இந்த கதை கிட்டத்தட்ட இருபதாண்டுகளுக்கு முன்பு படித்தது. எங்கே படித்தேன் என்று நினைவில் இல்லை. காரணம் இந்தக் கதை இன்னும் மனசை உலுக்கிக்கொண்டிருக்கிறது. இப்படியும் கதை எழுத முடியுமா என்று தெரியவில்லை. உங்களின் பகிர்தலுக்கு.
அந்தப் பெண் இளம் வயது. ஆனால் கரையான் புற்றுப்போல அவள் உடல் முழுக்க வறுமை புற்று வைத்திருந்தது. பிச்சை எடுத்து பிழைப்பவள். அவளுக்கு இரண்டு குழந்தைகள். ஒன்று பால்குடிக்கும் குழந்தை. இன்னொன்று அதைவிட 1 வயது பெரியது. ரயிலில் பிரயாணம் செய்து பிச்சை எடுப்பவள்.
ஒரு நாள் இரவுநேரம் அமாவாசை நேரம் என்று வைத்துக்கொள்ளலாம். தனது இருகுழந்தைகளுடன் பயணம் செய்கிறர்ள். பசித்த வயிறு. பால் குடிக்கும் குழந்தை பசிக்கு அழுகிறது. பேசாதிருக்கிறாள். காரணம் பசிக்கிற குழந்தைக்குப் பால் கொடுக்கமுடியாத அளவிற்கு வறுமையான தேகமும் வற்றிய மார்புகளையும் உடையவள். எனவே பசிக்கு அழும் குழந்தை அழுதுஅழுது ஒரு கட்டத்தில் இறந்துபோய்விடுகிறது. இன்னொரு குழந்தை உறங்கிக்கொண்டிருக்கிறது. இறந்த குழந்தையைக் கிடத்தி சிறிதுநேரம் அழுகிறாள். பின் ரயில் ஒரு ஆற்றைக் கடக்கையில் இறந்துபோன குழந்தையை ஆற்றில் எறிந்துவிடுகிறாள். ஏன் என்றால் இறந்த குழந்தையைப் புதைப்பதற்கோ எரிப்பதற்கோ இயலாத நிலை.
ரயில் போய்க்கொண்டிருக்கிறது. நெடுநேரத்திற்குப்பின் ஒரு ஸ்டேஷனில் நிற்கிறது. இவள் இறங்கவேண்டும் என்று நினைத்து முடிவெடுத்து எழுகிறாள். உறங்கிகொண்டிருக்கும் குழந்தையைத் துர்க்கிக் கொண்டு இறங்கலாம் என்று அதனைத் தொடும்போது அது இறந்துபோயிருக்கிறது.
பதட்டத்தில் எதை எறிகிறோம் என்று தெரியாமல் இரவு நேரத்தில் அவள் ஆற்றில் எறிந்தது உயிருள்ள குழந்தையை.
இன்றைக்கும் மறக்கமுடியவில்லை இந்தக் கதையை.
மனதை கலங்கடித்த கதை......
ReplyDeleteவறுமையின் கொடுமையால் ஒன்று இயற்கையாகவும், மற்றொன்று தாயின் கவனக்குறைவால் செயற்கையாகவும் இறந்துள்ளது எனபதைப் படிக்கும்போது. மனது மிகவும் கலங்கத்தான் செய்கிறது.
ReplyDelete;(
kalangadithathu ikkathai!....
ReplyDelete:(
ReplyDeleteஒன்றும் சொல்வதிற்கில்லை!
சொல்வதற்கு வார்த்தைகள் ஏதும் வரவில்லை !
ReplyDeleteகதை என்பதால் மனதைத் தேற்றிக்கொள்கிறோம்.
ReplyDeleteஇருப்பினும் கதையில் ஒரு லாஜிக் இருப்பதாகத் தோன்றவில்லை.
எந்த ஒரு தாயும் இறந்த ஒரு குழந்தையை, ஓடும் ரயிலில் இருந்து
எறிவாள் எனக் கற்பனை செய்ய இயலவில்லை, அன்லெஸ் ஷி இஸ்
மென்டலி அன்சௌன்ட்.
இன்னொரு பக்கம்.
பசியின் கொடுமை தாங்காது, வாழ வழி தெரியாது
உயிருடனே தன்னையும் தன் குழந்தைகளையும் மாய்த்துக்கொள்ளும்
தாய்மார் பலர் கதைகள், அல்ல ! நிஜங்கள் கண்முன்னே நடமாடத்தான்
செய்கின்றன.
பசி பத்தும் செய்யும்.
மதியையும் மயங்கச்செய்யும்.
சுப்பு ரத்தினம்.
மனதில் அதிர்வை ஏற்படுத்தினாலும்...sury சொல்வது போல நம்பத்தன்மை குறைவாக இருக்கிறது.
ReplyDeleteஅன்புள்ள சூரி..
ReplyDeleteஇது நீண்ட கதை. அதில் நிறைய வர்ணனைகள் அதாவது நீங்கள் சொன்ன லாஜிக்குடன் வரும். ரயில் புறப்படும்வரை அவள் ஏறமாட்டாள். நிறைய தயக்கங்களும் பயமுத்துடனும் இருப்பதுபோலவும். ரயில் புறப்படும் தருணத்தில் அவசரமாக ஏறுவாள். அப்புறம் இருக்கையில் உட்கார்வதற்கும் தயங்குவாள். ஒருவித பதட்டமுடன் காணப்படுவாள். இந்தப் பதட்டமே லாஜிக். நான் சுருக்கியிருக்கிறேன். ஏனென்றால் முழுமையாகப் படித்தது நினைவில் இல்லை. அந்த முடிவுதான் என்னை இக்கதையை மறக்காது இருக்க வைக்கிறது. ஒர் உண்மை சம்பவம் சொல்கிறேன். பதினான்கு மாடியிலிருந்து ஒரு குழந்தை கீழே தவறி விழுந்துவிடுகிறது. பதறி ஓடுகிறார்கள். கடைசியில் அந்தக் குழந்தை பதினான்காவது மாடியிலிருந்து விழுந்தும் சிறு காயம்கூட இல்லாமல் தப்பித்துவிடுகிறது. பெற்றவர்க்ளுக்கும் மற்றவர்களுக்கும் மகிழ்ச்சி. குழந்தையின் தகப்பன் பிள்ளையைக் கொஞ்சுகிறான்.. என் பிள்ளை அதிர்ஷ்டமான பிள்ளை. ஆயுள் கெட்டி. தப்பித்துவிட்டான் பாருங்கள் என்று ஆசையாய் துர்க்கிப் போட்டு விளையாடும்போது மேலே ஓடிக்கொண்டிருக்கும் மின் விசிறியில் அடிபட்டு இறந்துபோய்விடும் அந்தக் குழந்தை. இது இந்தியாவில் ஒரு மாநிலத்தில் நடந்த கதை. செய்தித்தாளில் படித்தது. இப்படி பல கதைகள். எனவே நான் சுருக்கியதால் ஒருவேளை உங்களுக்கு லாஜிக் பிடிபடாமல் போயிருக்கும். இன்னும் சொல்லப்போனால் நான் கதையின் முடிவைக்கொண்டு ஒரு உருவம் தந்திருக்கிறேன். அவ்வளவுதான். நன்றி சூரி.
நன்றி சேக்கிழார் கல்பனா.
கதைதான் எனினும், மனதில் அதிர்வை ஏற்படுத்தும் கதை.
ReplyDeleteசில நிஜங்கள் கற்பனையை விட அதிர்ச்சி தரும். இதுவும் அது போலத்தான்.
ReplyDeleteYAPPAAAAAA!!??
ReplyDelete