ஔவையின் நல்வழியிலிருந்து ஒரு பாடல்.
கல்லானே ஆனாலும் கைப்பொருள் ஒன்று உண்டாயின்
எல்லாரும் சென்றுஅங்கு எதிர்கொள்வர் - இல்லானை
இல்லாளும் வேண்டாள்மற்று ஈன்றுஎடுத்த தாய்வேண்டாள்
செல்லாது அவன்வாயின் சொல்.
எல்லாரும் சென்றுஅங்கு எதிர்கொள்வர் - இல்லானை
இல்லாளும் வேண்டாள்மற்று ஈன்றுஎடுத்த தாய்வேண்டாள்
செல்லாது அவன்வாயின் சொல்.
பாடலின் பொருள்
படிக்காதவனாக இருந்தாலும் அவனிடத்தில் காசு இருந்தால் எல்லாரும் சென்று அவனை எதிர்கொள்வர். கொண்டாடுவர். காசில்லாதவன் என்னதான் படித்திருந்தாலும் அவனை மனைவியும் வெறுப்பாள், ஈன்ற தாயும் வேண்டாது மறுப்பாள் ஒருபோதும் செல்லாது அவன் வாய் சொல். செல்லாச் சொல்.
பாடலின் பொருளை எளிதில் புரிந்துகொள்ள சற்று விரிவாக்கி எழுதியிருக்கிறேன்.
என்றைக்குப் பாடிய பாடல் இது. இலக்கியம், மனிதநேயம், படைப்புக்கள், குழுக்கள், லட்சியம், சாதனை, நேர்மை...மனசாட்சி... ஒழுக்கம்.. போடுங்கள் குப்பையில் என்று சொல்லலாமா?
எக்காலத்திற்கும் பொருத்தமானப் பாடல்
ReplyDeleteஏதோ ஆதங்கத்தில் தாங்கள்
இறுதியாகப் பதிவு செய்த கருத்து
எல்லோருக்கும் உண்டு
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
சிறப்பான பாடல் ஐயா...
ReplyDeleteசிறப்பான பாடல். பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteநிதர்சனம்!..
ReplyDelete