Friday, February 26, 2016



என்னுடைய கைபேசிக்கு ஒரு தகவல் 
வந்தது.

அனுப்பியது என்னுடைய தோழர் இளவல் ஜான் சங்கீதராஜ் 
இவர் ஒரு ஆங்கிலப்  பேராசிரியர் 

தகவல் அனுப்பிய நேரம் இரவு 8 மணி.

அனுப்பிய தகவல் 


 மிகுந்த பசியோடு வீட்டிற்குச் சென்றேன் 
சாப்பிடும்போது ஆம்லெட்டில் 
அதிக உப்பு
மகிழ்ச்சி அடைந்தேன் 

 தகவல் இதுதான் 

இதல் என்ன இருக்கிறது?

மறுபடியும் அவரிடம் பேச முனைந்தேன் 

அவரிடமிருந்து மறுபடியும் 
ஒரு தகவல் 


என் தாயின் மறைவிற்குப் 
பிறகு தந்தை செய்து 
கொடுத்த முதல் 
ஆம்லெட் ..



மனது கசிந்தேன் 

000000


இன்று 
கரந்தை தமிழ்ச் சங்கத்தில் 
தமிழவேள் உமா மகேசுவரனார் 
அவர்களை பற்றி 
அரிய தகவல்கள்கள் பொதிந்த 
ஒரு அருமையான நூல் 
வெளியிடப்பட்டது .

உலகத்  தமிழ் மாநாடு நடததவேண்டும் 
தமிழ்த்தாய் வாழ்த்திற்குக் காரணமானவர் 
அண்ணாமலைப்  பல்கலைக் கழகம் 
தொடங்கக் காரணமானவர் 

இப்படிப் பல தகவல்கள்.

நூலினை அரும்பாடுப்பட்டு 
உருவாக்கியவர்கள் 

கரந்தை ஜெயக்குமார் 
தலைமையாசிரியர் சரவணன் 

இருவருக்கும் 
 நெஞ்சம் நிறை வாழ்த்துக்கள் 

நீங்களும் வாழ்த்தலாம்.

9443476716 ஜெயக்குமார் 
 
000

தற்போது வெளிவந்துள்ள 
என் நூல் 

பக்தி அகராதி 

300 சொற்கள் கொண்டு உருவாக்கப்பட்டது.

தொடர்ந்து முழுமையான அகராதி 

வெளிவரும் 

3000 சொற்கள் அடங்கியது அது. 

000

மேலும் பல்வகைப் பொருண்மைகளில்  

5 நூல்கள்  எழுதி முடித்து அச்சில் உள்ளன 

இவ்வாண்டு கணிசமான பதிவுகள் பதிவிட உறுதி 
கொண்டுள்ளேன்.

வேண்டுவது 
உங்கள் அன்பும் வாழ்த்தும்.

நன்றிகள்.

0000





5 comments:

  1. நல்ல தகவல்கள்.. கரந்தையாருக்கும் நண்பருக்கும் வாழ்த்துகள்... உங்கள் நூலும் விரைவில் வெளிவர வேண்டுகிறேன் ...

    ReplyDelete
  2. மிக்க நன்றி ஐயா
    என்றும் வேண்டும் இந்த அன்பு

    ReplyDelete
  3. மிகவும் எதிர்பார்க்கிறேன் ஐயா...

    ReplyDelete
  4. அருமையான தகவல்கள்! நன்றி!

    ReplyDelete
  5. வணக்கம்
    ஐயா

    தகவலுக்கு நன்றி தங்களின் பதிவுகளை எதிர்பார்க்கிறோம்.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete