Saturday, August 15, 2015

கொத்துச் சிரிப்போடு,,,



              இன்று கல்கியில் வெளிவந்துள்ள என் கவிதை


                                                      அம்மாவின்
                                                      கைப்பிடிகளை அகற்றி
                                                      மேலே விழுந்த
                                                      நீர்ப்போர்வையுடன்
                                                     வெற்றுடலோடும்
                                                      கொத்துச் சிரிப்போடும்

வீட்டின் மையத்தில் வந்து
நின்று உடலுலுக்கும்
தருணத்தில் மத்தாப்புகளாய்
சிதறிவிழும் நீர்த்துளிகளுடன்
ஆனந்தத் தாண்டவம்
நடத்தும் குழந்தை



உங்கள் வீட்டிலிருந்தால்
நீங்கள் வாழ்ந்து
கொண்டிருப்பதாய்ப் பொருள்...

(நன்றி. கல்கி. 23 ஆகஸ்ட் 2015)
         

10 comments:

  1. அருமை ஐயா... வாழ்த்துகள்...

    ReplyDelete
  2. சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. கவிதையின் கருப்பொருள் இதுவானால் -

    வீட்டின் மையங்கள் மௌனமாகவே கிடக்கின்றன..

    ReplyDelete
  4. அன்புள்ள தனபாலன்...
    வணக்கம். அக்டோபர்த் திங்களில் நடைபெறும் வலைப்பதிவர்கள் சந்திப்பிற்கு அவசியம் வருகிறேன். நன்றி. வணக்கம்.

    ReplyDelete
  5. குழந்தை ...

    அது வீட்டையே அழகாக்கிவிடுகிறது!

    ReplyDelete
  6. குழந்தைக்கு பதிலாய் இப்போது எங்க வீட்டில் உங்க கவிதை!

    ReplyDelete
  7. உங்கள் வலைத்தளம் பற்றிய சில விவரங்களை உடனே அனுப்புமாறு அன்புடனும் தாழ்மையுடனும் கேட்டுக்கொள்கிறோம். இது வலைப்பதிவர் விழா! வலைப்பதிவர்களே திரண்டு வாருங்கள்!
    http://thaenmaduratamil.blogspot.com/2015/09/Tamil-bloggers-list-2015-handbook.html

    ReplyDelete
  8. அன்புள்ள சகோதரிக்கு

    வணக்கம். தாமதமாக உங்கள் கடிதத்தைக் கண்டதற்கு மன்னிக்கவும். ஏற்கெனவே நான் அனுப்பிவிட்டேன் திருமிகு முத்துநிலவன் ஐயா அவர்களுக்கு. தங்களின் அன்பிற்கு நன்றிகள்.

    ReplyDelete