழுந்த சிந்தனை என்னை அதே தலைப்பில் ஒரு பதிவு எழுத வைத்தது. ஆனால் சமீப காலமாக வரும் நிகழ்ச்சிகள் தரம் குறைந்து காணப் படுகின்றன. கொஞ்சம் பேரும் புகழும் கிடைத்தவுடன் கிரீடம் வைத்தது போலவும் தங்கள் தலையைச் சுற்றி ஏதோ ஒளிவட்டம் இருப்பது போலவும் நிகழ்ச்சி நடத்துபவர்கள் சிந்திக்கிறார்கள். தொலைக்காட்சியில் தலை காட்டுவது கிடைக்காத பேறு என்று எண்ணி பங்கேற்பவர்கள் சிந்திக்காமலேயே ஏதேதோ பேசுகிறர்கள்.நிகழ்ச்சி தொகுப்பாளர்தான் தவறு செய்கிறார் என்றால் அதனை இயக்குபவர் நிகழ்ச்சியை ஒளிபரப்பும் முன் எடிட் செய்வதில்லையா. வாசனின் கருத்தோடு ஒத்துப் போகிறேன்.

    ReplyDelete
  8. சுளீர் வாசன்.பளீர் ஹரணி.

    துவக்கம் முதல் முடிவு வரை அந்தத் தொடரின் நோக்கமும் மொழியின் த்வனியும் அடுத்தவர்களின் அந்தரங்கத்தில் நுழையும் அநாகரீகமான செயலும் அருசியாய் இருக்கிறது.

    தன் ரத்த பந்தங்களிடம் கூடப் பகிர்ந்துகொள்ளாத பலவற்றையும் இந்த மக்கள் பகிர்ந்து கொள்வதிலிருந்து அவர்கள் யாரிடமும் பகிர வழியற்ற ஒரு அழுத்தத்தில் அமிழ்ந்திருப்பது தெரிகிறது.

    கடவுளின் சந்நிதானம் போல கோபிநாத்திடம் மண்டியிடுவதும், துவங்கிய இடத்திலேயே நின்றுகொண்டு தீர்ப்பளிக்கும் உச்சக்கட்ட அபத்தமும் மண்டிக்கிடக்கும் வனாந்தரம்தான் நீயா நானா.

    சந்தோஷ் ஹெக்டே சொல்வதைத்தான் அநேகம் தடவை நாமும் நம் சந்திப்புகளில் பேசியிருக்கிறோம்.நம்பிக்கையுடன் தொடர்வோம் ஹரணி.

    ReplyDelete
  9. சுந்தர்ஜி...

    மனம் நிறைவாக இருக்கிறது. நானும் அதே நம்பிக்கையுடன்தான் அரசியல் பற்றிய அறிவே இல்லாத நான் இப்போது அரசியல் நிகழ்வுகளைக் கவனித்து வருகிறேன் வெகு உன்னிப்பாக. உங்களின் கருத்துக்களில் யானைகள் ஊர்வலம். எனக்குத் தெம்பு.

    ReplyDelete
  10. neeyaa?
    naana?

    yosikka koodiyathu!

    ReplyDelete
  11. நீயா? நானா? அருமையான கருத்துக்கள்.

    ReplyDelete
  12. நீயா? நானா? - நான் விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று. தற்போது சற்று தரம் குறைந்ததாக தோன்றுகிறது.

    ReplyDelete
  13. அன்புள்ள தனபாலன்..

    உங்களைப் போலவே நானும விரும்பிப் பார்தத் நிகழ்ச்சிதான். நாமெலலாம் விரும்பிப் பார்ப்பதால்தான் அவர்கள் விரும்பியதையெல்லாம் சமுக நிகழ்வு எனறு காட்சிப்படுத்தும் அவலம் நேர்கிறது. நன்றி.

    ReplyDelete