மாண்பமை பேராசிரியர் அவர்.
நேர்மை, ஒழுக்கம், சத்தியம் இவற்றோடு எப்போதும் எழுதிக் கொண்டேயிருப்பவர்.
70 நூல்களை எழுதியிருக்கிறார். ஒவ்வொன்றும் ஒரு வைரம். சிந்தனையும் புதுமையும் செழிப்பும் தரமும் ஒன்றையொன்று விஞ்சும் எழுத்துக்கள்.
அவரைச் சந்திக்கச் சென்றிருந்தேன்.
அது காலைப்பொழுது.. சிற்றுண்டி நேரம். சென்றதும் அமரச் சொல்லிவிட்டுக் கேட்டார் சாப்பிட்டீர்களா?
சாப்பிட்டேன் ஐயா என்றேன்.
இருங்கள் இந்தப் புத்தகத்தை வாசியுங்கள் நான் சாப்பிட்டுவிட்டு வந்துவிடுகிறேன் என்று உள்ளே போனார். அடுத்த ஐந்து நிமிடத்தில் திரும்பி வந்துவிட்டார்.
சாப்பிட்டீர்களா ஐயா என்றேன்.
ஆமாம். இட்லி சூடாக இருந்தது. நான்கு இட்லிகள் சாப்பிட்டேன் என்றார்.
போதுமா ஐயா என்றேன்.
போதும். நான் அதிகம் சாப்பிடுவதில்லை. பசிக்கு சாப்பிடுபவன் என்றார்.
24 மணிநேரமும் தின்பதற்கு இருந்தும் அவர் எழுதிக்கொண்டிருக்கிறார். அவரின் தமிழ்த்தொண்டு அளப்பரியது. பணி ஓய்வும்.. நிறைய பணமும்.. நல்ல பிள்ளைகளும் இருந்தும் அவர் தன் தமிழ்த் தொண்டை நிறுத்தவில்லை.
என் தந்தை அடிக்கடி சொல்வார்.
பசிக்குத்தான் சாப்பிடவேண்டும். பசித்தவன்தான் விழித்திருப்பான். குறைவான உணவு உண்பவன்தான் நிறைய சாதிப்பான். உணவின் மீது அதிகக் கவனம் வைப்பவன் ஒருபோதும் சாதிப்பதில்லை.
எனக்குத் தெரிந்து ஒரு பெண் தன் தாய் அவளுக்கு விதவிதமாக சாப்பாடு கட்டித்தருவதைப் பெருமையாகச் சொல்வாள்.
எப்போதும் வகைவகையாக உணவு உண்பதைத்தான் பேசுவாள். உணவு உண்ணும்போது அதிக நேரம் எடுத்துக்கொள்வாள்.
ஒருசிலர் சாப்பிடுகிற நேரத்தை வீணடிக்கும் வகையில் அடுத்தவர் சாப்பாட்டின் குறைகளைப் பட்டியலிட்டு ஆலோசனைகள் நல்குவார்கள்.
பசி என்பது வயிற்றை நிரப்புவது. இன்னொரு பசி என்பது முழுமையாக அறிவை நிரப்புவது.
பசித்திரு... தனித்திரு.. விழித்திரு.. என விவேகானந்தர்
சொன்னார்..
உணவு மட்டுமே வாழ்க்கையல்ல.. அறிவின் உணர்வு அதைவிடமுக்கியமானது.
குப்பைக்கூடையாய் வயிற்றை உணவு கொண்டு நிரப்புவதைவிட.. அறிவின் கூடையில் முத்துக்களைச் சேகரிப்பது நன்று.
பேராசிரியரிடம் விடைபெற்றுத் திரும்பும்போது அவர் நூலில் எழுதிய வாசகம் எனக்கு நினைவுக்கு வந்தது.
உடம்பு மயானத்திற்கு விளக்கேற்றுகிறது. நாம் உயிரோடு இருக்கும்போது எத்தனையோ ஒளி விளக்குகளை இந்த உலகில் ஏற்ற வேண்டும்.
>>> உணவு மட்டுமே வாழ்க்கையல்ல.. அறிவின் உணர்வு அதைவிட முக்கியமானது.<<<
ReplyDeleteவைர வரிகள்..
செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
ReplyDeleteஅவியினும் வாழினும் என் (420)
அறிவின் கூடையில் முத்துக்களைச் சேகரிப்பது நன்று.///ஞான ஒளி ஏற்றிய விளக்கு..
ReplyDeleteஅருமையான வார்த்தைகள்! சிறப்பான பதிவு! நன்றி!
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஐயா
அற்புதமான வார்த்தைகள்... படித்து மகிழ்நதேன் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
"உடம்பு மயானத்திற்கு விளக்கேற்றுகிறது. நாம் உயிரோடு இருக்கும்போது எத்தனையோ ஒளி விளக்குகளை இந்த உலகில் ஏற்ற வேண்டும்..." - எவ்வளவு அர்த்தமும் அழகும் பொருந்திய வரிகள்! - இராய செல்லப்பா
ReplyDeleteபசிக்கு சாப்பிட வேண்டுமே தவிர ருசிக்கு அல்ல....
ReplyDeleteகருத்துள்ள பதிவு.