ஒரு கணம் இதயம் உறைந்துவிட்டது இயங்காமல். மிருகங்கள்கூட குழந்தைகள் என்றால் இரக்கம் காட்டும் என்பதற்கு ஏராளமான செய்திகள் வருகின்றன.
மிருகத்தைவிடக் கேவலமானவர்கள் என்பதை தாலிபான்கள்......காட்சிப்படுத்தியிருக்கும் கொடூரச் செயல் இது.
பிள்ளைகள் என்ன செய்தன?
படிக்கிற வகுப்பறைக்குள் மரணத்தையா பாடமாகப் போதிப்பது.
என்ன நடக்கிறது என்று நினைப்பதற்குள் அம்மாவைக் கூட நினைக்கமுடியாமல் உயிர் போயிருக்குமே... தாலிபான் பாவிகளே.. நீங்கள் ஒருவர்கூட தாய்க்குப் பிறக்கவில்லை...
அம்மா என்று மிருங்கள்கூட உச்சரிக்கின்றன. உங்களுக்குத் தெரியாமல் போய்விட்டன.
இவர்களைப் பிள்ளைகளாகப் பெற்றதாக எண்ணிய தாய் உள்ளங்களே.. உங்கள் இதயத்தை அடைத்துவிடுங்கள் இந்தப் பாவிகளுக்குத் துளிகூட கருணையின்றி..
இயக்கம் என்பதற்குப் பெரிய பொருள் உண்டு. ஒவவொரு தேசத்திலும் விடுதலைப் போராட்டச் சூழமைவில் இயக்கங்கள் மிகப்பெரிய தியாகத்தை செய்திருக்கின்றன. அவை அந்தந்த தேசத்தில் மிகப்பெரும் நன்மைகளை ஏற்படுத்தியவை.
குழந்தைகளைக் கொல்கிற ஒன்று எப்படி இயக்கமாக இருக்கமுடியும்? உலகின் மிகச்சிற்ந்த கோழைகள், எதற்கும் தகுதியற்ற தீவிரவாதம் என்கிற ஒரு விஷத்தை மட்டுமே உண்கிற கொலைகார பாவிகள்... ஒன்று சேர்ந்திருக்கிற மலமடிக்கும் சாக்கடை.. இயக்கமல்ல...
காலையில் பள்ளிக்கு அனுப்பிய பிள்ளைகளை பிணங்களாகப் பெற்ற தாய்களுக்குத் தந்திருக்கிறீர்கள்... அந்த தாய் உள்ளங்கள் என்ன பாடுபடும்? அவர்களின் சாபம் உங்களைப் போன்ற இயக்கங்களை விரைவில் அழித்து சாம்பல் ஆக்கிவிடும்.. இது சத்தியம்..
அல்லா உங்களை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்... அல்லாவின் தண்டனை உங்களுக்கு நிச்சயம் உண்டு.
இளம் பட்டாம்பூச்சிகளே
சிறகடிக்க வழியற்று
உயிரறுத்துப்போனார்கள் பாவிகாள...
இதயத்தின் வேதனை அடங்கவில்லை.
பிள்ளைகளே....பிள்ளைகளே...
உங்களின் ஆன்மாவில் என்னைப்
புதைக்கிறேன்... செய்வதறியாமல்...
மீண்டும் பிறந்து வாருங்கள்
உங்களின் தாயின் கருவறைக்குள்...
அல்லாவையும் ஆண்டவனையும்
வேண்டி நிற்கிறேன்...
கோழைகள்
ReplyDeleteஅவர்களுக்கு ஒருபோதும் மன்னிப்பு கிடைக்காது!..
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஐயா
இப்படியான கோழைகளுக்கு வேறு விதமாக தண்டனை கொடுக்க வேண்டும்.. சொல்லிய விதம் மனம் நெகிழ வைத்து விட்டது பகிர்வுக்கு நன்றி
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: பருவமாறிந்து பருவச்சிறகை விரித்தேன்.:
கவிதையாக என்பக்கம் வாருங்கள் அன்புடன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
குழந்தைகளைக் கொல்கிற ஒன்று எப்படி இயக்கமாக இருக்கமுடியும்?
ReplyDeleteஇவர்கள் எல்லாம் மனிதர்களே இல்லை...
ReplyDeleteவார்த்தைகள் வராத கொடூரம் இது
ReplyDelete