சருகு
இறகு
இரண்டும்
உதிர்வுகள்
ஒன்று மரத்தின்
வரலாற்றை
இன்னொன்று
பறவையின் வரலாற்றை
ஒன்றில் பூமி
இன்னொன்றில் வானம்
இரண்டும்
வாழ்வின் உண்மையை
வானமும் பூமியும்
என்றும் நிலையானது
மற்றவை யாவும்
சருகு அல்லது
இறகு
000
அருமை அருமை
ReplyDeleteஅதிகம் சிந்தச் செய்து போகுது
தங்கள் அற்புதமான கவிதை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
எளிய வரிகளில் எத்துனை பெரிய உண்மை
ReplyDeleteநன்றி ஐயா
நினைத்ததைக் கூறாவிட்டாலும் எண்ணங்கள் சருகாகி உலர்ந்து போகுமோ?
ReplyDeleteநல்ல சிந்தனை ...
ReplyDeleteமரத்தின் சிறகாய் சருகும், பறவையின் சருகாய் சிறகும் தோன்றுதே! அழகான கவிதை
ReplyDeleteஅருமையான வரிகள்
ReplyDeleteஎளிமையான வரிகள்....