நீயின்றி எதுவுமில்லை பெண்ணே........
ஆயிரம் இன்னல்கள் உனக்கிங்கு
இழைத்தாலும்
நீயின்றி எதுவுமில்லை பெண்ணே....
உயர்திணை என்று உலவுகின்ற
எவ்வுயிரும் உனது கருவறையின்
விலாசத்தில்தானே தொடங்குகின்றன..
பெண்ணற்ற எதுவும் களரென்று
உரைத்திட்ட பாவரிகள் என்றும் அழிவறியா
அமிழ்தம்தானே..
கல்லிற்கு உயிர் வழங்கவும்
மண்ணிற்கு மணமூட்டவும்..
வறண்ட மனமெதுவாயினும்
ஈரம் இசைக்கவும் வாழ்வின் ஒவ்வொரு
அணுவிலும் இயக்கமும் நீயின்றி எதுவுமில்லை
பெண்ணே...
தாயாக நினைக்கிறேன்
தமக்கை உறவின் விரிவாக நினைக்கிறேன்
தளர்வுறா வாழ்வின் எல்லைவரை
என்னுயிரை காத்துநிற்கும் மனம் இனிக்கும்
மனைவியாய் நினைக்கிறேன் எங்கேனும் அமைந்துவிட்டால் நல்ல தோழியாயும்
தக்க வைக்கிறேன்
எதுவாயினும் முழுமையென்பது
பெண்மை ததும்புவதால்தானே
பன்முகமாய் படர்ந்திருக்கும்
உன்னை
மனம் நிறைய மணத்துடன்
மாறாத அன்புடன்
வணங்குகிறேன் பெண்ணே.... வாழியவே
என்றைக்கும் நிலைத்திருக்கும்
இயற்கையின் வடிவாய்...
00000000000
வீர வணக்கங்கள்...
ஔவையார்
வெள்ளிவீதியார்
ஜீஜீபாய்...
ஜான்சிராணி
அன்னை தெரசா
அன்னை இந்திரா பிரியதர்ஷினி
அன்னை கஸ்துர்ரிபாய்
இப்படியாக எல்லோருக்கும்..
00000000000000
உலகின் வடிவம் பெண்
உயிரின் வடிவம் பெண்
இயற்கையின் வடிவம் பெண்
இயங்கும் வடிவம் பெண்
பெருமைமிகு பெண்
போற்றுவோம்..
00000000000
அருமை..நன்றி ஐயா.
ReplyDeleteசிறப்பான பகிர்வு ஐயா...
ReplyDeleteசர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துக்கள் - என்றும்...
சிறப்பான கவிதை..
ReplyDeleteமகளிர்தின நல்வாழ்த்துக்கள்..
நீண்ட நாட்களுக்கப் பிறகு தங்களின் பதிவினைக் காணும்போது மகிழ்ச்சி எழுகிறது.
ReplyDeleteஅருமையான பதிவு ஐயா
நன்றி
இந்திரா காந்தியின் அமைச்சரவையில் இருந்த ஒரே ஆண், இந்திரா காந்திதான் என்று சொல்வார்கள். (இந்தியாவின்) பிரதமராக இருந்த கடைசி ஆணும் அவர்தான் என்று பின்னால் வந்தவர்கள் நிரூபித்துவிட்டார்கள். நினைவூட்டியதற்கு நன்றி நண்பரே!
ReplyDeleteஅன்புள்ள
ReplyDeleteதிருமிகுதேன்மதுரத்தமிழ கிரேஸ்
திருமிகு திண்டுக்கல் தனபாலன்
திருமிகு துரை செல்வராஜ்
திருமிகு கரந்தை ஜெயக்குமார்
கருத்துரைக்கும் அன்பிற்கும் நன்றிகள்.
This comment has been removed by the author.
ReplyDelete