வணக்கம்.
என்னுடைய குரு பேராசிரியர் கு.வெ.பாலசுப்பிரமணியன். இதுவரை 64 நுர்ல்களை எழுதியுள்ளார். ஒவவொரு புத்தகம் ஒவ்வொரு தளத்தில் இயங்குபவை.
இவரைப் பற்றி ஏற்கெனவே ஒரு பதிவு நெடுநாட்களுக்கு முன்பு எழுதியிருக்கிறேன்.
இந்தப் பதிவு இவருடைய ஒரு நுர்ல் பற்றி.
நுர்லின் பெயர் ஊசிக்கதைகளும் சில உண்மை நிகழ்வுகளும்.
எத்தனையோ சிறுகதைத் தொகுப்புகள் வந்திருக்கின்றன. என்றாலும் இச்சிறுகதை தொகுப்பு மாறுபட்டது.
காலங்காலமாக நமக்குச் சொல்ப்பட்டு வந்த நீதிக்கதைகள் பல தந்திரங்களை உள்ளடக்கியவை. இவற்றை தன்னுடைய அனுபவத்தில் வேறாகப் பார்த்துப் புதிய சிந்தனையை உண்டாக்குகிறார் பேராசிரியர் அவர்கள்.
இதற்கு இன்றையக்கான அவசியம் நேர்ந்திருக்கிறது.
இன்றைய சமுகத்தை மாசுபடுத்துபவர்களை ஒரு சிறிய
ஊசியாலாவது
குத்திப் பார்க்கவேண்டுமென்ற துடிப்பு
எனக்கிருந்தது. பெருமைப்படத்தக்க சில உண்மை நிகழ்வு
களை எடுத்துச்
சொல்லி இவற்றில் உள்ளதுபோல வாழ்ந்து
பாருங்களேன் என்று
இளைஞர்களைத் துர்ண்டும் நோக்கம்
எனக்கிருந்தது.
இவற்றின் விளைவே இந்த நுர்லாகும்.
என்கிறார். ஆனால் உண்மை மிகக் கசப்பானது. எப்படியென்றால் இன்றைக்கு தேவை
ஊசிகளல்ல கடப்பாரைகள். லட்சக்கணக்கில் கடப்பாரைகள் தேவை. ஆனால் கடப்பாரைகள்தான்
முறிந்துபோகும் செயலற்று. இப்படியெண்ணி மறநதுபோகலாம். இங்கு குவெபா அவர்கள்
ஊசியால் குத்துவது என்பது உண்மையின் ஊசியால் மனத்தில் தைப்பது என்கிறபொருளாகும்.
.........................நீதிக் கருவூலங்கள் இன்று பூட்டுத் திறக்கப்படாமல்
இரும்புப்
பெட்டிக்குள் சிறைப்படுத்தப்பட்டுவிட்டன. அந்த வாழும்
மறைகள் வாழ்க்கை
மறைகளாகவில்லை. அந்த நீதிகளை எளிமை
யாக என் அனுபவக்
கல்வியில் பெற்ற பயிற்சியோடு சேர்த்து இந்த
நுர்லை உருவாக்கி
உங்கள் முன் அளிக்கின்றேன். இளைஞர்களின்
வாழ்க்கையில் இந்த
நுர்ல் ஒரு புதிய மாற்றத்தை உண்டாக்கும்
என்பது என்
உறுதியான நம்பிக்கை. வெறுங்கதை சொல்லிச் சிரிக்க
வைத்துப்
படிப்போர் பொழுதை வீணடிக்க நான் விரும்பவில்லை.
விழலுக்கு
நீர்பாய்ச்சுவதால் பயன் ஏது? விளைவயல்களாக இருக்க
வேண்டிய இளைஞர்
உலகில் களைகள் மண்டிக் கொண்டிருக்கின்றன.
பொழுதுபோக்கே
வாழ்க்கை நோக்கம் எனப் பூரித்துப் போயிருக்கிறது.
இளைஞர் உலகம்.
அதனைத் திசை திருப்பவே இந்நுர்ல் ஆக்கப்
பட்டுள்ளது.
கதைத்தொகுப்பின் நோக்கம் இது.
இத்தொகுப்பில் 45 கதைகள் உள்ளன. இரு கதைகள் உங்களின் பார்வைக்கு சான்றாக.
ஆற்றில் விழுந்த கோடாரி என்கிற கதை எல்லோரும் அறிந்ததுதான். விறகு வெட்டியின் நேர்மையால் தங்கம், வெள்ளி, இரும்பு எனக் கோடரி கிடைத்தது. இதனைப் பின்வருமாறு மாற்றி யோசித்து நம்மையும் பலமாக சிந்திக்கத் துர்ண்டுகிறார்.
விறகு வெட்டுபவரே ஆற்றில் கோடரி
விழுந்துவிட்டதா? பரிவோடு
கேட்டது தேவதை.
ஆம் அம்மா. அவன்
இயல்பாகக் கூறினான்.
கவலைப்படவேண்டாம்
நான் இந்த ஆற்றில் மூழ்கி உன் கோடரியை
எடுத்துத் தருகிறேன்
என்றது வனதேவதை.
..................நீ
போய்வா.. நான் நீந்தத் தெரிந்தவன்.. நான் கைதவறவிட்ட
கோடரியை நானே
எடுத்துக்கொள்வேன் என்றான் கோடரிக்காரன்.
...........................................
காலகாலமாக இப்படித்தானே கதை சொல்லி
வருகின்றனர். ஆனால் என் கதை வேறு. கோடரி
என்றால் அது விறகு பிளக்கவேண்டும். தங்கத்தால் செய்த கோடரி வீட்டின்
தரித்திரத்தை மாற்றலாம். ஆனால் உழைப்பை மறக்கடிக்கும். அதை
அணிகலனாகச் செய்து அணிந்துகொண்டால், கடினமான உழைப்பைப்
புறக்கணிக்கும். பாதுகாப்பாக வைக்கப் பெரிய இடம் கேட்கும். பிறகு உதவிக்கு
ஆள்கேட்கும். வெள்ளிக்கோடரியை அழகிய தட்டாக்கி உணவு உண்ணலாம். ஆனால் நான்
குடிக்கும் கூழுக்கு அது மிகை. ஆகவே என் உழைப்பு மூலதனத்திற்கு
ஏற்ற துணைக்கருவி இரும்புக் கோடரிதான். அதை ஆற்றில் மூழ்கி நானே
எடுத்துக்கொள்வேன். வேலைசெய்யும் நேரம் உன்னோடு பேசி வீணாகிவிட்டது. உன்
பட்டாடை கசங்காமல் அணிகலன்கள் பறிபோகாமல்
பத்திரமாகப் போய்வா என்றான் விறகுவெட்டி.இன்னொரு கதை
நான் யார் தெரியுமா? என்கிற கதை. இக்கதையில் வரும உரையாடலைப்
பாருங்கள் உங்களுக்கே புரிந்துவிடும்.
திரு கந்தசாமி
அவர்களே உங்கள் சிறப்புத்தகுதி?
ஐயா, நான் கலியுகக் கலைக்காவலர் என்ற சிறப்புப்
பெயரைப் பெற்றவன்.
அப்பாடா, கவலை இல்லை.
இந்த யுகமுழுவதும் நீங்கள்
கலைகளைக் காப்பாற்றி
விடுவீர்கள். அது சரி இந்தப் பட்டத்தை
உங்களுக்கு யார்
கொடுத்தார்கள்.
கள்ளிக்காரன் புதுக்குடி மழலையர் பள்ளித்
தொடக்க
விழாவின்போது அதன்
தாளாளர் மாட்டுத்தரகர் மாடசாமி
கொடுத்தது.
மிகச் சிறப்பு கந்தசாமி அடுத்து சண்முகவேலன்
அவர்களே
உங்கள் சிறப்புப்
பெயர்?
சாதிக்
கழக்கறுத்த சண்டமாருதம் சண்முகவேலன் என்பார்கள்
என்னை.
உங்களுக்கு
இந்தப் பட்டத்தைத் தந்தவர்?
கொண்டையாம்பட்டி கோபாலகிருஷ்ணக் கோனாலும்
ஐயன்வாடி
சுந்தரசாமித் தேவரும்
ஐயா.
மிக நன்று பாராட்டுகள் அடுத்து நீங்கள்.
புரட்சி
எழுத்துப் புயல்வேகச் சிந்தனை வேந்தன் பொழிலன்.
உங்களுக்கு
இந்தப் பட்டத்தை வழங்கியவர்
.
.
மனவளர்ச்சியற்ற
மக்கள் மன்றத்தார்.
எதற்காகக்
கொடுத்தார்கள்?
அவர்கள்
மன்றத்திற்கு ஆயிரம் ரூபாய் நன்கொடை கொடுத்தேன்.
அதற்கு ஒரு
மரியாதையாக.
மிக நன்று
நர்மதா உங்கள் தகுதி.
நாட்டியக்கலை
அரசி அபிநயக் கூடாரம் அங்கலாவண்யள அழகு சித்திரம் என்பது
நான் பெற்ற பட்டம்.
இவற்றை
வழங்கியவர்.
என்
பாட்டி பிறவி நாட்டியக் கலாராணி பிரேமலதா அவர்கள்.
அவர்கள் அவ்வளவு
சிறப்பாக ஆடுவார்களா?
அவர்கள் நடப்பதே
நாட்டியம் போல இருக்கும்.
ஏன்?
பிறவியிலேயே அவர்களுக்கு ஒரு கால் ஊனம்.
இதுபோன்று ஒவ்வொரு கதைகளும் ஒவ்வொரு ஊசியாய் தைக்கின்றன. நியாமுள்ளவர்கள்
தர்மவான்கள் என்பதுபோல இது சரியான தளத்திற்குச் சென்றால் உரிய நியாயத்தின்
முத்திரையாகப் பதியும்.
அவசியம் படிக்கவேண்டிய தொகுப்பு இது.
புத்தக விவரம் . அனுராதா பப்ளிகேஷன்ஸ்
விடையல் கருப்பூர், கும்பகோணம். 612 605.
பேச. 04366-262237, 263237
சிறப்பான நூல் அறிமுகத்திற்கு நன்றி ஐயா...
ReplyDeleteஅவசியம் வாங்கிப் படிக்கின்றேன் ஐயா
ReplyDeleteநன்றி
தாங்கள் வழங்கிய இரு பகுதிகளும்
ReplyDeleteசிந்தனைக்கு விருந்தாக இருந்தன.
வணக்கம்
ReplyDeleteஐயா
புத்தகம் பற்றிய அறிமுகத்தை பார்த்த வேளையில் படிக்க துாண்டுகிறது... பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-