Friday, March 4, 2016

துக்க 
வீட்டில் 

இருக்கும்போது 
இறந்துபோனவரைப் 
பார்க்கும்போது 

தூங்குவதுபோல 
இருக்கிறார் என்று 
சொல்வது வழக்கம் 

ஆனால் 
உண்மை வேறானது 

சாகும்வரை நான்தான் 
எல்லாமும் என்று 
நினைத்தாடிய 
தருணத்தில் அதை 
இழந்துவிட்டவர்களைப் 

பார்க்கும்போது 

உணரமுடிகிறது.

000



6 comments:

  1. நான் இறந்தேன் என
    நலிந்து போகாதே.
    நான் விதைத்த விதைகள்
    நாலு திசைகளிலும் பரவி இருப்பதைப் பார்.
    நிச்சயம் அவை
    நீறு பூத்த நெருப்பென
    நெஞ்சை நிமிர்த்து மேல் எழும்

    எனவும்
    என்னிடம் சில
    சொன்னன.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  2. உயிர்த்திருக்கும்போது அவர் நினைத்தது செய்தது எல்லாமே சரி என்று நினைத்தவரைப் பார்க்கும் போது பாவம் என்றும் இருக்கும் ஐயா நான் உரத்த சிந்தனைகள் என்னும் தலைப்பில் இரு பதிவுகள் எழுதி வெளியிட்டுள்ளேன் நீங்கள் வந்த வாசித்து உங்கள் கருத்துக்களையும் வெளியிட்டால் மகிழ்ச்சியாய் இருக்கும்

    ReplyDelete
  3. மிக இறுக்கமான நிஜம்!

    ReplyDelete