வாலி.....
ஒரு பாடல் சகாப்தத்தின் முடிவு....
அஞ்சலி...
எத்தனையோ எழுதினாய்
அத்தனையும் அருவியாய்
கொட்டினாய்...
எதையும் எழுதமுடிந்தவன்தான் நீ
அதற்காக
மரணத்தின் பாடலை உனக்கே
எழுதிக்கொண்டாயா?
மரண இசைக்குறிப்பிற்கு
நீயேவா பாடலாவது?
மண்ணுலகையெல்லாம்
பாட்டில் வைத்தாய்
அதனால் தீர்ந்ததென்று
விண்ணுலகம் சென்றாயா
சொல் தேடி?
உனக்காக அழக்கூட சொல்லில்லை
எங்களிடத்தில்
எந்தச் சொல்லும் உன் கைப்பட்டதல்லவா
என்றே ஒரு சொல்லை உலகுதிர்க்க
நின்றவனல்லவா?
வாலிக்கு வசப்படாத ஒன்றுண்டா
என்றே வசப்பட்ட புகழிற்கு
மயங்கி மரணத்தையுமா
வசப்படுத்துவாய்?
நெருப்பு உன்னுடலில்
பல்லவியெடுத்து சரணம்தொடுக்க
மௌனச் சொற்களால் நீ எழுதிக்
கொண்டிருக்கும்
பாடலே எங்களுக்குக் கடைசியாய்
கண்ணீரில் சேகரித்துக்கொண்டிருக்கிறோம்..
உன் பாணியில்
சொல்வதென்றால்
வாலியுன் பிரிவு
பிரிக்கமுடியாத வலிதான்
இசைக்கு இன்பம் எழுதியவன் நீ
இசைந்தது மரணத்திற்கு இன்பமானது
எங்கள் கண்ணீரின் இசைக்கு
உனது மரணத்தைப் பாடலாக்கிய
மகத்துவத்தை என்றைக்கும்
மறக்காதிருக்க எழுதிப் போனாயோ?
0000000000000
.
பாட்டெழுதி புகழ் பெற்றவனுக்கு பாட்டாலேயே ஒரு அஞ்சலி. வாலியின் பிரிவு பிரிக்க முடியாத வலிதான். இருந்தாலும் தவிர்க்க முடியாததாயிற்றே. இரங்கலில் பங்கேற்கிறேன்.
ReplyDeleteஇரங்கல்பா அருமை...
ReplyDeleteவரிகளால் என்றும் மனதில் வாழ்வார்...
கவிஞர் வாலி அவர்களின் பிரிவின் வலி - தங்களுடைய கவிதையில் தெரிகின்றது... காலம் எல்லாவற்றையும் ஆற்றும் . மாற்றும்!..
ReplyDeleteகண்ணீர் அஞ்சலி....
ReplyDelete