அன்புள்ள...
வணக்கமுடன் ஹரணி.
தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேலாகக் கணிப்பொறியில் ஏற்பட்ட பழுது இன்றைக்குத்தான் சரியாயிற்று. எனவே எந்தப் பதிவையும் இடமுடியாமல் போனது வருத்தம்.
19.6.2012 இல் மாநில அளவில் நடத்திய் கலைஞர் அறக்கட்டளைச் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு அறிவிக்கப்பட்டது. அது கனிந்து நேற்று 09.06.2013 அன்று தஞ்சாவூர் கலைஞர் அறிவாலயத்தில் மாண்பமை முன்னாள் மத்திய அமைசசர் திருமிகு பழனி மாணிக்கம் அவர்கள் தலைமையிலும் மாண்பமை அமைச்சர் உபயதுல்லா அவர்கள் முன்னிலையிலும் சான்றிதழும் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.
பரிசு வழங்கிய கலைஞர் அறக்கட்டளையினருக்கும் இதனை இன்று செய்தித்தாள்களில் வெளியிட்ட தினமணி. தினத்தந்தி இதழ்களுக்கும் நன்றிகள்.
இந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்கிறேன்.
35 ஆண்டுகளாகத் தொடர்ந்து விடாது எழுதிவரும் சூழலில் இத்தகைய பரிசு மிக ஊக்கமானது.
இனி பதிவுகள் தொடரும்.
சந்திப்போம்..
அன்புடன்
ஹ ர ணி
மனமார்ந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
ReplyDeleteஇதயம் கனிந்த நல் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்கின்றேன் அய்யா. வாழ்த்துக்கள்
ReplyDeleteமனமார்ந்த பாராட்டுக்கள்
ReplyDeleteமேலும் பல விருதுகளைப் பெற வேண்டும். மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!..
ReplyDeleteமகிழ்ச்சிப் பகிர்வுகளுக்கு இனிய வாழ்த்துகள்..!
ReplyDelete
ReplyDeleteவெற்றி மேல் வெற்றி வந்து உங்களை நாடும். உங்கள் மின் அஞ்சல் முகவரியோ, தொலைபேசி எண்ணோ கொடுத்தால் , நாங்கள் இந்த முறை ஆலய தரிசனத்துக்குப் போகும் போது உங்களைத் தொடர்பு கொள்ள உதவலாம். நன்றி.
//தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேலாகக் கணிப்பொறியில் ஏற்பட்ட பழுது இன்றைக்குத்தான் சரியாயிற்று. எனவே எந்தப் பதிவையும் இடமுடியாமல் போனது வருத்தம்.//
ReplyDelete.
இனி அப்படியெல்லாம் சொல்லப்படாது.
மனம் கனிந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!
ReplyDelete